Wednesday, March 7, 2012

சுதேசி கேள்வி பதில் பகுதி(மார்ச் 2012)யிலிருந்து


?:பன்னாட்டு கல்வி நிறுவனங்கள் நம் நாட்டிற்கு வந்தால் சர்வதேச தரம் வாய்ந்த கல்வி நமக்கு கிடைக்காதா? ஏன் இதை நாம் எதிர்க்க வேண்டும்?
!!:இதைப் பற்றி நாம் ஏற்கனவே விலாவாரியாக சொல்லியிருக்கிறோம்.நன்மைகள் மட்டும் வருவதில்லை;அந்தப்பேக்கேஜ்களுடன் வேண்டாதவைகளும் வரும்.அதை விடுங்கள்.நீங்கள் கூறும் சர்வதேச தர கல்விச்சாலைகளில் முதல் வரிசையில் நிற்கும் ஆக்ஸ்ஃபோர்ட் பற்றிய செய்தி.

ஆக்ஸ்ஃபோர்டில் பட்டம்பெற்று வெளியேறியவர்களின் வேலைப் பின்னணி பற்றிய ஒரு ஆய்வை அந்தப் பல்கலைக் கழகமே வெளியிட்டுள்ளனர்.அதன்படி,சார்ட்டடு அக்கவுண்டண்ட்,மெக்கானிக்கல் என் ஜினியர்கள் பணியில் சேருவதை விட அதிகமான ஆக்ஸ்ஃபோர்ட் பட்டதாரிகள்,ஆண்,பெண் வெயிட்டர்களாகவும்(மேசைப் பணியாளர்கள்),மதுபானக்கடைகளில்(பார்) சிப்பந்திகளாகவும் சேர்கின்றனர் என்கிறது ஆக்ஸ்ஃபோர்டின் சொந்த ஆய்வு. வேண்டுமா இன்னமும் கண்மூடித்தனமான வெளிநாட்டுக் கல்வி மோகம்
ஆன்மீகக்கடலின் கருத்து:வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்கு வந்தால்,மாணவ விடுதி,மாணவியர் விடுதி என தனித்தனியாக இராது.

?:அமெரிக்க அவுட்சோர்ஸிங் நிறுவனங்களுகு அதிகவரி விதிக்கப்படும் என்று ஒபாமா அறிவித்திருக்கிறாரே?
!:’சுதேசியம்’ பேசுகிறது ஒபாமா.அமெரிக்காவை காப்பாற்ற நினைப்பது புரிகிறது.மன்மோகன் அரசும் அமெரிக்காவை காப்பாற்ற நினைப்பதுதான் புரியவில்லை.
?:மான்யங்கள் அதிகரிப்பு எனது தூக்கத்தைத் துரத்துகிறது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் புலம்பல் நியாயமா?
!:பன்னாட்டுக் கம்பெனிகளுக்கான சலுகைகளை விலக்கி விட்டால்,மான்ய இழப்புகளை வருமானமாக மாற்றிவிட முடியும்.தூக்கம் கெட்டதற்குக்காரணம், பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளுக்கு இவை தடையாக உள்ளனவே என்பதுதான்.

No comments:

Post a Comment