Thursday, September 8, 2016

தட்சிண சிதம்பரம் என்ற சிதம்பரேஸ்வரர் திருக்கோவில்,ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர்









உலகில் எந்த நாட்டிலும் பிறந்தவர்களுக்கும் முக்தி இப்பிறவியிலேயே கிட்டாது;

நமது பாரததேசம் என்ற கோவிலில் கருவறையாக இருக்கும் தமிழ்நாடு மாநிலத்தில் உதித்தவர்கள் ஒவ்வொருவருக்கும் இப்பிறவியில் அல்லது அடுத்து வரும் ஒருசில பிறவிகளிலேயே முக்தி கிட்டிவிடும்;

ஏனெனில்,தமிழ் மொழியில் யாரெல்லாம் பள்ளிப்படிப்பை முடிக்கின்றார்களோ( +2 வரை) அவர்களுக்கு மட்டுமே தமிழ் மொழி,சித்தர்பெருமக்களின் போதனைகள்,சிவபெருமானின் அருமை பெருமை,சைவத்தின் மகிமைகள்,சிவாலயங்களின் சூட்சுமங்கள் சுலபமாகப் புரியும்;முக்தியை நோக்கிய செயல்பாடுகள் வாழ்க்கையாக அமையும்;


மனிதர்களை இயக்குவது நவக்கிரகங்கள்;நவக்கிரகங்கள் நம் ஒவ்வொருவருடைய கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த பாவம் மற்றும் புண்ணியச் செயல்களுக்கு ஏற்ப இப்பிறவியில் வேலை,தொழில்,யோகம்,வீடு,வாசல்,வாகனங்கள்,சுகம் போன்றவைகளையும்,அவமானம்,நோய்,கடன் போன்றவைகளையும் கலந்து கலந்து தருகின்றன;
இந்த நவக்கிரகங்களை சூட்சுமமாக இயக்குவது பஞ்சபூதங்கள்!


இந்த பஞ்சபூதங்களை ஈசனின் ஐந்து முகங்கள் கட்டுப்படுத்திவருகின்றன;இதை நினைவூட்டும் விதத்தில் தான் பஞ்சபூதத் திருத்தலங்களை சிவபக்தர்களாகிய மன்னர்கள் உருவாக்கினார்கள்;அவை காளஹஸ்தி,திரு அண்ணாமலை, திரு ஆனைக்கா(திருச்சிக்கு அருகில்),சிதம்பரம்,காஞ்சிபுரம்!

இதே போல தட்சிண(தெற்கு) பஞ்சபூதத் தலங்களை விக்கிரப்பாண்டிய மன்னன் தமது ஆட்சிக்காலத்தில் தெற்கு தமிழ்நாட்டில் சிற்றரசர்களுடன் கட்டினார்;அதில் தட்சிண சிதம்பரமாக விளங்குவது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுக்கா தெற்கு வெங்காநல்லூர் கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்நிறை சிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் திருக்கோவில் ஆகும்;

சதுர்முகி வருடம்,வைகாசி மாதம் (மே,ஜீன் 2016) இந்த ஆலயம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு குடமுழுக்கு (சமஸ்க்ருதத்தில் கும்பாபிஷேகம்) சிறப்போடு செய்யப்பட்டது;


அதற்கு முன்பு வரையிலும்,இப்பகுதி மக்கள் இந்த ஆலயத்தின் பகுதிகளில் விளையாடுவதும்,தூங்குவதும்,சீட்டாடுவதுமாக இருந்து வந்துள்ளார்கள்;புனர்நிர்மாணம் செய்யத் துவங்கிய கால கட்டத்தில்,பவுர்ணமி நாட்களில் உச்சிப் பொழுதான பகல் 12 மணி வாக்கில் மூலவர் இருக்கும் பகுதியில் உள்ள நந்தி உயிர்பெற்று எழுந்து,வலம் வந்திருக்கின்றார்;அந்த நந்தி(காளை வாகனம்)யின் மீது ஈசனும்,அம்பிகையும் அமர்ந்த நிலையில்,பஞ்சவாத்தியங்கள் முழங்க,துந்துபி ஒலி பரவ,சங்கு ஒலி கேட்க, வலம் வருவதை அப்பகுதி கிராம மக்கள் பலர் பலமுறை தரிசித்துள்ளார்கள்;அதன் பிறகு,கோவில் பகுதியில் தூங்குபவர்களும்,சீட்டாடுபவர்களும் விளையாட்டு எண்ணத்துடன் வருவதைக்கைவிட்டு விட்டார்கள்;கோவிலின் புனிதத்தை உணர்ந்து முறைப்படி வழிபடத் துவங்கிவிட்டார்கள்;

