சதுரகிரியில் நிகழ்ந்த ஒரு அதிசய சம்பவம்:
கட்டைவிரல் அளவே காட்சி தந்த சித்தர்
ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு ஒன்றியத்தின் எல்லையில் சதுரகிரிக்கு ஒரு லட்சம் பக்தர்கள் வருகிறார்கள்.இங்கு ஒரு முறை அமாவாசைக்கு சதுரகிரி மலை ஏறும்போது அத்தி ஊத்து என்னும் இடத்தில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த க.தேவன் என்பவர் தனது நண்பர்களோடு சிறிதுநேரம் தங்கி இளைப்பாறினார்.அப்போது குடிப்பதற்கு தண்ணீர் எடுக்க ஒரு பாத்திரத்துடன் நீர்நிலையின் அருகே சென்றார்.ஒரு தொட்டி அளவிற்கு தண்ணீர் பளிச் சென தேங்கி நின்றது.அதில் பாத்திரத்தை குளத்தில் வைக்கச் செல்லும் போது அவருக்கு ஒரு காட்சி பெரும் வியப்பைத் தந்தது.
நமது கட்டைவிரல் அளவில் ஒரு மனிதன் நீரில் விழுவதும் எழுவதுமாக விளையாடிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்தார்.அப்போது அவரது குழுவில் உள்ள ஒருவர் திடீரென இவரைப் பார்த்துக் குரல் கொடுத்தார். அந்தக் குரல் கட்டைவிரல் அளவுள்ள மனிதருக்கும் கேட்டிருக்கும் போல அதே சமயம் தேவனும் அவர் நண்பரும் ஒரு வேட்டியில் அந்த கட்டைவிரல் மனிதரைப் பிடிக்க யத்தனித்தனர். அப்போது அந்த கட்டைவிரல் அளவுள்ள மனிதர் தண்ணீரிலிருந்து மேலே வந்து மறைந்துவிட்டார்.
அப்படி மறையும்போது ஓம் என்ற ஓங்கார ஓசை தேவன் காதுகளில் ஒலித்தது. ‘கட்டைவிரல் மனிதன்’ நீரில் இருந்து வெளியே வரும்போது அபரிதமான ஒலியுடன் கூடிய சபதம் கேட்டது.
அந்த குழுவில் விபரமறிந்தவர் கட்டைவிரல் மனிதர் ஒரு சித்தரேதான் எனக்கூறினார்.
நன்றி:சதுரகிரி ஆன்மீக மாதப் பத்திரிகை(இலவச வெளியீடு)
தனிச்சுற்றுக்கு மட்டும்
இன்னொரு ஆன்மீகக் குறிப்பு:திடியன் மலை என்று ஒரு சிவாலயம் இருக்கிறது;திருமங்கலம் டூ உசிலம்பட்டி சாலையில் உசிலம்பட்டியில் இருந்து 8 கி மீ தொலைவில் சாலையோரத்தில்,மலையடிவாரத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது;
இங்கே இருக்கும் தட்சிணாமூர்த்தி மிகவும் வித்தியாசமானவர் ஆவார்;இவரது சன்னதியில் பீடங்கள் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும்;அப்படி தான் நாம் பார்த்திருப்போம்;இங்கே அவரது 16 சீடர்கள்,ரிஷிகள் தோற்றத்தில் உபதேசம் கேட்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கின்றது;
ஒவ்வொரு பவுர்ணமியும் இங்கே கிரிவலம் வருவதால்,அக்யூ ஹீலிங்,ப்ராணிக் ஹீலிங் பயிற்சியாளர்கள் மற்றும் ஹீலர்களுக்கு அபரிதமான ஆற்றல் கிடைக்கும்;108 பவுர்ணமிகள் இங்கே கிரிவலம் நிறைவு செய்பவர்களுக்கு இதே கட்டைவிரல் அளவுடைய சித்தர்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும் என்பது அனுபவ உண்மை!!!
முகவரி:ந.ராதாகிருஷ்ணன்
அருப்புக்கோட்டை.
மற்றும்
த.ச.தவசிமணி (இணை ஆசிரியர்)
திரைப்படபாடலாசிரியர்
25,கணபதி தெரு,மேற்கு மாம்பலம்,
சென்னை-33.

No comments:
Post a Comment