Saturday, April 21, 2012

பூரண அண்ணாமலை தரிசனம் தந்த ஓம்சிவசிவஓம்


நெல்லைக்கும் திருச்செந்தூருக்கும் அருகில் இருக்கும் ஒரு தேர்வுநிலைப் பேரூராட்சி அது.அங்கே ஒரு தம்பதி.அவர்களில் கணவனாக இருப்பவர் தை அமாவாசையிலிருந்து தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருகிறார்.தற்போது அவர் ஜபிக்கத் துவங்கி ஐந்துமாதங்கள் ஆகின்றன.

சென்ற வாரம் ஒரு நாள் மலையே சிவமாக இருக்கும் திருஅண்ணாமலைக்குச் சென்றிருக்கிறார்.



அவர் கிரிவலம் முடித்தப்பின்னர்,மூலவரான அண்ணாமலையாரை தரிசிக்கச் சென்றிருக்கிறார்.இவர் சென்ற போது இலவச தரிசனப் பாதையில் ஒருவர் கூட இல்லை;மூலஸ்தானத்திற்குள்(இலவசமாகவே) சென்று சுமார் 20 நிமிடங்கள் வரையிலும் அண்ணாமலையாரை தரிசனம் செய்திருக்கிறார்.



இந்த சம்பவத்தை எதார்த்தமாகவும் எடுத்துக்கொள்ளலாம்;அதிசயமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.ஏனெனில்,எதையும் நம்பாத யுகமே நமது கலியுகம்!!! இல்லையா?

No comments:

Post a Comment