Thursday, July 29, 2010

எனது ஜோதிட அனுபவங்கள்-1

எனது ஜோதிட அனுபவங்கள்-1

எங்களுடைய ஊரில் ஒரு வக்கீல் இருந்தார்.அவர் எனது உறவினர் மூலமாக எனக்கு அறிமுகமானார்.அவரது வீட்டுக்குச் சென்று அவரது ஜாதகம்,அவரது மனைவி,மகளின் ஜாதகங்களைப் பார்த்தேன்.பார்த்து முடித்துவிட்டு,புறப்பட்டு பேருந்து நிறுத்தத்திற்கு வந்தபின்னரே அவர் கூறினார்.

எனது மகள் டிகிரி படிப்பாள் என உறுதியாக சொன்னீர்கள்.ஆனால்,இதுவரை நாங்கள் பார்த்த ஜோதிடர்கள் அனைவருமே உங்கள் மகள்பள்ளிப் படிப்பை தாண்டிட மாட்டாள் எனக் கூறியுள்ளார்களே? ஏன் இந்த வித்தியாசம்? எனக் கேட்டார்.

நான் யோசித்தேன்.இந்தக் கேள்விக்கு என்ன விடை சொல்வது என அவரது மகளின் பிறந்த ஜாதகத்தை மனக்கண்ணுக்குக் கொண்டு வந்து யோசித்துக் கொண்டிருந்தேன்.

அவரே எடுத்துக் கொடுத்தார்.

‘இல்லீங்க ஜோசியரே!

எனது மகளுக்கு புதன் நீசம்.இப்போ புதன் தசை நடக்குது.இது அவளின் 15 ஆம் வயது வரை நடப்பதால் அவள் பள்ளிப்படிப்போடு (படிப்பை)நிறுத்திவிடுவாள்’ என எல்லா ஜோதிடரும் சொல்லியிருக்கிறார்கள் என விளக்கினார்.

இப்போது எனக்குப் புரிந்துவிட்டது.உங்கள் மகளுக்கு தாய் மாமா இருக்கிறாரா? எனக் கேட்டேன்.

“இருக்கிறார்” என அந்த வக்கீல் சொன்னார்.

“சரி,அந்த தாய்மாமா உங்கள் மனைவியின் உடன் பிறந்தவரா? இல்லை சித்தப்பா பெரியப்பாவின் மகனா?” என கூர்மையாகக் கேட்டேன்.

அவரோ பதட்டத்தோடு, “இல்லையில்லை; எனது மனைவியின் சொந்தத் தம்பி” என அழுத்தந்திருத்தமாக சொன்னார்.

அப்போ,உங்க மகளுக்கு புதன் நீசமாக இருக்கிறது என அந்த ஜோதிடர்கள் சொன்னது பொய்.புதன் நீசமாக இருந்தால், தாய்மாமா இருக்கக் கூடாது.நீங்களோ தாய் மாமா இருப்பதாக சொல்கிறீர்கள்.எனவே, உங்கள் மகள் நிச்சயமாக பட்டப்படிப்பு படிப்பாள்” என ஆறுதல் கூறினேன்.

அவர் பரம திருப்தியடைந்தது அவரது முகத்தில் தெரிந்தது.

ஜோதிட விதிமுறைகள் பல இருக்கின்றன.ஒரு ஜாதகருக்கு தாய்மாமா இருக்கிறாரா? இல்லையா ?என்பதை அறிவதற்கே சுமார் 40 விதிகள் இருக்கின்றன.புதன் நீசம் என்பது ஒரு மேலோட்டமான சட்டென அடையாளம் கண்டுகொள்ளப்படக் கூடிய விதி.அவ்வளவே!

இதேபோலத்தான்,ஒருவருக்கு எப்போது திருமணம் நடக்கும்? என்று கேள்விகேட்டால்,அதற்கும் சுமார் 40 ஜோதிட விதிமுறைகள் இருக்கின்றன.நடைமுறை வாழ்க்கையில் பெரும்பாலான ஜோதிடர்கள் தினமும் ஜோதிடப் புத்தகங்களைப் படிப்பதில்லை.இதுதான் ஜோதிடம் ஒரு பிராடுத் தொழில் என்ற முடிவுக்கு மக்கள் வரக் காரணம்,

No comments:

Post a Comment