சோலைமலை முருகன் கோயிலில் 35 ஆண்டுகள் கார்த்திகை மாதம் எங்களது "பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை" சார்பில் விருந்து அளித்துக்கொண்டு இருக்கின்றாம்.
13 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்தவர் தேனய்யா அவர்கள். அவர் மீனாட்சி கோயிலுக்கு இடமாற்றப்பட்ட போது. எனது தந்தை திரு சாமுண்டி விவேகானந்தன் அவர்களை அணுகினார். "திருக்கல்யாணத்தின் போது ஊழியர்களுக்கு ஓட்டலில் சாப்பாடு வாங்கி தந்து கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு நீங்கள் ஏதாவது செய்யக்கூடாதா' என்று கேட்டபோது, திருமண விருந்து யோசனை தோன்றியது. பொதுமக்கள் கொடுக்கும் பொருட்களை கொண்டு முதன்முதலில் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ளே செவ்வந்தீஸ்வரர் சன்னதி முன்பு 1500 பேருக்கு திருமண விருந்து
அளிக்க ஆரம்பித்தோம். இன்று வரை இது இறைவனின் அருளால் தடையின்றி நடந்து கொண்டு வருகிறது. அம்மன் சமைக்கிறார். நாங்கள் கரண்டியாக இருந்து பரிமாறுகிறோம்'' .
ஒவ்வொரு ஆண்டும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தன்று, 30,000 பேருக்கு பக்த சபை சார்பில், ஆடி வீதிகளில் விருந்து அளிக்கப்பட்டு வந்தது. கடந்தா இரண்டாண்டு பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு , காவல்துறை தடைவிதித்தனர்.இந்த ஆண்டு திருக்கல்யாணம் 15-04-2011 அன்று நடக்கிறது. இதை முன்னிட்டு, பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை சார்பில், மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திருக்கல்யாண விருந்து நடத்தப்படுகிறது. இந்த விருந்தில், பூந்தி, மூன்று வகை காய்கறிகள், அப்பளம், வடை, பாயாசம், சாம்பார், ரசம், மோர், வாழைப்பழம் இடம்பெறுகிறது.
14-04-2011 அன்று மாலை 5 மணி முதல் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் காய்கறி நறுக்குதல் போன்ற பணி துவங்குகிறது ,மாப்பிள்ளை அழைப்பு விருந்தில் கேசரி ,பொங்கல், வடை இடம்பெறும். விருந்துக்கு தேவையான மளிகைப் பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் கொடுக்கலாம்.
திருக்கல்யாண விருந்துக்கு சேவை செய்யஅழைக்கிறோம் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
"பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை"
C/o சாமுண்டி விவேகானந்தன்
சாமுண்டி பாக்கு
New 41 old 20/3 மேலக்கோபுரத்தெரு
மதுரை -625 001
cell:9442408009 , Shop:0452 2345601
No comments:
Post a Comment