Sunday, September 11, 2016

மங்களமான மண வாழ்க்கையைத் தரும் மஹாளய பவுர்ணமி 16.9.16 வெள்ளிக்கிழமை!!!


இயற்கையான முறையில் இறந்த நமது முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்ய ஏற்ற காலம் தான் மஹாளய அமாவாசை! இது ஒவ்வொரு புரட்டாசி மாதமும் வரும்;ஒரே ஒரு புரட்டாசி அமாவாசையன்று செய்யப்படும் தர்ப்பணம்/சிரார்த்தம் கடந்த 12 ஆண்டுகளாக செய்யாமல் விடுபட்ட தர்ப்பணத்தை ஈடு செய்துவிடுகின்றது;

திருமணம் ஆனது முதல் (யாராவது ஒருவரது) ஆயுள் நிறைவடையும் வரையிலும் வாழ்க்கையின் அனைத்து சுகங்களிலும்,எல்லா துக்கங்களிலும் பங்கெடுக்கும் மனைவிக்கு நன்றி தெரிவிக்கும் பவுர்ணமிதான் இந்த மஹாளய பவுர்ணமி!!!கி.பி.1956 க்குப் பிறகு இப்போது 16.9.2016 வெள்ளிக்கிழமை அன்று வருகின்றது;ஆமாம்! 60 ஆண்டுகளுக்குப் பிறகு மஹாளய பவுர்ணமி வருகின்றது!!!

உலகத்தில் மனித இனம் இன்று வரையிலும் ஜீவித்திருப்பதற்குக் காரணம் சிவசக்தி ஐக்கியம் என்று அழைக்கப்படும் தம்பதியாக வாழ்ந்துவரும் மரபுதான்!(தனித்து வாழ்ந்து வரும் ஆண் அல்லது பெண்ணால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது;இவர்களது மரணத்திற்குப் பிறகு,பலவிதமான துன்பங்களுக்கு உள்ளாவார்கள்.இவர்களுக்கு குழந்தைகள் இல்லாத சூழ்நிலையால் இவர்களது மரணத்திற்குப் பிறகு பித்ரு தர்ப்பணம் செய்ய வம்சாவழி இராது;)
ஒவ்வொரு ஆணும் பிறப்பதற்கு முன்பே ஈசனின் கருணையால் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்துவிடுகின்றான்;அதே போலத்தான் பெண்ணும்! (தேர்வு ஆனப் பின்னர் முதலில் பிறப்பது ஆண் தான்;பிறகே அவனது வாழ்க்கைத் துணை பிறக்கின்றாள்;பிறப்பதற்கு முன்பே,பெற்றோர்கள்,வாழ்க்கை,வாழ்க்கைத் துணை,புகழ்,சொத்துக்கள்,கவுரவம்,நட்பு வட்டம்,அவமாணாங்கள்  என்று அனைத்தையும் முடிவுசெய்து கொண்டு அதற்கு ஒவ்வொரு ஆணும் பெண்ணும் முழுச் சம்மதம் கொடுத்தப் பின்னரே இந்த கர்மபூமியில் தமது கர்மாக்களை அனுபவிக்க பிறவி எடுக்கின்றது=இதை தெரிவிப்பது அருணாச்சலேஸ்வரரின் அருளால் சித்தர் பெருமக்கள் சூசகமாகத் தெரிவிக்கின்றார்கள்;

வெகு அரிதாக மட்டுமே சிலர் மூன்று பிறவிகளையும் கடந்து நான்காவது பிறவியிலும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றார்கள்;லக்னத்துக்கு ஏழாமிடத்தில் செவ்வாயும் சுக்கிரனும் இருக்க ஒருவர் பிறந்தால்,அவருக்கு கடந்த மூன்று பிறவிகளாக யார் வாழ்க்கைத் துணையோ அவரே இப்பிறவியிலும் வாழ்க்கைத் துணையாக வருவார்;இப்படிப்பட்ட தம்பதிகளுக்கு இடையே சண்டை நடந்தாலும்,அன்பு மழை பொழிந்தாலும் அது இருவரின் பெற்றோர்கள்,உடன்பிறந்தவர்களுக்குக் கூட தெரியாது;ஒருபோதும் கணிக்க முடியாது;
பாரத நாடு இன்றும் உயிர்த்துடிப்போடு வாழ்ந்து வருவதற்குக் காரணம் இல்லத்தரசிகளின் விவரிக்க முடியாத தியாகம் மட்டுமே!
அரசியலில் பெரும் பொறுப்புகள்(பதவிகள் அல்ல) ஆண்களால் தான் அலங்கரிக்கப்படுகின்றன;அரசியலில் மட்டும் அல்ல;தொழில்துறையில்;சினிமாத்துறையில்;ஆன்மீகத்துறையில்;மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில்,மாநில அரசுத் தலைமைச் செயலகங்களில்; பல நிறுவனங்களில் வேலை நேரம் முடிந்தப் பின்னரும் அங்கேயே வாரக்கணக்கில் தூங்கி மற்றும் தங்கி பணிபுரியும் ஆண்கள் இன்றும் இருக்கின்றார்கள்;(வாட்ச் மேன் மட்டும் அல்ல;ஆர்.அண்டு டி இன்சார்ஜ்கள்,ஷிப்ட் சூப்பர்வைசர்கள் மற்றும் பலர்)அவர்களுக்குப் பக்கபலமாக இருப்பது அவர்களுடைய மனைவிகள் தான்;

