Saturday, April 21, 2012

கடன்களை நீக்கிட உதவும் ருண விமோசனலிங்க வழிபாடு


கும்ப கோணம் வட்டம் திருச்சேறையில் அமைந்திருக்கும் அருள்மிகு ஞானம்பிகை சமேத  சாரபரமேஸ்வரர் திருக்கோவிலில் ருண விமோசன லிங்கம் அமைந்திருக்கிறது.

இங்கு 11 திங்கட்கிழமைகளுக்கு வந்து பால் அபிஷேகம் செய்தால்,நீண்ட காலக் கடன்கள் தீர்ந்துவிடும்;திருமணத் தடை அகலும்;குழந்தையில்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும்;தொழிலில் இருந்துவரும் தடைகள் அடியோடு நீங்கிவிடும்;வேலையில்லாதவர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும் ;
ஒருவேளை நேரில் உங்களால் வர இயலாவிட்டால்,11 வார அர்ச்சனைக் கட்டணமாக ரூ.165/ம்,11 வார அபிஷேகக் கட்டணமாக ரூ.250/- சேர்த்து ரூ.450/- பணவிடை எனப்படும் மணி ஆர்டர் மூலம் அனுப்பினால்,உங்கள் பெயருக்கு அர்ச்சனையும்,அபிஷேகமும் செய்து ஒவ்வொரு வாரமும் பிரசாதம் உங்களுக்குத் தொடர்ந்து அனுப்பிவைக்கப்படும்.
நீங்கள் தொகை அனுப்ப வேண்டிய முகவரி: செயல் அலுவலர்,அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோவில்,திருச்சேறை-612 605.கும்பகோணம் வட்டம்.தொலைபேசி:0435- 2468001.

No comments:

Post a Comment