மதுரையில் வாழ்ந்து வரும் ஒரு நடுத்தரக் குடும்பம் அது.கணவர்,மனைவி இருவருமே நமது வலைப்பூ மூலமாக அறிமுகமாகி ஓம்சிவசிவஓம் ஜபித்து வருகின்றனர்.
இவர்களின் ஆன்மீகப் பாதுகாப்பாக ஓம்சிவசிவஓம் மாறிவிட்டது.இவர்களின் தினசரி வாழ்க்கையை சீராக,மகிழ்ச்சியாக,சிறப்பாக வைத்திருக்க ஓம்சிவசிவஓம் உதவுகிறது.இருவருமே தலா ஒரு மணி நேரம் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருகின்றனர்.
வாடகை வீட்டில் வாழ்ந்து,இருவருமே வேலைக்குச் சென்று இரு பருவ வயதுக் குழந்தைகளையும் வளர்த்து வருவது,மன்மோகன்சிங் இந்தியாவை ஆள்வதை விட கஷ்டமானது.# ஏன்யா நான் சரியாப் பேசுறேனா?
சரி,விஷயத்துக்கு வருவோம்.ஆண்டுத்தேர்வுகள் நிறைவடைந்துவிட்டன.மகனின் ஒன்பதாம் வகுப்பு முடிந்து,பத்தாம் வகுப்புக்குத் தயார் செய்வதற்காக கணித டியூசனுக்காக சரியான ஆசிரியரைத் தேடிக்கொண்டிருந்தனர்.கட்டணமோ மிக அதிகம்.அங்கே படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையோ ஏராளம்.
இவர்கள் கேள்விப்பட்ட டியூசன்களின் கட்டணமும் பிற விபரங்களும் இவர்களுக்கு திருப்தியில்லை;குடும்ப பட்ஜெட்டுக்கு ஒத்து வரவில்லை;இல்லத்தரசர் தொடர்ந்து மூன்று நாட்களாக ‘எனது மகனுக்கு குறைவான கட்டணத்தில்,நிறைவான கணித டியூசன் அமையவேண்டும்’ என்ற கோரிக்கையோடு ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தார்.
நான்காவது நாளாக,ஒன்றாம் வகுப்பு ஆசிரியையின் சந்திப்பு பல வருடங்களுக்குப் பிறகு அந்த தம்பதிக்கு மீண்டும் அமைந்தது.
அவர்கள் வாழ்ந்து வரும் பகுதியில் மிக அருகில்,குறைந்த கட்டணத்திலும்,சிறப்பான பயிற்சி தரும் ஆசிரியரும் அமைந்தது அவர்களுக்கு ஆழ்ந்த மன நிம்மதியைத் தந்தது.
அவர்களின் அனுமதியோடு இந்த வலைப்பதிவு வெளியிடப் படுகிறது.
No comments:
Post a Comment