தமிழ்நாட்டின் வடக்கு எல்லையில் அமைந்திருக்கும் கல்வி நகரம் வேலூர் ஆகும்.இங்கு வேலூர் டூ சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் ,வேலூரிலிருந்து 3 கி.மீ.தூரம் சென்றால் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் வரும்;இந்த நீதிமன்றத்தைக் கடந்து ஒரு கி.மீ.தூரத்தில் ரங்காபுரம் என்னும் கிராமம் அமைந்திருக்கிறது.இந்த கிராமத்தின் வழியாக செங்காநத்தம் என்னும் மலையோர கிராமத்துக்கு 4 கி.மீ.தூரத்துக்குப் பயணிக்க வேண்டும்.இந்த கிராமத்திற்கு அருமையான சாலை வசதி மலைமீது கொண்டை ஊசிவளைவுகளோடு அமைக்கப்பட்டுள்ளது;இந்த கிராமத்தின் நுழைவாயிலில் வயல்வெளி வழியாக சுமார் 1 கி.மீ.தூரம் பயணித்தால்,இருப்பவரே வயல்வெளி அஷ்டபுஜ கால பைரவர் கோவில் ஆகும்.இவருடன் வயல்வெளி முனீஸ்வரரும்,மற்ற ஆவரண தேவதைகளும் இருக்கின்றனர்.இங்கு பூசாரி கிடையாது;கோவிலுக்குப் பின்னால் வறண்ட ஓடையை ஒட்டி இருக்கும் புற்றுமண்ணே இங்கு விபூதிப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.நாமே பூஜை செய்ய வேண்டியதுதான்!!!
தினமும் ஒருமுறை வீதம் 3 நாட்கள் அல்லது வாரம் ஏதாவது ஒரு நாள் என்று 3 வாரத்துக்கு வந்து இவரை வழிபடுபவர்களுக்கு அவர்களின் கடும் சிக்கல்கள் உடனடியாகத் தீர்ந்துவிடுகின்றன;தவிர,இங்கு வரும் பெண் பக்தைகள் திடீரென பரவசமடைந்து சாமியாடுவதும் உண்டு.கேட்டவரம் எதுவாக இருந்தாலும் இவர் தருவதால்,இவரை நோக்கி படையெடுத்துவரும் பக்தர்கள்,பக்தைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
நாமும் ஒருமுறை போய் வரம் வாங்கி வருவோமா?
இந்தப்புகைப்படங்களை நமக்குத் தந்து உதவிய நமது வேலூர் ஆன்மீகக்கடல் வாசகர் திரு. பாலக்ருஷ்ணன் அவர்களுக்கு கூகுள் நன்றிகள்!!!
ஓம்சிவசிவஓம்
link: this web
இவர்தான் எங்களுடைய ஊரை காக்கும் காவல் தெய்வம். இவரைப்பற்றி என்னுடைய வலைப்பூவில் பதித்துள்ளேண். மேலும் தகவல்களுக்கு இந்த பதிவை பாருங்கள்.
ReplyDeletehttp://sivanarul-sivamayam.blogspot.com/2010/06/blog-post_27.html
ஆன்மீககடலுக்கு நன்றி.
முடிந்தால் என்னுடைய வலைப்பூவின் குறிப்பிட்ட இந்த தலைப்பின் லிங்கை இணைத்தால் அனைவரும் பார்க்க ஏதுவாக இருக்கும்
நன்றி.
சிவனருள் பதிவன்