Wednesday, April 20, 2011

சனிப்பிரதோஷத்தன்று ஓம்சிவசிவஓம் ஜபித்துவாருங்கள்






பிரபஞ்சத்தில் முதன் முதலில் பிரதோஷம் சனிக்கிழமையன்று உருவானதால்,சனிப்பிரதோஷம் மற்ற பிரதோஷங்களை விடவும் மிக முக்கிய நாளாக சிவபக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

தினப்பிரதோஷ நேரம் என்பது தினமும் மாலை 4.30 முதல் 6.00 மணி வரையாகும்.இதில்,ஞாயிற்றுக்கிழமையன்று இதே நேரத்தில் தான் இராகு காலமும் அமைந்திருக்கிறது.இந்த நேரத்தில் தான் சிவபெருமானின் நேரடி அவதாரமான பைரவ வழிபாட்டைத் துவக்க வேண்டும்.

இதே நேரத்தில் துர்கை அல்லது உக்கிரமான பெண் தெய்வத்தின் வழிபாட்டையும் செய்ய ராகுவின் உக்கிரம் நம்மை பாதிக்காமல் வாழலாம்.



எதிர்வரும் சனிப்பிரதோஷம் 30.4.2011 சனிக்கிழமையன்று வருகிறது.இந்த நாளில் திருச்சி ஸ்ரீரங்கம் அருகிலிருக்கும் திருவானைக்கால் அல்லது நெருப்பு ஸ்தலமாகிய அண்ணாமலை அல்லது சிதம்பரம் அல்லது உங்கள் ஊரிலிருக்கும் பழங்கால சிவாலயம் அல்லது கொல்லிமலை அல்லது சித்தர்களின் வீடு சதுரகிரிக்குச் செல்லுங்கள்.

இந்த பிரதோஷ நேரத்தில் வழக்கம் போல்,மஞ்சள் விரிப்பில் அமர்ந்தும்,கழுத்தில் ருத்ராட்சம் அணிந்தும்,இரு உள்ளங்கைகளில் தலா ஒரு ருத்ராட்சம் அணிந்தும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவாருங்கள்.இந்த ஒன்றரை மணி நேரம் ஜபிக்க இயலாதவர்கள் மாலை 5.30 முதல் 6 மணி வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வாருங்கள்.

இந்த கோவில்களில் ஏதாவது ஒன்றுக்குச் செல்ல இயலாதவர்கள் அவரவர் வசிப்பிடத்தில் மாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வரவும்.



ஒரு சனிப்பிரதோஷத்தன்று ஒருவன் சிவாலயம் சென்றால்,ஐந்தாண்டுகள் தினமும் சிவாலயம் சென்ற புண்ணியம் கிடைக்கும்.

அந்த சனிப்பிரதோஷ நேரத்தில் ஏதாவது ஒரு சிவாலயம் சென்று ஓம்சிவசிவஓம் ஜபித்தால்?

(கலியுகத்தில் பிறந்த ஒவ்வொருவருமே கடுமையான கர்மங்களை அனுபவிக்கப் பிறந்தவர்களே! கர்மங்களைக் கழிக்க சுலப வழிமுறைகளில் ஒன்றே ஓம்சிவசிவஓம்!!!)

1 comment:

  1. ஒரு புதுமையான தகவல். தகவல் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete