Thursday, September 1, 2016

வாழை_இலை_குளியல் !!

உலகில் உள்ள அனைத்து தாவரங்களும், மரங்களும் கரியமிலா வாயுவை சுவாசித்து ஆக்ஸிஜனை வெளியே விடுகிறது. மனிதர்கள் ஆக்ஸிஜனை சுவாசித்து கரியமிலா வாயுவை வெளியே விடுகிறார்கள்.
அதாவது மனிதனின் வெளிமூச்சு தாவரங்களுக்கு உள்மூச்சு. தாவரங்களின் வெளிமூச்சு மனிதர்களுக்கு உள்மூச்சு. உயிரினங்கள் இல்லாவிட்டால் மரம், செடிகளும் மரம் செடிகள் இல்லாவிட்டால் மற்ற உயிரினங்களும் உலகில் ஆரோக்கியமாக வாழவே முடியாது. இதுவே இறைநிலையின் ஏற்பாடு.!
வாழைமரம் மட்டுமே கரியமிலா வாயுவை உட்கொண்டு சுத்தமான பிராணவாயுவை மட்டுமே வெளிவிடுகிறது. மற்ற தாவரங்களிலிருந்து பெறப்படும் ஆக்ஸிஜனில் இருப்பதை விட பலமடங்கு பிராணசக்தி வாழையிலையில் நிறைந்துள்ளது.
அதனால்தான் உடலில் பல்வேறு வழிகளில் தேங்கியுள்ள கரியமிலா வாய்வை வெளியேற்றி உடலில் உள்ள கெட்ட காற்றையும் நீரையும் வெளியேற்ற வாழையிலை குளியல் ஒரு உபாயமாக இருக்கிறது.
வாழை இலை குளியலின் பலன்கள் :1. உடலில் தேவையற்ற எடையை குறைக்கும்.
2. உடல் வீக்கம், கை, கால்வீக்கத்தைப்போக்கும்.
3. சிறுநீரக செயலிழப்பை தடுக்கும்.
4.அலர்ஜி, மற்றும் தோல்வியாதிகள் குணமாகும்.
5.வியர்வை சுரபிகளில் ஏற்பட்டுள்ள தடையை போக்கும்.
6.உடலில் பல்வேறு உறுப்புகளில் தேங்கியுள்ள கெட்ட காற்றை வெளியேற்றும்.
7. உடலுக்கு புத்துணர்வையும், புதுப்பொலிவையும் தரும்.
8. நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
9.ஜாதகத்தில் சிலருக்கு ஏற்பட்டுள்ள மரண கண்டத்தில் இருந்து தப்புவிக்கும்.
10. அழகான தோற்றத்தை தரும்.
வாழை இலை குளியல் செய்வது எப்படி ?1.வாழை குளியலுக்கு முதல் நாள் நிறைய நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகளை பச்சையாக உண்ணவேண்டும்.
2.குளியல் செய்ய போகும் இடத்தில் ஆறு துண்டு வாழை நார், நூல்கயிறு அல்லது தென்னை கயிறை வரிசையாக தரையில் போடவும்.
3.அதன்மேல் நான்கு பெரிய இலைகளை விரிக்கவும் (உடல் பருமனுக்கு தகுந்தபடி)
4.வாழை குளியல் எடுப்பவருக்கு ஆறுடம்ளர் தண்ணீர் கொடுத்து, தலையில் ஒரு டவ்வலை நனைத்து சுற்றி இலைகளில் படுக்க வைக்கவும்.
5.கால் பாதம் முதல் உச்சந்தலை வரை உடலில் எந்த பாகமும் வெளியே தெரியாதபடி அவரின் மேலே இலைகளால் மூடவும்.
6.மூக்கின் அருகே மூச்சு விடுவதற்காக இலையின் சிறு பகுதியை வெட்டிவிடவும்.
7.இலைகட்டுகளை கட்டுவதுபோல் அவர் உடல் முழுவதையும் போர்த்தி சற்று மெல்லிய இறுக்கத்துடன் கட்டிவிடவும்.
அப்படியே 20 முதல் 30 நிமிடங்கள் வரை படுத்திருக்க செய்துவிட்டு கட்டுகளை அவிழ்த்து மூன்று முறை நன்றாக மூச்சை இழுத்துவிட செய்து எழுப்பி நிழலில் அமர்த்தி. எலுமிச்சை அல்லது சாத்துக்குடி, தேன் , இந்துப்பு , இஞ்சி கலந்த கலவையை கொஞ்சம் மெதுவாக நன்றாக கொப்பளித்து குடிக்க செய்துவிட்டு பிறகு 15 நிமிடம் கழித்து பச்சைதண்ணீரில் குளிக்க செய்துவிடலாம் …
அதன்பிறகு அன்றைக்கு முழுவதும் இயற்கை உணவு அல்லது சாத்வீக உணவுகளையே உண்ண வேண்டும். 10 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வாழையிலை குளியல் எடுத்துக்கொள்ளலாம்.
வாழை இலை குளியல் எடுத்துக் கொள்ள சிறந்த நேரம் எது ?
வாழை குளியல் செய்ய காலை ஏழு மணி முதல் பத்து மணிவரை உள்ள நேரமே சிறந்ததாகும்.
வாழைகுளியலின்போது இருபது நிமிடத்திற்குள்ளாகவே வெப்பம் அதிகமாக உணரப்பட்டால் வாழையின் மேலே கொஞ்சம் நீரை தெளித்துகொள்ளலாம். இலையின் உள்ளிருப்பவர் பொறுக்க முடியாத அளவு சிரமமாக உணர்ந்தால் அவரை வெளியேற்றி விடலாம்.
குளியலின் போது குறைந்த பட்ச பருத்தி ஆடைகளை அணிந்து கொள்ளலாம்.!
இயற்கையோடு இன்புற்று வாழ்வோம்.!
- சித்தர்கள் தபோவனம்

No comments:

Post a Comment