ஜோதிடரை எப்போதெல்லாம் சந்திக்கலாம்?
வியாழன், 1 ஜூலை 2010( 20:18 IST )
தமிழ்.வெப்துனியா.காம்: ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் சென்று மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது என்பது தற்பொழுது நடைபெறுகிறது. 6 மாதத்திற்கு ஒரு முறை ஒரு வருடத்திற்கு ஒரு முறை என்று. இதேபோல தனி மனிதர்களும் செய்கிறார்கள். இதேபோல ஒவ்வொரு குடும்பமும் ஒரு குறிப்பிட்ட காலவரையில் ஜோதிடரை நாடி நல்லது, கெட்டது அறிந்துகொள்ள வேண்டும் என்பது அவசியமா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: கடந்த வாரம் ஒருவர் வந்திருந்தார். அவருக்கு சனியும், செவ்வாயும் ஒன்றாக இருந்து, செவ்வாய் தசை தற்பொழுது தொடங்கியிருக்கிறது. நீங்க தைராய்டு செக் பண்ணிக் கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தேன். அதை அவர்களும் செய்து பார்த்துவிட்டு, ஹார்மோன்ஸ் பிரச்சனை ஆரம்பமாகி இருப்பது தெரியவந்துள்ளது என்று மருத்துவர் சொல்லியிருக்கிறார் என்று கூறினார்கள். அவர்களுக்கு ஒரே சர்ப்ரைஸ். எப்படி சார், இதெல்லாம் விட்டுவிட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும். தொடக்கத்தில் வந்துவிட்டீர்கள் என்று டாக்டரே சொல்லியிருக்கிறார். உங்களுக்கு பாதிப்பு இருக்காது, மருந்து கொடுத்து கட்டுப்படுத்திவிடலாம் என்றும் சொல்லியிருக்கிறார்.
இதுபோல, ஜோதிடரைப் பின்பற்றுவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வந்து, சார் ஏழரைச் சனி தொடங்கியிருக்கிறது, எதில் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு, ஜாமீன் கையெழுத்தெல்லாம் போடாதீர்கள். கையெழுத்திட்ட செக் போன்றவற்றை வைத்துக் கொள்ளாதீர்கள், முக்கியமான பொருட்களையெல்லாம் இரவல் தராதீர்கள், இரவலும் வாங்காதீர்கள் என்பது போன்ற ஆலோசனைகள் கூறுவது உண்டு.
கல்யாணத்திற்கு போனால் நெக்லஸ் தருவது, வாங்குவது, பிறகு காணாமல் போவது. 5 பவுனை 7 பவுன் என்று அவர்கள் கேட்டு வாங்குவது. நீங்கள் தரவும் தராதீர்கள், வாங்கவும் வாங்காதீர்கள். ரெக்கார்ட் பூர்வமாக எதையும் செய்யாதீர்கள். ஏதாவது கேட்கிறார்களா, உங்கள் கையில் இருப்பதை கொடுங்கள். ஆனால், லோன் விவகாரத்தில் நீங்க போய் நின்று மாட்டிக் கொள்ளாதீர்கள்.
ஏழரை சனி இல்லாத காலகட்டத்தில் நல்ல தசா புக்தி இருக்கிற காலகட்டத்தில் செய்யுங்கள் என்று சொல்வதும் உண்டு. தற்பொழுது சுக்ர திசை ஆரம்பமாகியிருக்கிறது. இனிமேல் இந்த சுக்ர திசை மிகப்பெரிய ராஜயோகத்தை கொடுக்கும். ஒரு குறிப்பிட்ட தொகையை ஏழைப் பெண்கள் கல்யாணம், அவர்கள் பிள்ளைகளுக்கு உதவுவது. இதுபோன்ற தெரிந்தவர்களுக்கு, ஓட்டுநர் வைத்திருக்கிறீர்கள். அவருக்கு ஏதாவது செய்யுங்கள்.
இப்ப, நிறைய பெரிய நபர்களைப் பார்க்கும் போது வெளியில் யார் யாருக்கோ எத்தனையோ லட்சக் கணக்கில் செலவு செய்கிறார்கள். கூடவே 15 வருடமாக கார் ஓட்டீக் கொண்டிருப்பார். அவருக்கு எதையுமே செய்யாமல் விட்டுவிடுகிறார்கள். பக்கத்திலேயே இருந்துகிட்டு புலம்பிக்கொண்டு, உள்ளுக்குள் அழுது கொண்டு, சபித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய அழுகுரல் இவர்களுக்கு கேட்பதே இல்லை. இதையெல்லாம் சொல்லி அனுப்புவது உண்டு. 400 கிலோ மீட்டர் போய் ஒரு கல்யாணத்தை நடத்தி வைத்துவிட்டு வருகிறீர்கள். ஆனால், அந்த 400 கிலோ மீட்டருக்கும் உங்களை அழைத்துக் கொண்டு போய் வருகின்ற டிரைவர் வீட்டில் ஒரு கல்யாணம் என்றால், 500 ரூபாயும், வேட்டி சட்டையும் கொடுத்து விட்டுவிடாதீர்கள். ஏதாவது ஒரு செலவை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நல்ல திசைகள் ஆரம்பிக்கும் போது, இனிமேல் உங்களுக்கு எல்லாமே யோகமாக நல்லதாக நடக்கும்.
செவ்வாய் யோக அதிபதியாக இருந்து யோக திசை நடக்கும் போது ரத்த தானம் செய்யுங்கள். அடிபட்டு காயப்பட்டுக் கிடப்பவர்களை குறைந்தபட்சம் காரில் ஏற்றிச் சென்று மருத்துவமனையிலாவது சேர்த்துவிட்டுப் போங்கள் என்றெல்லாம் சொல்வதுண்டு. சனி தசை, யோக தசை எவ்வளவோ பேருக்கு காசை கொட்டிக் கொடுக்கிறது. அவர்களுக்கெல்லாம், ஊனமுற்றவர்கள், மனவளம் குன்றியவர்கள், அகதிகளாக வந்தவர்கள், இடமில்லாமல் தவிப்பவர்கள் போன்றவர்களுக்கெல்லாம் உதவி செய்யுங்கள்.
இப்ப, ராகு திசையில் இருப்பவர்களுக்கு, வாழ்க்கைத் துணையைப் பிரிந்தவர்கள். கணவர் இல்லாமல் அல்லது மனைவி இல்லாமல் கணவர் இருப்பவர்கள் அவர்களுடைய குழந்தைகளுக்கு கல்விக்கு உதவுதல், வீடு எடுத்துக் கொடுப்பது அல்லது வேலை வாங்கிக் கொடுப்பது இதுபோன்றெல்லாம் சொல்வது உண்டு.
No comments:
Post a Comment