Thursday, December 30, 2010

arrogent USA-1

உலக போலீஸ்காரனாக தன்னைக் காட்டிக் கொண்டு சர்வதேச நாடுகளை மிரட்டி வந்த அமெரிக்காவின் ஆணவத்திற்கு "விக்கிலீக்ஸ்" இணையதளம் கொடுத்த மரண அடியிலிருந்து இன்னமும் அந்த நாடு மீளாதபோதிலும், அந்நாட்டவர்களின் ஆணவம் இன்னும் குறையவில்லை என்பது கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.







" உலக நாடுகளையும், அதன் தலைவர்களையும் நாங்கள் உளவு பார்த்து அவர்களை எங்களது கட்டளைக்கு ஏற்ப ஆட்டுவிப்போம்.ஆனால் எங்களை யாரும், எந்த நாடும் கேள்வி கேட்க கூடாது அல்லது கேட்கவும் முடியாது. அதேப்போன்று எங்களது அரசு நடவடிக்கைகளையும் யாராலும் சரியாக உளவு பார்க்க முடியாது...!" என்றெல்லாம் ஏக திமிர்த்தனத்துடனும், சண்டித்தனத்துடனும் கடந்த காலங்களில் அமெரிக்க அதிகார தலைமையில் உள்ளவர்கள் மட்டுமல்லாது, அந்நாட்டு மக்களுமே பேசி வந்தனர்.






மனித உரிமைகள், போர்க்குற்றம் போன்றவை குறித்து அடுத்த நாடுகளை கண்டித்து வந்த அமெரிக்கா, தங்கள் நாட்டிற்கு அது பொருந்தாது; தாங்கள் விதிவிலக்கானவர்கள் என்பது போன்றே நடந்து வந்தது.






அதற்கு சமீபத்திய உதாரணம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க படையினர் புரிந்த அட்டூழியங்கள்!குறிப்பாக ஈராக்கில் பொதுமக்கள் என்று நன்கு தெரிந்தும், அவர்கள் மீது குண்டு வீசி கொன்றதும், அரசியல் கைதிகளாக பிடிபட்ட சதாம் உசேன் ஆதரவாளர்களை சிறையில் கொடூரமாக சித்ரவதை செய்ததும் உலகறிந்த உண்மை!






அதேப்போன்று அணு ஆயுத விவகாரத்திலும் தங்களுக்கு ஒரு நியாயம், மற்றநாடுகளுக்கு ஒரு நியாயம் என்றே அமெரிக்க தலைவர்களும், அதன் அரசு அதிகாரிகளும் பேசி வந்தனர்.






இந்நிலையில்தான் அமெரிக்காவின் இந்த ஆணவத்திற்கும், திமிருக்கும் சம்மட்டி அடி கொடுப்பதுபோல், பல்வேறு உலக நாடுகளிலிருந்தும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் தங்கள் நாட்டு அரசு தலைமைக்கு அனுப்பி வைத்த ரகசிய ஆவணங்களை தனது இணைய தளத்தில் வெளியிட்டது "விக்கிலீக்ஸ்" !






ஒவ்வொரு நாடுகளின் நடவடிக்கைகள் மற்றும் அதன் தலைவர்கள் பற்றிய நையாண்டி குறிப்புகளுடன் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அனுப்பிய தகவல்கள் விக்கிலீக்ஸில் வெளியானபோது, நடுவீதியில் ஆடையிழந்து அம்மணமாக நிற்பது போன்ற நிலைக்கு ஆளானது அமெரிக்கா!






தங்களைப் பற்றிய அமெரிக்காவின் மதிப்பீடு அல்லது எண்ணம் என்ன என்பது ஒவ்வொரு உலக நாடுகளுக்கும், அதன் தலைவர்களுக்கும் தற்போது தெரிந்துவிட்டதால், வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் உள்ளுக்குள் அமெரிக்கா மீது கறுவிக்கொண்டுதான் உள்ளனர்.

No comments:

Post a Comment