தினமும் ஒரு மணி நேரம் வீதம் சுமார் ஓராண்டுக்கு ஓம்சிவசிவஓம் அல்லது ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்க வேண்டும் என உறுதிபூண்டிருப்போம்.ஆனாலும்,அதில் அவ்வப்போது சிறுசிறு தடங்கல்கள் வரத்தான் செய்யும்.
உதாரணமாக,வீட்டிலிருக்கும் வயதானவர்களின் மரணம்,உறவினர்களின் வீடுகளில் குழந்தைபிறப்பு,உறவினர்வீடுகளில் சிறுமிகள் பருவமடைதல் போன்ற அசுப / சுப காரியங்களில் கலந்து கொள்ள வேண்டியிருக்கும்.இதனால்,ஐந்து நாட்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க இயலாமல் போய்விடும்.
ஆறாம் நாள் மீண்டும் வைராக்கியமாக ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்தைத் தொடங்கிட வேண்டும்.
சிவபெருமான் நமது மன உறுதியை முதலில் சோதிப்பார்.ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தைப் பொறுத்த வரையில் அதை தொடர்ந்து ஜபிக்க முடியாமல் மட்டுமே போகலாம்;எவ்வளவு நாளாக ஓம்சிவசிவஓம் ஜபிக்க முடியாமல் போனாலும் பரவாயில்லை;இன்றிலிருந்து மீண்டும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத்துவங்குங்கள்.
ஆறு மாதங்களில் தினமும் ஒரு மணிநேரம் வீதம் ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டே இருந்தால் நமது ஜப எண்ணிக்கை 1,00,000 ஐத் தாண்டிவிட வேண்டும்.அதன் பிறகு,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி எதுவும் நம்மைப் பாதிக்காது.
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment