கடன் தொல்லை,தீராத நோய், உறவினர்களின் சொத்து பேராசை,காதல் தோல்வி,சரியான வாழ்க்கைத் துணை அமையாமை,பிரிந்த வாழ்க்கைத் துணையுடன் வாழும் ஆசை,எல்லோரும் உதாசீனப்படுத்துதல்,மேலதிகாரியின் தொல்லை,எதிர்காலம் பற்றிய பயம்,மாந்திரீகக் கோளாறு,தேர்வில் பெயில் ஆகிவிடுவோமோ என்ற பயம் என தற்கொலைக்கு பலவிதமான காரணங்கள் இருக்கின்றன.தற்கொலை செய்தவர்களின் நிலை என்ன? யாருக்குமே தெரியாது.
ஒரு பள்ளிமாணவி,வயது 15.பத்தாம் வகுப்பு படிக்கிறாள் என வைத்துக்கொள்வோம்.பத்தாம் வகுப்பு ஆண்டுத் தேர்வில் கணிதத்தில் மட்டும் 90 மார்க்கு வராது;70 அல்லது 80 தான் வரும் என பயந்து,அதனால் தன்னால் பள்ளியில் முதலிடம் பெற முடியாமல் போய்விடும் என வீட்டிற்கு பின்புறம் இருக்கும் தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்கிறாள்.(காரணத்தைப் பார்த்தால் நம்ப முடிகிறதா?)அந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு நிஜமான ஆயுள் 69 வருடம், 4 மாதம் 21 நாட்கள் என (ஜாதகப்படி அல்லது விதிப்படி) வைத்துக்கொள்வோம்;அந்த பள்ளி மாணவி தற்கொலை செய்த நாளிலிருந்து முறைப்படி மரணமடையும் நாள் வரையிலும்,எந்த இடத்தில் தற்கொலை செய்தாளோ,அந்த இடத்தில் அவளது ஆத்மா தரையிலிருந்து சுமார் 20 சதுர அடி சுற்றளவுக்கு சுற்றிக் கொண்டே இருக்கும்.அதே சமயம்,அந்த மீதி நாட்களுக்கு அந்த பள்ளி மாணவியின் ஆத்மாவுக்கு தினமும் பசி,தாகம் எடுத்துக்கொண்டே இருக்கும்.அந்த பள்ளிமாணவி ஆத்மாவின் அழுகுரல் யாருக்கும் கேட்காது.
நமது ராசியை 9 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராகு அல்லது கேது கடக்கும்;நமது ராசியை 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராகு கடக்கும்.அவ்வாறு கடக்கும்போது,ஒரு ராசியில் 18 மாதங்களுக்கு ராகு இருக்கும்;இந்த 18 மாதத்தில் பெரும்பாலான ஆண் அல்லது பெண்ணுக்கு பேய்பிடிக்கும்;அதுவும் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே பிடிக்கும்;அல்லது ராகு மஹாதிசை அல்லது ராகு சார மஹா திசை நடப்பவர்களுக்கே பிடிக்கும்.
எப்போதும் ஆணை பெண் பேயும்,பெண்ணை ஆண் பேய் மட்டுமே பிடிக்கும்;மிக மிக அபூர்வமாக ஒரே ஆளை ஒன்றுக்கும் மேற்பட்ட பேய்கள் பிடிப்பதுண்டு.அப்படி பிடித்ததும்,அந்த ஆள்(ஆண் அல்லது பெண்) அளவுக்கும் மீறி சாப்பிட்டுக்கொண்டே இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்;கேட்டிருக்கலாம்.பேய் விரட்டுபவர்களைக் கொண்டு அந்த பேயை விரட்டிட மட்டுமே முடியும்.கதி மோட்சம் தர எதுவும் செய்வதில்லை;
அந்த பள்ளிமாணவியின் ஆத்மா படும் அவஸ்தைகளில் 10000 இல் ஒரு பங்கை மட்டுமே இங்கு சொல்ல முடியும்.அப்போது அந்த பள்ளி மாணவியின் ஆத்மா,நாம் தற்கொலை செய்தது மாபெரும் தவறு என்பதை உணரும்.அதற்குள் சில வருடங்கள் ஓடியிருக்கும்;இருந்த போதிலும்,அந்த ஆத்மாவுக்கு சாந்திப்பரிகாரங்களை அவளின் பெற்றோர்கள் செய்துவிட்டால்,அந்த பள்ளிமாணவியின் ஆத்மாவுக்கு கதி மோட்சம் கிடைக்கும்.இல்லாவிட்டால்,அந்த பள்ளிமாணவியின் உடன்பிறந்தவர்களின் குழந்தைகளுக்கு பித்ரு தோஷம் பிடிக்கும்.ஆமாம்! அந்த குழந்தைகளின் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு மூன்று,ஐந்து,ஒன்பதாம் இடங்களில் ராகு அல்லது கேது நிற்கும்.இந்த பித்ருதோஷம் பற்றி ஏற்கனவே நமது ஆன்மீகக்கடலில் எழுதிவிட்டோம்.
