கர வருடத்தின் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியானது,பங்குனி 2 ஆம் நாள்(15.3.12 வியாழன்) அன்று வருகிறது.இந்த நாளில் ராகு காலம் மதியம் 1.30 முதல் 3 மணி வரை அமைந்திருக்கிறது.
மனிதர்களுக்கு செல்வச் செழிப்பை மஹா விஷ்ணுவின் உத்தரவுப்படி தருவது அஷ்டலட்சுமிகள் ஆவர்.இப்படி செல்வச் செழிப்பைத் தருவதால்,இவர்களின் சக்தி குறைந்துகொண்டே வரும்;எனவே, இவர்கள் தமது சக்தியை அதிகரிக்க,ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமியன்று ராகு காலத்தில் செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியாகிய ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுவார்கள்.இதே நேரத்தில் நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை அவரது சன்னிதியில் வழிபாடு செய்தால்,ஒரே நேரத்தில் நமது கர்ம வினைகள் குறையும்;அதே சமயத்தில் நமது செல்வ வளம் அதிகரிக்கும்;
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் சன்னிதிகள் இருக்கின்றன.அவைகள் வருமாறு:சென்னை அருகில் உள்ள படப்பையில் இருக்கும் ஸ்ரீஜெயதுர்கா பீடம்.(தாம்பரம் டூ வேலூர் செல்லும் சாலையில்,படப்பையிலிருந்து 3 கி.மீ.தூரத்தில்)
சென்னையின் ஒரு பகுதியான வானகரம் என்னும் இடத்தில் இருக்கிறார்.
சிதம்பரத்தில் அஷ்ட பைரவர்களில் ஒருவராக ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.
காஞ்சிபுரம் அருகில் இருக்கும் அழிபடைதாங்கியில்.
திருஅண்ணாமலையில் இருந்து காஞ்சி(காஞ்சிபுரம் அல்ல) செல்லும் வழியில் பெரியகுளம் என்னும் ஊரில்(அண்ணாமலையில் இருந்து 11 கி.மீ.தூரத்தில்=அடி அண்ணாமலையைக் கடந்ததும் பிரியும் சாலையில் இருந்து 9 கி.மீ.தூரம்)காகா ஆஸ்ரமம் இருக்கிறது.இந்த காகா ஆஸ்ரமத்தினை கொல்லிமலை சித்தர்,ஸ்ரீகாகபுஜண்டர் தருமலிங்க சுவாமிகள் 3.9.2010 அன்று நிறுவியிருக்கிறார்.இங்கே காகாஸ்ரமம் ஸ்ரீ ஸ்வர்ண கால பைரவர் என்ற பெயரில் ஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளியிருக்கிறார்.இந்த பைரவர்,சித்தர் வழிபாட்டுமுறைப்படி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதால்,இவர் மிகுந்த சக்தி வாய்ந்தவராக இருக்கிறார்.
திருச்சி மலைக்கோட்டைக்கு அருகில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் ஒன்று இருக்கிறது.
திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் 45வது கி.மீ.தூரத்தில் தபசுமலை அமைந்திருக்கிறது.இங்கே ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மலை மீது எழுந்தருளியுள்ளார்.பல சித்தர்கள் இன்றும் இங்கே சூட்சுமமாக வந்து,வழிபட்டுச் செல்கின்றனர்.
காரைக்குடியிலிருந்து மாத்தூர் செல்லும் வழியில் 3 வது கி.மீ.தூரத்தில் இருக்கும் இலுப்பைக்குடியில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.
பிள்ளையார்பட்டிக்கு அருகில் இருக்கும் வயிரவன் பட்டியில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.கி.பி.700களில் இந்த கோவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியிலிருந்து பழனிக்குச் செல்லும் வழியில் 9 வது கி.மீ.தூரத்தில் ஒரு கோவில் இருக்கிறது.இங்கே ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளியிருக்கிறார்.
திண்டுக்கல் அருகே இருக்கும் தாடிக்கொம்பு என்னும் கிராமத்தில் ஸ்ரீ சவுந்தர ராஜப்பெருமாள் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் காவல் அதிகாரியாக ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.
இந்தக் கோவில்களில் ஏதாவது ஒருகோவிலுக்கு 15.3.12 வியாழக்கிழமையன்று சென்று,மதியம் 1.30 முதல் 3 மணிக்குள் வழிபட,நமது வருமானம் அதிகரிக்கும்;கடுமையான கர்மவினை குறையும்.
ஓம்சிவசிவஓம்
வணக்கம் ... நீங்கள் குறிப்பிட்ட கோயில்களில் வியாழக்கிழமை மதியம் 1.30 to 03.00 மணி வரை கோயில் நடை திறந்திருக்குமா ?
ReplyDeleteketpathargu munbagavae pathil alithamaikku nanri.
ReplyDeleteவிபரமறிந்த பூசாரிகள் மற்றும் கோவில்நிர்வாகிகள் கோவிலை அந்த நேரத்தில் திறந்து வைத்திருப்பார்கள்.ஒருவேளை இந்த நேரத்தில் பூட்டியிருந்தால்,இந்த நேரத்தில் கோவில் வளாகம் அல்லது கோவிலின் அருகில் அமர்ந்து ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரம் ஜபித்தாலே போதுமானது.
ReplyDeleteஅய்யா,
ReplyDeleteஎன்னிடம் ஸ்வர்ண பைரவர் படம் உள்ளது.
தங்கள் ப்ளோகில் வெளியிட்டுள்ள மந்திரங்களை வீட்டிலேயே ஜபிக்கலாம் என்று இருக்கிறேன்.
வீட்டில் பைரவர் படத்திற்கு முன்பு மந்திரத்தை ஜபிக்கலாமா?
ReplyDeleteஐயா,
ReplyDeleteவணக்கம்! முடிந்தால் கோவிலுக்கு செல்ளுங்கள். நல்லது. முடியாவிட்டால் எங்கேயும் ஜெபிக்கலாம். கோவிலைச்சுற்றி ஒரு சக்தி இருக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்வோம்.
பொள்ளாச்சியிலிருந்து பழனிக்குச் செல்லும் வழியில் 9 வது கி.மீ.தூரத்தில் ஒரு கோவில் இருக்கிறது.இங்கே ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளியிருக்கிறார்
ReplyDeleteinnum vivaram thevaai aaiya!!!
Area name
Temple name pls....
Itsvery usefull to all...