திருவாடுதுறை ஆதினத்தின் முதல் ஆதினமாகிய நமச்சிவாய குருமூர்த்தி சுவாமிகளின் சுதை சிற்பம் இந்த ஆலயத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது;

தட்சிண சிதம்பரம் இதுதான் என்பதற்கு பலவிதமான ஆதாரங்கள் இருக்கின்றன;உலகத்தின் மையப் புள்ளி சிதம்பரம் தான் என்பதை மேல்நாட்டு புவியியல் ஆராய்ச்சியாளார்கள் பல கோடீ ரூபாய்கள் செலவழித்து கண்டறிந்துள்ளார்கள்;

அதே போல ஒருங்கிணைந்த தமிழ் உலகத்தின் (இன்றைய தமிழ்நாடு,கேரளா,ஸ்ரீலங்கா) மையப் புள்ளியாக இந்த ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் திருக்கோவில் மூலவர் இருக்கின்றது என்பது சிவசத்தியம் ஆகும்;(இன்றைய தமிழ்நாடு மாநிலத்தின் மையப்பகுதியாக இருப்பது திருச்சி என்பது நம்மில் பலருக்கும் தெரியும்)

இன்று,சதுர்முகி வருடம்,ஆவணி மாதம் 23 ஆம் நாள் வியாழக்கிழமை அன்று இங்கே திருக்கல்யாணம் நடைபெற்றது;யார் திருக்கல்யாணம் வைபவத்தில் கலந்து கொள்கின்றார்களோ,அவர்களுக்கு அப்பிறவியே இறுதிப்பிறவியாகும்;ஆமாம்! முக்தி கிட்டிட விரும்புவோருக்கு மட்டுமே திருக்கல்யாணம் வைபத்தை தரிசிக்கும் பாக்கியம் கிட்டும்;

யார் 108 சிவாலயங்களில் திருக்கல்யாண வைபவம் நிகழ்த்திட பாடுபடுகின்றார்களோ அவர்கள் சிவகணம் ஆகும் தகுதியைப்  பெறுவார்கள்;

தற்போது ராஜகோபுரம் கட்டும் திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன;

ஆலயத்தில் நடராஜர் அம்பிகையுடன் அருள்பாலித்து வருகின்றார்;பஞ்ச லிங்கங்கள்,விஷ்ணு துர்கை,மஹா கால பைரவப் பெருமான் என்று சிவாலயத்திற்கு உரிய அனைத்து தெய்வசக்திகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உயிர்த்துடிப்போடு கோவில் சிவகடாட்சத்தால் அருள்மழை பரவிக்கொண்டே இருக்கின்றது;சிதம்பரம் நடராஜரைத் தரிசித்தால் என்ன புண்ணியம் கிட்டுமோ,சிதம்பரம் சென்று வந்தால் என்னவிதமான புண்ணியப் பலன் கிடைக்குமோ,அதே புண்ணியப் பலன் இந்த ஆலயம் வந்து வழிபடுபவர்களுக்குக் கிட்டும்;


முற்காலத்தில் வெண்கலத்தால் செய்யப்பட்ட ரதத்தில் சிவசக்தி வலம் வந்துள்ளார்கள்;அதனாலேயே இந்த கிராமத்திற்கு தெற்கு வெண்கல நல்லூர் என்று பெயர் இருந்தது;இப்போது,தெற்கு வெங்காநல்லூர் என்று மருவி விட்டது;


வழி:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வரவேண்டும்;அங்கிருந்து தென்காசி செல்லும் சாலையில் இளந்தோப்பு அரசு மருத்துவமனைக்கு சற்று முன்பாகவே தெற்கு நோக்கி ஒரு சாலை செல்லும்;அந்த சாலை வழியாக சுமார் 7 கி.மீ.தூரம் பயணித்தால் தெற்கு வெங்காநல்லூரைச் சென்றடையலாம்;

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மினி பஸ் வசதி இருக்கின்றது;

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ


No comments:

Post a Comment