Saturday, April 21, 2012

சுதேசி கேள்வி பதில்:ஜீலை 2011


கேள்வி:டெல்லி சென்ற ஜெயலலிதா,சிதம்பரம்  எம்.பி.தேர்தலில்  ‘ஏமாற்றி ஜெயித்தவர்’ என பத்திரிகையாளர் மத்தியில் பேசி,பரபரப்பை ஏற்படுத்திவிட்டாரே!

பதில்: நல்ல காரியம் செய்தார் ஜெயலலிதா.அவருக்கு சிறப்பு பாராட்டுக்கள்.தமிழகத்தைத் தாண்டி பலருக்கும் சிதம்பரம் எப்படி வெற்றி பெற்றார் என்பது தெரியாது.இதில் பல்வேறு டெல்லி பத்திரிகையாளர்களும்,அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் அடக்கம்.அந்த அளவுக்கு தன் செய்தியை ‘தன்னடக்கமாக’ மறைத்துக்கொண்டவர் சிதம்பரம்.இப்போது குட்டு வெளிப்பட்டவுடன் துடிக்கிறார்.டெல்லியில் உள்ள உட்கட்சி சிதம்பரம் எதிர்ப்பாளர்களுக்கு இது ஒரு நல்ல டானிக்.

கேள்வி:நக்ஸல் உதவிக்காக ஆயுள்தண்டனை பெற்று ஜாமீனில் இருக்கும் டாக்டர் வினாயக் சென்னை திட்டக் கமிஷன் சென்னை திட்டக்கமிஷன் சுகாதாரக்குழு உறுப்பினராக மத்திய அரசு நியமித்துள்ளதே!

பதில்:மன்மோகனும் சிதம்பரமும் முதலாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் அளவுக்கு தீவிர நக்ஸல் எதிர்ப்பாளர்கள்.ராகுலுக்கு ஒரிஸாவில் டிரைபல் நட்பு.ம.பி.யில் அருகில் இருக்கும் சத்தீஸ்கரில் திக்விஜய்சிங்கின் நட்பு,நக்ஸலுக்கும் மிஷனரிகளுக்கும் உள்ள இணக்கம்,சற்றே சிந்திக்கவும்.சுரணையற்ற அமைச்சர்கள் அவர்களின் முதலாளிகள் சுரண்டலே கதி என்பவர்கள்.

கேள்வி:அண்ணா ஹசாரே,ராம்தேவ் போராட்டங்கள் ‘ஜனநாயக விரோதமானவை’ என்று கபில்சிபில்,பிரணாப் முகர்ஜி கூறுகின்றனரே!

பதில்:ஆம்.வெடி வைத்து அப்பாவிகளைக் கொல்லும் நக்ஸல்கள் ஜனநாயகவாதிகள் என்பதால் அவரது ஆதரவாளருக்கு திட்டக்கமிஷன் பதவி.அப்சலுக்கும் கசாப்பிற்கும் பிரியாணி.ஜனநாயக விரோத ராம்தேவ் கூட்டத்திற்கு தடியடி;கண்ணீர்ப்புகை.ஆகஸ்டு 16 இல் அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தால் ராம்தேவிற்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும் என திக்விஜய்சிங்கின் மிரட்டல்.எமர்ஜென்சியை திணித்த காங்கிரஸ்தான் ஜனநாயகக் காவலர்கள்.

No comments:

Post a Comment