தற்கொலை தான் இறுதித் தீர்வு எனில்,தினமும் பிறக்கும் குழந்தைகளை விட,தற்கொலையால் இறப்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும்.எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வு என முடிவெடுப்பதற்கு ஏழரைச்சனியும்,அஷ்டமச்சனியும் ஒரு காரணமாக இருக்கிறது.பலரை ஏழரைச்சனியும்,அஷ்டமச்சனியும் தான் பிறவி சுபாவத்தை மாற்றுகிறது என்பதை அனுபவத்தில் உணரலாம்.
இனிமேல் யாருடைய தயவும் எனக்குத் தேவையில்லை;யாரையும் நம்பி நான் வாழத் தயாராக இல்லை;யாரும் எனக்காக வாழ வேண்டிய அவசியமில்லை;என்ற எண்ணத்தை ஏழரைச்சனியில் ஜன்மச்சனிக்காலமும்,அஷ்டமச்சனிக்காலமும் உறுதிபடுத்துகிறது.அந்த மன உறுதியை தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும்போதே நினைவுக்குக்கொண்டுவந்துவிட வேண்டும்.ஏனெனில்,
தற்கொலை செய்ய முடிவெடுப்போரே!
இந்த நெருக்கடியான நிலை நிரந்தரம் அல்ல;இந்த கஷ்டமும் நம்மை இறுதிவரை சித்தரவதைக்குள்ளாக்காது;எப்படி வசதிகளும்,சொகுசுகளும் நிரந்தரமில்லையோ,அதேபோல அவமானங்களும்,தோல்விகளும்,முட்டுக்கட்டைகளும், தடைகளும்,ஏமாற்றங்களும் நிரந்தரம் அல்ல;என்ன உங்களது தற்கொலை எண்ணம் வரும்போது,இவைகளை எடுத்துச் சொல்லிட அருகில்,யாரும் இருப்பதில்லை!!! அதுதான் பிரச்னை!!!
ஒருமுறை தற்கொலை முயற்சி எடுத்து படுதோல்வியடைந்தவர்கள்,அதன்பிறகு அசாத்தியமான துணிச்சலைப் பெறுகிறார்கள்.பலமுறை தற்கொலை எண்ணம் வந்தவர்கள்,ஒரே ஒரு விபத்தை அல்லது ஒரே ஒரு தற்கொலை செய்தவர்களின் இறுதி நாளை நேரில் பார்த்தப்பின்னர்,எதற்கும் கலங்காத மனதை அடைந்துவிடுகிறார்கள் என்பது அனுபவ உண்மை!!!
தற்கொலை முயற்சிக்கு இந்திய அரசியலமைப்புச்சட்டப்படி தண்டனை உண்டு.சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் அவர் கூறிய ஒரே ஒரு கருத்து இங்கே ஞாபகம் வருகிறது: மனிதன் தனியாக இந்த பூமிக்கு வருகிறான்;அவரவரின் பாவ புண்ணிய ஊழ்வினைக்கு தகுந்தாற்போல,கஷ்டங்களையும்,போகங்களையும் அனுபவிக்கிறான்;தனியாகவே மரணமடைகிறான்.ஆனால்,வாழும் காலத்தில் அனைவருமே தனக்கு சொந்தம் என நம்புகிறான்.நிஜத்தில்,நாம் ஒவ்வொருவருமே அனாதைகள் என்பதுதான் கசப்பான உண்மை.
இதையே அடிக்கடி சொல்வதுண்டு:அனாதையாகப் பிறக்கிறோம்;அனாதையாக வாழ்கிறோம்;அனாதையாகச் சாகிறோம்;இடையே வரும் அத்தனை உறவுகளும் தற்காலிகமானவையே!
நாம் ஏன் தற்கொலை செய்து சாகணும்?
No comments:
Post a Comment