ஒரு கணவன் தேவையில்லாமல் தமது மனைவியை ஒரே ஒருமுறை கண்ணீர் சிந்த வைத்தான் என்றால்,அந்தக் கணவன் அனுபவிக்கும் தண்டனை என்ன தெரியுமா?
தொடர்ந்து ஐந்து நாட்கள் உண்ண உணவு கிடைக்காது;பணம்,அதிகாரம்,செல்வாக்கு,பிறந்த ஜாதகப்படி யோகம் இருந்தாலும் பட்டினியாகத் தான் கிடக்கவேண்டும்;
அதேபோல,மனைவியால் கொடுமைப்படுத்தப்படும் கணவன் மார்களும் நாடு நெடுக,அனைத்து ஜாதிகளிலும்,அனைத்து மாவட்டங்களிலும்,அனைத்து மதங்களிலும்,அனைத்து ஊர்களிலும் இன்றும் கூட வாழ்ந்து வருகின்றார்கள்;அது அவர்களது செய்த முற்பிறப்பு கர்மவினைகளால் மட்டுமே உருவானது;Cause and Effect என்பது இயற்பியல் விதி மட்டும் அல்ல;வாழ்க்கையை இயக்கும் சூட்சும இயந்திரமே இதுதான்;
இதுவரையிலும் தமக்குப் பக்கபலமாக இருந்து வந்த தமது மனைவிக்கு எப்படி நன்றி தெரிவிப்பது?
விருதுநகர் மாவட்டம்,ராஜபாளையம் தாலுகாவில் சோழாபுரம் அமைந்திருக்கின்றது;ராஜபாளையம் டூ சங்கரன் கோவில் சாலையில் 8 வது கி.மீ.தொலைவில் அருள்மிகு குழல்வாய்மொழி அம்பாள் சமேத விக்கிரபாண்டீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கின்றது;இந்த ஆலயத்தில் குழல்வாய்மொழி அம்பாள் சன்னதிக்கு அருகில் மஹாதேவசித்த குரு அவர்களின் ஜீவசமாதி அமைந்திருக்கின்றது;ராஜராஜசோழ மன்னனின் அரசாட்சி காலத்தில் சுமாராக இன்றிலிருந்து 1000 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே ஐக்கியமாகியிருக்கின்றார்;
16.9.2016 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 7 மணிக்குள் ஏதாவது ஒரு 30 நிமிடம் இங்கே இருக்க வேண்டும்;விக்கிரபாண்டீஸ்வரரையும்,குழல்வாய்மொழி அம்பாளையும் வழிபடவேண்டும்.பிறகு,மஹாதேவசித்தகுருவிடமும் பிரார்த்தனை செய்ய வேண்டும்;
இந்த நாளில் இந்த ஆலயத்திற்கு வருகை தந்தது முதல் புறப்படும் வரை தமது மனைவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இறைசக்திகளிடமும்,சித்தசக்தியிடமும் பின்வருமாறு வேண்டிக்கொள்வது அவசியம்;(இதன் மூலமாக மறுநாளில் இருந்தே வளமான மற்றும் நலமான வாழ்க்கை அமையும்;இதுவரை இருந்து வந்த வாழ்க்கை நெருக்கடிகள் அனைத்தும் தீர்க்கப்படும்)
“எனது மனைவியின் தியாகத்தால் தான் இன்றும் நான் எனது வேலை/தொழிலை நிம்மதியாகவும்,தங்குதடையின்றியும் பார்க்க முடிகின்றது;
அவளது பக்கபலத்திற்கு நான் தலைவணங்குகின்றேன்;
அவள் இன்னும் ஆழ்ந்த மன நிம்மதியோடும்,அளவற்ற ஆரோக்கியத்தோடும்,செல்வ வளத்தோடும் வாழ அருள்புரிவீராக”
இந்த பவுர்ணமிக்கு சோழாபுரம் வருபவர்கள் தம்பதியாக வந்து வழிபடுவதன் மூலமாக அவர்களது குழல்வாய்மொழி அம்பாள் சமேத விக்கிரபாண்டீஸ்வரருடைய அருளும்,மஹாதேவசித்தகுருவின் ஆசியுடன் அவரவர்களுடைய பித்ருக்களின் ஆசிகள் மழைபோல கிட்டும்;
வெகுகாலமாக திருமணத் தடையால் அவதிப்படும் பெண்கள்(குறிப்பாக ஆயில்யம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்) மற்றும் ஆண்கள் கலந்து கொள்வதால் விரைவில் தமது வாழ்க்கைத் துணையை அடைவார்கள்;
ஆலயத்திற்கு வரும் போது,இம்முறை தங்களால் எது முடியுமோ அதை மட்டும் வாங்கி வந்தால் போதுமானது;
குருவையும்,இறைவனையும் சந்திக்கச் செல்லும் போது வெறுங்கையோடு போகக் கூடாது என்பது தமிழ்ப் பண்பாட்டுவிதி!

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ 

No comments:

Post a Comment