Saturday, July 31, 2010

சனிபகவானை மகிழ்விக்கும் துதி(ஏழரைச் சனி,அஷ்டமசனிக்காரர்களுக்கு)

சனிபகவானை மகிழ்விக்கும் துதி

தினமும் வரும் சனி ஓரை நேரத்தில் பின்வரும் பாடலை மனதுக்குள் எட்டு முறை ஜபித்துவந்தால்,சனியால் ஏற்படும் (அஷ்டமச்சனி,ஏழரைச்சனி,அர்த்தாஷ்டமச் சனி)
துன்பங்கள் குறையும்.

காகத்தின் மீதினில் கருணையாய் வருபவர்
சோகமே தீர்த்து சுகமது தருபவர்
மோகமும் மூடமும் மோசமும் தீர்ப்பவர்
வேதனே மந்தனே வேண்டினேன் போற்றியே

இந்த மந்திரத்தை உபதேசித்தவர் ஸ்ரீலஸ்ரீதுர்க்கை சித்தர் சுவாமிகள்
.

3 comments:

  1. very useful.. all the slokas are good.im from chennai.

    ReplyDelete
  2. Dear sir,

    SANI ORAI NERAM ENPATHU EPPOLUTHU ?....... PLS TELL ME

    REG
    RADHA

    ReplyDelete
  3. திங்கட்கிழமைகளில் காலை 7 முதல் 8 மணி;மதியம் 2 முதல் 3 மணி வரை;இரவு 9 முதல் 10 மணி வரையிலும், செவ்வாய்க்கிழமை காலை 11 முதல் 12 மணி;மாலை 6 முதல் 7 மணி வரையிலும், புதன் கிழமை காலை 8 முதல் 9 மணி வரை;மதியம் 3 முதல் 4 மணி வரை;இரவு 10 முதல் 11 மணி வரையிலும், வியாழக்கிழமை காலை 5 முதல் 6 மணி வரை;மதியம் 12 முதல் 1 மணி வரை;இரவு 7 முதல் 8 மணி வரையிலும், வெள்ளிக்கிழமை காலை 9 முதல் 10 மணி வரை;மதியம் 4முதல் 5 மணி வரை;இரவு 11 முதல் 12 மணி வரையிலும், சனிக்கிழமை காலை 6 முதல் 7 மணி;மதியம் 1 முதல் 2 மணி வரை;இரவு 8 முதல் 9 மணி வரையிலும், ஞாயிறு காலை 10 முதல் 11 மணி வரை;மாலை 5 முதல் 6 மணி வரையிலும் சனி ஓரை வரும்.இந்த வரிசை ஒருபோதும் மாறாது.இதில் இந்த ஒரு மணி நேரமும் சனி மந்திரம் ஜபிக்கலாம்.இன்னும் துல்லியமாகவும்,முழுமையாகவும் பலன் பெற விரும்புவோர் முதல் 12 நிமிடங்களில் ஜபித்தால் பல நூறு மடங்கு புண்ணியமும் சனியாசியும் பெறலாம்.வாழ்க வளமுடன்.

    ReplyDelete