குமரிமாவட்டம்,மறவன்குடியிருப்பில் வாழ்ந்துவருபவர் சேவியர் ராஜா.டிப்ளமோ இன் மெக்கானிக்கல் முடித்துள்ள இவருக்கு,படிக்கும்போதே ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என்ற வேட்கை இருந்தது.தற்போது இவர் தமிழ்நாடு அரசு கல்வித்துறையில் கிளார்க்காக பணிபுரிந்துவருகிறார்.தனது படைப்புத்திறனை மேம்படுத்துவதற்காக சர்வதேச விஞ்ஞான இதழ்களை வாங்கிப்படித்துக்கொண்டே இருப்பார்.அதன்படி,தனது விஞ்ஞான அறிவை விருத்திசெய்து கொண்டே இருப்பதுடன்,ஏராளமான ஆராய்ச்சிகளும் செய்துவருகிறார்.
தற்போது Frequency Trace Mover என்ற கருவியைக் கண்டறிந்துள்ளார்.சர்வதேச தொலைத்தொடர்புகள் அனைத்தையும் நொடிப்பொழுதில் முடக்கிப்போட்டுவிட முடியும் எனக்கூறும் இவரது கண்டுபிடிப்புக்கு நமது இந்திய அரசு உரிய அங்கீகாரம் தராமல் இழுத்தடிப்பது வேதனையான விஷயம்.
இது தொடர்பாக சேவியர்ராஜா கூறுகிறார்:
“வேலைக்குப்போய்கிட்டே, ஓய்வு நேரங்களில் வீட்டில் உட்கார்ந்து ஏதாவது புதுசா ஆராய்ச்சி செஞ்சு கட்டுரைகள் எழுதிக்கிட்டே இருப்பேன்.நான் எழுதுன ஆய்வுக்கட்டுரைகளை சர்வதேச அளவில் அறிவியலாராய்ச்சிகள் சம்பந்தமான ‘சயின் டிபிக் அமெரிக்கன்’ என்ற ஜர்னலுக்கு அனுப்பினேன்.முதன்முதலா என்னுடைய கட்டுரை அதில் பிரசுரமானப்ப ரொம்ப சந்தோஷமா இருந்திச்சி.அந்த உந்து சக்தியால தொடர்ந்து ஆய்வுகளைச் செஞ்சேன்.என்னிடம் ஏழு விதமானபுதிய கண்டுபிடிப்புகள் இருந்திச்சு.2003 இல் அப்போதைய மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை சந்திச்சு என்னுடைய கண்டுபிடிப்புகளைப் பற்றி பேசினேன்.ஆச்சரியப்பட்ட அவர்,அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சரான ஜார்ஜ்பெர்ணாண்டசை சந்திக்க ஏற்பாடு செஞ்சார்.அவ்ர்,இந்திய அரசின்பாதுகாப்பு ஆராய்ச்சிப்பிரிவுக்கு என்னோட ஆராய்ச்சிகளை அனுப்பிவைச்சு என்னோட கண்டுபிடிப்புக்கு உரிய அங்கீகாரம் கொடுத்து அவார்டும்கொடுக்கச் சொல்லி பரிந்துரைத்தார். . .”நினைவுகளில் அலைக்கழிப்பில் துவண்டு போன சேவியர் ராஜா தனது பேச்சைத் தொடர்ந்தார்.
“பாதுகாப்புத்துறை அதிகாரிகள்,ஆட்டோமேட்டிக் ஏர்கிராப்ட் சிஸ்டம்,இசட்,எக்ஸ்.புல்லட் உள்ளிட்ட என்னோட ஆறு விதமான கண்டுபிடிப்புகளை, ‘ஏற்கனவேஇது மாதிரியான ஆய்வுகள் எங்களிடம் இருக்கு’னு சொல்லி நிராகரிச்சுட்டு, “ஃப்ரிக்வென்ஸி ட்ரேஸ் மூவர்” ஆய்வை மட்டும் பரிசீலினைக்கு எடுத்துக்கிட்டாங்க.
இந்தக்கருவி மூலமா இங்கிருந்தபடியே உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் சிறிய பகுதியிலும் தொலைத் தொடர்பு சேவையையும் எட்டிப்பிடித்துத் துண்டிக்கலாம்.அரசாங்கத்தின் கையில் மட்டும் இது இருந்தால்,சர்வதேச அளவில் இதற்கான அங்கீகாரமும் பெற்றுவிட்டால்,உலகத்தின் எந்தவொரு தவறான தகவல்தொடர்புசேவையையும் முடக்கிப்போடலாம்.
கார்கில்போர்மாதிரியான சமயங்களில் இதன் பயன்பட்டால் எதிரிராணுவத்தின் அனைத்து தகவல் நெட்வொர்க்குகளையும் செயலிழக்கச்செய்யமுடியும்.
நன்றி:ஜீனியர் விகடன் பக்கம் 12 13,23.8.2009
ஆன்மீகக்கடல் வாசகர்களே!
இதுபோல,சுயம்பாகச் செயல்பட்டு கண்டுபிடிக்கும் ஏராளமான கண்டுபிடிப்பாளர்கள் நம்நாடுமுழுக்க இன்றும் இருக்கிறார்கள்.இவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் தவிக்கிறார்கள்.எனக்குத் தெரிந்து விருதுநகர் மாவட்டத்தில் ஒருவர் புவியீர்ப்புவிசை மூலமாக மின்சக்தியை எடுக்கும் முறையைக் கண்டறிந்துள்ளார்.இன்னொருவர்,குறைந்த செலவில் மோட்டார் ரீவைண்டிங்கில் ஒரு புதிய கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்துள்ளார்.சென்னையில் ஒரு வயிற்றுப்போக்கை ஒரே நிமிடத்தில் குணப்படுத்தும் முறையைக் கண்டுபிடித்துள்ளார்.மூலிகை பெட்ரோல் என்ன ஆனதென்றே தெரியவில்லை.
இதுவே அமெரிக்காவாக இருந்தால் இவர்கள் ஒவ்வொருவரும் சில வருடங்களிலேயே கோடிகளைச் சம்பாதித்திருப்பார்கள்.அந்த மனப்பான்மை,புதிய கண்டுபிடிப்புகளுக்கு உரிய அங்கீகாரம்தரும் மனப்பான்மை நமக்கு எப்போதுதான் வருமோ?
இதற்கென்றே(முறைப்படி படிக்காமல் ஆனால் புதியக் கண்டுபிடிப்பு கண்டறிந்தால் அதற்கு உரிய அங்கீகாரமும் அதை வணிகநோக்கத்துக்கும்,பொதுப்புழக்கத்துக்கும் கொண்டுவருவதற்கு என ஒரு அமைப்பு நம்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.)அதுதான் நேஷனல் இன்னோவேஷன் நெட்வொர்க் .இது தேசிய அளவில் அகமாதாபாத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.இதன் இணையதளமுகவரி:www.nif.org.in
No comments:
Post a Comment