ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரியன்று குபேரபகவான் வானுலகிலிருந்து மண்ணுலகிற்கு வருகிறார்.அவர் திருஅண்ணாமலையில் அமைந்திருக்கும் குபேரலிங்கத்திற்கு வருகிறார்.அப்படி வருகைதந்து அன்றைய தினப்பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலும் தான் பிரதிஷ்டை செய்த குபேரலிங்கத்திற்குப் பூஜை செய்கிறார்.
மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் குபேரலிங்கத்தின் பூஜை முடிந்தப்பின்னர்,குபேரலிங்கத்திலிருந்து கிரிவலம் புறப்படுகிறார்.அப்படி கிரிவலம் சென்று,கிரிவலப்பயணத்தை முடித்துவிட்டு,அன்றிரவு திருஅண்ணாமலை கோவிலில் தங்குகிறார்.மறுநாள் காலை திருஅண்ணாமலையிலிருந்து திருப்பதிக்குப் பயணிக்கிறார்.
இந்த தெய்வீக சம்பவம் பல நூற்றாண்டுகளாக மகான்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருந்தது.2007 ஆம் ஆண்டில் இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு வெளிப்படுத்தியவர் பிரபல ஜோதிடர்,தபால் வழி ஜோதிடப்பயிற்சிப்பள்ளி நடத்திவரும் எனது மானசீக ஜோதிட குரு டாக்டர் பி.எஸ்.பி.ஐயா அவர்கள்.
நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
நமது ஊரில் பிராண்டு அல்லாத நெய் நூறு கிராம் வீதம் பத்துபாக்கெட்டுகளை வாங்கிக் கொள்வோம்;(கிரிவலப்பாதையில் இருக்கும் எட்டு லிங்கங்களுக்கு தலா ஒரு நூறு கிராம் நெய் பாக்கெட்டுக்களை தானமாக தருவோம்;இது மிகவும்புண்ணியமான காரியம் ஆகும்)
இந்த வருடம் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரியானது 23.11.2011 புதன்கிழமை வருகிறது.அன்று மாலை சரியாக 4 மணிக்கு குபேரலிங்கத்தை வந்தடைவோம்;மாலை 6 மணி வரை குபேரலிங்கத்திடம் நமது நியாயமான கோரிக்கைகளை வேண்டுவோம்;மாலை 6.30 மணிக்கு அங்கிருந்து கிரிவலம் புறப்படுவோம்.இதன்மூலமாக,அண்ணாமலையாரின் ஆசியும்,சித்தர்களின் அருளும்,குபேர சம்பத்தும் நமக்கு நிச்சயமாகக் கிடைக்கும்.
இந்த நாளில்,நாம் வெறும் மஞ்சள்பட்டு ஆடை அணிந்து,தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டி அல்லது சேலை அணிந்து வருவோம்;இரு கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சம் இருக்கட்டும்;நமது உச்சந்தலையில் ஒரு வில்வ இலையை வைத்து,அதை பெரிய ரப்பர் பேண்டால்,இறுக்கிக் கொள்வோம்;
கிரிவலம் செல்லும்போது எவரிடமும் பேசாமல்,மனதுக்குள் ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறு செல்லுவோம்;அண்ணாமலையாரின் ஆசியும்,குபேர சம்பத்தும் பெறுவோம்.
ஆன்மீகக்கடல் வாசகர்கள் அனைவரையும் குபேரகிரிவலத்துக்கு அன்புடன் அழைக்கிறேன்.
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment