Thursday, July 29, 2010

இந்துக்குடும்பங்கள் எப்படிச் சிதைகின்றன?பாகம் 2 லிருந்து நாம் அறிய வேண்டிய பாடம்:பகுதி 1

இந்துக்குடும்பங்கள் எப்படிச் சிதைகின்றன? பாகம் 2 இலிருந்து நாம் அறிய வேண்டிய பாடம்

ஒரு தம்பதிக்கு மூன்று மகன்கள்;மூத்தவன் முதுஅறிவியல் கணிதம் (எம்.எஸ்.ஸி.,மேத்ஸ்)முடித்து,கல்வியியலில் இளங்கலை (பி.எட்) முடித்தான்.நான்கு முறை ஆசிரியர்த் தேர்வு (TRB)எழுதி,நான்காம் தடவையில் அரசுப்பள்ளியில் ஆசிரியர் பணிக்குச் சேர்ந்துவிட்டான்.

அவனது அம்மாவோ,நன்கு யோசித்துப்பார்க்கையில் இந்த மூன்று மகன்களுமே அவரவர் திருமணத்துக்குப் பிறகு தன்னைக் கவனிக்கப்போவதில்லை என்பதை உணர்ந்துகொண்டாள்.அதனால்,மூத்த மகனின் திருமணத்தை தள்ளிப்போடும் வேலையைச் செய்தாள்.

பெண் பார்க்கும் படலத்தை ஏற்பாடு செய்வாள்.பெண்ணின் வீட்டினர் தேடிவந்து ரகசியமாக விசாரிப்பர்.பெண் பார்க்கும் படலத்தில் ஓரளவு விட்டுக்கொடுத்தாவது இந்த அரசு மாப்பிள்ளைக்கு மணம்முடிக்க திட்டமிடுவார்.பெண்ணைப் பார்த்ததும்,அரசு ஆசிரியர் பெண்ணைப் பிடித்திருக்கிறது என்றும் சொல்லுவான்.

பெண் பார்த்து விட்டுப் போனப்பிறகு,பெண்ணின் வீட்டினர் வந்தாலோ,ஆள் அனுப்பினாலோ முறையான பதில் சொல்லுவதில்லை.இதனால் திருமணம் நின்றுவிடும்.நிச்சயதார்த்தம் வரை கூட செல்லாது.இப்படியே சுமார் 5 திருமண நிகழ்ச்சிகளை நிறுத்தி வைத்துவிட்டாள்.

இந்நிலையில் ஒரு ஜோதிடரிடம் தனது மகனுக்கு எப்போது திருமணம் அமையும்? என்பதை அறிய அந்த அம்மா சென்றாள்.அவரோ இவளின் தந்திரத்தை புரிந்துகொண்டார்.அதே சமயம்,அவரும் திருமண வயதில் ஒரு மகளை வைத்திருந்தார்.இவளை விட தந்திரமாக தனது மகளுக்கு,அந்த அரசு ஆசிரியரை மணம் செய்து வைத்துவிட்டார்.

அரசு ஆசிரியருக்கும்,ஜோதிடரின் மகளுக்கும் திருமணம் ஆன 70 நாட்களில் 7 முறை கணவனுக்கும் மனைவிக்கும் சண்டையும்,சமாதானப் படலமும் நடைபெற்றது.80 நாளுக்குள் அவர்கள் முறைப்படி பிரிந்தனர்.ஒராண்டுக்குள் மனமொத்து விவாகரத்து வாங்கினர்.இது ஓரளவு எல்லோருக்கும்/எல்லா தமிழக நகரங்களிலும் நடக்கும்/நடந்துகொண்டிருக்கும் நிஜக் கதை.

இந்தக் கதையின் பின்னணியையும்,ஏன் இப்படி திருமணமான இரு மாதங்களுக்குள் பிரிந்தனர்? என்பதைக் கண்டறிய எனக்கு சுமார் மூன்று வருடம் ஆனது.அந்தக் காரணங்கள் சொல்லும் நீதி நமது தர்மம் மிகு தமிழ்நாட்டையும்,பெற்றோர்களின் மன நிலை மாறுபாட்டையும் அதனால் ஏற்படும் சமுதாய மாற்றங்களையும் இங்கே இப்போது பார்க்கப் போகிறோம்.

தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால்,அவன் பணிபுரியும் நிறுவனங்களின் நிலை உயரும்.நிறுவனங்களின் நிலை உயர்ந்தால்,அந்த நிறுவனங்களின் மாநிலத்தின் நிலை மெருகு பெறும்; மாநிலங்களின் நிலை மெருகுபெறும் போது,அந்த நாடு வளமும் பலமும் பெறும்.”என சுவாமி விவேகானந்தர் ஒரு முறை கூறியிருக்கிறார்.

ஆனால்,நடைமுறை வாழ்க்கையில் தனி மனிதனின் நிலை கேவலமாகத் தான் இருக்கிறது.பெரும்பாலான தமிழ்நாட்டுப் பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்காக ஓடி ஓடி சம்பாதிக்கின்றனர்.தமது குழந்தையின் ஆளுமைத்திறன், பண்பாடு,சுபாவம்,திறமையை முறைப்படுத்தவும்,ஒழுங்குபடுத்தவும் தவறிவிடுகின்றனர்.இதன் விளைவே மேலே விவரித்த ஒரு தம்பதி பிரிந்த கதை.

அந்தக் நிஜக் கதையின் பின்னணியை விசாரித்து,கிடைத்த தகவல்களின் நம்பகத்தன்மையை பலமுறை உறுதிசெய்து,அந்தத் தகவல்களில் ஒளிந்திருந்த பொய்களைக் களைந்து,நிஜமான காரணங்களைக் கண்ணால் பார்க்கும்போது அதிர்ச்சியே ஏற்படுகிறது.


எது எதற்கோ சர்வே எடுக்கும் அரசாங்கங்கள்,அரசியல் கட்சிகள்,நடிகர்கள்,வணிக நிறுவனங்கள் இந்தியாவில் குடும்ப அமைப்பு எப்படி சிதைகின்றது? அந்த சிதைவை தடுத்து நிறுத்துவது எப்படி? என்பது பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை.
இந்தியாவை சிதைத்து, இந்து தர்மத்தின் வேர்களை சிதைத்து, யார் ஆளும் கட்சியாகி என்ன லாபம்?இந்தியா வல்லரசாகி இந்த பூமிக்கு என்ன நன்மை கிடைத்துவிடப்போகிறது? சொல்லுங்கள்:

No comments:

Post a Comment