Saturday, April 21, 2012

ஒரு ஆன்மீகக் கேள்வி பதிலும்;ஆழ்ந்த சிந்தனையும்




ஒரு ஆன்மீகக் கேள்வி பதிலும்;ஆழ்ந்த சிந்தனையும்




கேள்வி:ஐயா,ஒரு மனிதனை அதிகளவில் துன்புறுத்துவது அவனுடைய முன் ஜென்ம பாவமா அல்லது முன்னோர்கள் செய்த பாவமா?

பதில்:அனுபவமிக்க ஜோதிடர் சொன்னது:முன்னோரிடமிருந்து பெறப்பட்ட உடலின் மரபு அணுக்கள் வழியாக வரும் பாவம் எட்டில் ஒரு பங்கு மட்டுமே!

தானே முந்தைய பிறவிகளில்(ஏழு மனித பிறப்பு வரை) செய்த பாவமே எட்டில் ஏழு பங்கு வரும்.

இந்த கேள்வி பதில் ஒரு ஜோதிட மாத இதழில் வெளிவந்திருக்கிறது.இந்த மே மாதம் 2011 இல் வெளிவந்திருக்கிறது.

ஆக, நமது இப்பிறவி கஷ்டங்கள்,நோய்கள்,துயரங்களுக்கு நாம் மட்டுமே பொறுப்பு.இந்த கேள்விபதில் நிஜம் என்பதை போன மாதம் உணர்ந்தேன்.ஆமாம்!

எனது துயரங்களின் விளைவாக,நானே இவ்வளவு சிரமப்படுகிறேனே,நம்மைப் போல் எத்தனை தமிழ் மக்கள் சிரமப்படுவர்? என சிந்தித்ததன் விளைவுதான் இந்த ஆன்மீகக் கடல் வலைப்பூ.

போன மாதம் ஷீர்டி சாய்பாபாவின் அருளால் ஒரு பிராமணப்பெரியவர் நம்முடைய முக்காலத்தையும் (முன் ஜன்மங்களையும்) அருள் வாக்கு போல சொல்லுகிறார்.

நாம் முன் அனுமதி பெற்று அந்தப் பெரியவரைப் பார்க்கச் சென்றால்,நாமும் அந்தப் பெரியவரும் மட்டுமே அவரது வீட்டில் இருப்போம்.நமது முன் ஜன்மங்கள்,அந்த ஜன்மங்களில் நாம் செய்த தவறுகள்,அது எப்படி இந்தப் பிறவியில் நம்மை துரத்துகிறது?அதிலிருந்து விடுபட என்ன வழிபாடு/பரிகாரம் செய்ய வேண்டும்? என்பதைப் பற்றி விஸ்தாரமாகச் சொன்னார்.

இதற்கு முன்பு,பல அருள் வாக்கு சொல்பவர்களை நான் கடந்த நான்கு ஆண்டுகளாக சந்தித்திருக்கிறேன்.அவர்களில் பலர் நமது முக தாட்சண்யத்திற்காக சில பொய்களையும் சொல்லிக்கேட்டிருக்கிறேன்.அதில் ஒன்றிரண்டு அவர்கள் அருள்வாக்கு சொல்லும்போதே நமக்குத் தெரிந்துவிடும்.சில கொஞ்சநாள் கழித்து தெரிந்துவிடும்.ஆனால்,இந்த ஷீர்டி சாய்பாபா உபாசகர் சொல்லச் சொல்ல அனைத்தும் நிஜம் என்பதை எனது உள்மனம் சொன்னது.

எனவே,மேலே சொல்லப்பட்டிருக்கும் கேள்வி பதில் நிஜமே!!

ஓம்சிவசிவஓம்

பின்குறிப்பு: இந்த பெரியவரை சந்திக்க செல்ல விரும்புவோர் முடிந்தவரை தனியாகச் சென்று சந்திப்பது நன்று.நமது தவறுகள் அல்லது பெருமைகளை நாம் மட்டுமே அறிந்து கொள்வது நன்று.இன்றைய கால கட்டம் அப்படி.

ஷீர்டி சாய்பாபாவின் அருள் ஆசியால் சிலருக்கு இரண்டு மூன்று மணி நேரம் வரையிலும்,பலருக்கு அரை மணி நேரத்திலும் நம்மைப் பற்றி சொல்லிவிடுகிறார்.இவரை சந்திக்கும் போது,பூக்கள்,பழங்களோடு சென்று சந்திப்பது நன்று.

No comments:

Post a Comment