Tuesday, March 20, 2012

பங்குனி மாத அமாவாசையைப் பயன்படுத்துவோம்!!!


வைவஸ்த மன்வந்திரம்,கலியுக வருடம் 5112ஆம் ஆண்டு,கர வருடம் வரும் பங்குனி மாதத்து அமாவாசையானது பங்குனி 8 ஆம் நாள்(21.3.12 புதன் இரவு 7.37 முதல்) முதல் 9 ஆம் நாள்(22.3.12 வியாழன் இரவு 8.27 வரை)வரையிலும் அமைந்திருக்கிறது.இந்த வருடம்,பங்குனி மாதத்தில் பூரட்டாதி நட்சத்திரத்தில் அமாவாசை அமைந்திருக்கிறது.


ஆத்மாக்காரனாகிய சூரியனும்,மனக்காரனாகிய சந்திரனும் ஒன்று சேரும் திதியே அமாவாசை ஆகும்.அமாவாசை நாளில் குரு ஹோரையில்(21.3.12 புதன் இரவு 11 மணி முதல் 12 மணி வரை;22.3.12 வியாழன் காலை 6 முதல் 7 மணிவரை;மதியம் 1 முதல் 2 மணி வரை;இரவு 8 முதல் 9 வரை)நாம் ஓம்சிவசிவஓம் ஜபிப்பது நமது ஆத்ம பலத்தை அதிகரிக்கும்.
உங்களுக்கு மேற்கூறிய நேரங்களில் எப்போது ஒய்வு அமையுமோ,அப்போது ஓம்சிவசிவஓம் ஜபிப்பது அவசியமாகும்;


இந்த நேரங்களில் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் அல்லது சதுரகிரியில் அல்லது அண்ணாமலையில் அல்லது பர்வதமலையில் ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் ஓம்சிவசிவஓம் ஜபித்துவர வேண்டும்;இவ்வாறு செய்வதால்,நமது கர்மவினைகள் விரைவாக கரைந்துவிடும்;


பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பூரட்டாதியில் லக்னம் இருக்கப் பிறந்தவர்கள்(மீன லக்னத்தில் பிறந்தவர்கள் உங்களின் ஆஸ்தான ஜோதிடரை அணுகினால்,இதுபற்றி எளிமையாக விளக்குவார்),உங்கள் லக்னம் எதுவாக இருந்தாலும்,உங்களின் லக்னாதிபதி பூரட்டாதி நட்சத்திரத்தில் நின்றால்;இந்த ஜாதக,ஜாதகிகளுக்கு இந்த அமாவாசையன்று ஓம்சிவசிவஓம் ஜபிக்க,அபூர்வமான சிவ அனுபவத்தை உணருவார்கள்.


ஓரு நாளுக்கு ஒரு மணி நேரம்வீதம், 1,00,000 தடவைக்கு மேல் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆறு முதல் ஒன்பது மாதங்கள் ஆகின்றன.1,00,000 தடவைக்கு மேல் விடாமல் ஒரு நாளுக்கு 108 தடவைக்குக் குறையாமல் ஓம்சிவசிவஓம் ஜபித்து வர,நமது வாழ்க்கை வலிமை மிக்கதாக மாறிவிடும்;நாம் என்ன நினைக்கிறோமோ,அது மட்டுமே நமது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நிகழும் என்பது அனுபவ உண்மையாகும்.


ஏமாற்றுதலும்,பித்தலாட்டமும் நிறைந்த இந்த கலியுகத்தில் நம்மைக் கடைத்தேற்றும் மந்திரகாமதேனு ஓம்சிவசிவஓம் மந்திரம் ஆகும்;


இந்த மந்திரத்தை நமக்கு அருளிய ருத்ராட்சத் தெரபிஸ்ட்,ஆன்மீக ஆராய்ச்சியாளர்,சிவகடாட்சம் ,சிவநிறை  மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு கோடி சிவ நன்றிகள்!!!


ஓம்சிவசிவஓம்

2 comments:

  1. ஆத்ம பலம் என்றால் என்ன?
    தயவு செய்து விளக்கம் தரவும்

    ReplyDelete