தமிழ்நாட்டில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான ஜீவசமாதிகளில் மிதமிஞ்சிய சக்திவாய்ந்தது சங்கரன்கோவில் தாலுகாவில் இருக்கும் பாம்புக்கோவில் சந்தையில் இருக்கும் மாதவானந்தசுவாமிகளின் ஜீவசமாதி ஆகும்.
ஞானம் தரும் கிரகம் கேது ஆகும்.கேதுவின் நட்சத்திரங்களில் ஒன்று மகம் நட்சத்திரம் ஆகும்.அந்த மகம் நட்சத்திரமானது பவுர்ணமியாவது மாசிமாதம் வரும் பவுர்ணமியன்று ஆகும்.இந்த நன்னாளில்,ஞானத்தை அள்ளிவழங்கும் மாதவானந்த சுவாமிகளை தரிசிக்க ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் செல்ல இருக்கின்றனர்.
மதுரையிலிருந்து செங்கோட்டை செல்லும் பாசன் ஜர் ரயில்,தினமும் இரண்டு அல்லது மூன்றுமுறை மதுரையிலிருந்து புறப்பட்டு,திருமங்கலம்,விருதுநகர்,சிவகாசி,ஸ்ரீவில்லிபுத்தூர்,ராஜபாளையம்,சங்கரன் கோவில் வழியாக பாம்புக்கோவில் செல்கிறது.ராஜபாளையத்தை இந்த ரயில் கடக்கும் நேரங்கள் காலை 9 மணி,மதியம் 1.30 முதல் 2.30க்குள்: இரவு 7.30.
ராஜபாளையத்திலிருந்து மதியம் 1.30க்கும்,இரவு 7.30க்கும் இரண்டு குழுக்களாக இந்த பாசன் ஜர் ரயில் மூலமாக ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் செல்ல இருக்கிறோம்.
ஆன்மீகக்கடல் அறக்கட்டளை நடத்த இருக்கும் ஆன்மீகப்பயிற்சி வகுப்பு1 இல் கலந்து கொள்ள விரும்புவோர்,மாசி மகத்தன்று தங்களின் பிறந்த ஜாதகத்தின் நகல்,பாஸ்போட் சைஸ் போட்டோக்கள் இரண்டு உடன் பாம்புக்கோவில்சந்தைக்கு வருகை தந்து,நேரில் ஒப்படைக்கலாம்.மறுநாள் காலை 7 மணிக்கு மதுரை செல்லும் புகைவண்டி பாம்புக்கோவில்சந்தையை வந்தடையும்;அதில் திரும்பவும் அவரவர் ஊருக்கு புறப்பட்டுச் செல்லலாம்.
மாதவானந்த சுவாமிகளை தரிசிக்க வரும்போது,விதையில்லாத கறுப்பு திராட்சை குறைந்தது அரைக்கிலோ,ஒரு கிலோ டயமண்டு கல்கண்டு,விதையில்லாத பேரீட்சைபழம் பாக்கெட் ஒன்று,100 கிராம் நெய்பாக்கெட்,வெற்றிலை கொஞ்சம்; கொட்டைப் பாக்கு கொஞ்சம்,தரமான பத்திபாக்கெட் ஒன்றுடன் நேரில் வருவது அவசியம் ஆகும்.இவ்வாறு தொடர்ந்து எட்டு பவுர்ணமிக்கு இங்கு வருகைதந்து,மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதியில் இரவு ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல்(அதிகபட்சம் மூன்று மணி நேரம்!!!) மஞ்சள் துண்டில் அமர்ந்து,இரு கைகளிலும் ருத்ராட்சங்களை வைத்து ஓம்சிவசிவஓம் ஜபித்துவர,எப்பேர்ப்பட்ட பிரச்னையாக இருந்தாலும்,அவை தீர்ந்துவிடும்;
மாதவானந்தசுவாமிகளின் ஆசிரமத்தில் ஆண்கள்,பெண்கள் தங்குவதற்கு சகலவிதமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.இங்கு நித்திய அன்னதானம் நடைபெற்றுவருவதால்,அன்னதானத்திற்கு தாங்கள் வரும்போது அரிசி அல்லது நன்கொடை உங்கள் விருப்பம்போலத் தரலாம்.(எதுவும் கட்டாயம் இல்லை)
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment