* நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கணினியின் வேகத்தில்
ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக ஆண்டிவைரஸ்
மென்பொருள் கொண்டு கணினியை சோதியுங்கள்.
* ஜீமெயில் பயன்படுத்துபவராக இருந்தால் பாஸ்வேர்ட்
ரெக்கவரியில் உங்கள் அலைபேசி எண்ணை சேமித்துவிடுங்கள்.
* அனைத்து இமெயில் Contact -ம் அவ்வப்போது சேமித்து
வையுங்கள்.
* இமெயில் உருவாக்கிய தேதியையும் செக்யூரிட்டி கேள்வியின்
பதிலையும் குறித்துவைத்துக்கொள்ளுங்கள்.
* சொந்தக்கணினி பயன்படுத்துபவராக இருந்தால் இமெயிலுக்கு
தனி உலாவியையும் , மற்ற வேலைகளுக்கு தனி உலாவியையும்
பயன்படுத்துங்கள்.
* எக்காரணம் கொண்டும் பாஸ்வேர்ட் நம் கணினியில் சேமித்து
வைக்காதீர்கள். ஒவ்வொரு முறையும் தட்டச்சு செய்து உள்ளே
செல்லுங்கள்.
* நம் இமெயிலுக்கு வரும் எந்த லிங்கையும் சொடுக்காதீர்கள்
அது பேஸ்புக் வாழ்த்தாக இருந்தாலும் சரி சொடுக்கவே கூடாது.
* பல இமெயில் இருந்தால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கடவுச்சொல்
வைக்கவும்,ஒரே கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டாம்.
இதைத் தவிர பிரெளவ்சிங் செண்டர்களில் நாம் இமெயில் திறக்கும்
முன் அந்த கணினியில் கீலாக்கர் போன்ற எந்த மென்பொருளும்
இருக்கிறதா என்று சோதிதபின் பயன்படுத்துங்கள்.
Trojan code - கொண்டு யாருடைய இமெயில் கடவுச்சொல்லையும்
எந்த இணையதளத்தையும் கொள்ளை அடிக்கலாம் என்பது முற்றிலும்
உண்மை தான்.என்ன தான் செக்யூரிட்டி இருந்தாலும் எவ்வளவு பெரிய
இணையதளம் ஆனாலும் கணினி கொள்ளையர்கள் கண்ணில் இருந்து
தப்ப முடியாது.
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் இதை ஒழிக்க
முடியாது.
கணிப்பொறியை பலப்படுத்த Firewall Install செய்யுங்கள் நல்ல இலவச Firewall இங்கு கிடைக்கும்
ReplyDeletehttp://download.cnet.com/ZoneAlarm-Free-Firewall/3000-10435_4-10039884.html
இதன் மூலம் யாரும் உங்கள் அனுமதி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது ஓர் அளவு வரை நிச்சயம் பாதுகாக்கும்.
கீழ் கண்ட இலவச மென்பொருள் எல்லா virus,trojan எதுவாக இருந்தாலும் நிச்சயம் அழிக்கும்.
http://download.cnet.com/Malwarebytes-Anti-Malware/3000-8022_4-10804572.html
மிக்க நன்றிகள்.சகோதரா!
ReplyDelete