பைரவரை ஏன் ராகு காலத்தில் வழிபட வேண்டும்?
உங்கள் உயிர் முதல் உலகத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்கள்,ப்ரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து கோள்களையும் இயக்கி வருபவர் கால
தேவன் என்ற மஹா கால பைரவர் ஆவார்;
இவர் சதாசிவன் என்ற அருணாச்சலேஸ்வரரின் ஆணைப்படி,அவரது பெயரால் ஆட்சி
புரிந்து வருகிறார்;எல்லா ஆலயங்களிலும் ஷேத்திர பாலர் என்ற பெயரில் வடகிழக்கு மூலையில்
இருந்து அருள்பாலித்து வருகிறார்;
1925 வரையிலும் கூட நமது பாரத நாட்டில் பெரும்பாலான பூசாரிகள் மனசாட்சிக்குப்
பயந்து கோவிலில் பணிபுரிந்து வந்தார்கள்;அவர்கள் ஆத்ம பலம் மிக்கவர்களாக இருந்தார்கள்
என்பதற்கு ஒரு சிறு உதாரணச் சம்பவத்தை இங்கே தெரிவிப்பது எமது கடமை ஆகும்;
ஒவ்வொரு நாளும் ஆலயத்தின் இரவு நேர பூஜை முடிந்த பின்னர்,கோவிலின் கோபுர வாசல் சாவியை மட்டுமே வீட்டிற்கு கொண்டு செல்வது
வழக்கம்;மீதி சன்னதிகளின் சாவிக் கொத்தினை கால பைரவரின் பாதத்தில் வைத்து பூஜித்து,அவரது
சன்னதிக்கு அருகில் இருக்கும் கிணற்றினுள் போட்டுவிடுவது வழக்கமாக இருந்தது; மறுநாள்
காலையில் கோபுர வாசல் கதவை திறந்து கோவிலுக்கு உள்ளே செல்லும் போது,முதல் நாள் கிணற்றில்
போட்ட சாவிக் கொத்து,கால பைரவப் பெருமானின் பாதத்திற்கு அருகில் இருக்கும்; இந்த பழக்கம் சுமாராக 20,000 ஆண்டுகளாக இருந்து
வந்துள்ளது;இந்த ஆன்மிக மரபு 2008 வரையிலும் கூட தமிழ்நாட்டில் சில ஆலயங்களில் மட்டும்
ஒரு சில பூஜாரி/பட்டர்களின் ஆன்ம வளத்தினால்,ஆத்ம சக்தியால் நடைமுறையில் இருந்தது;
அமுதத்தைப் பெற பாற்கடலில் அசுரர்களும்,தேவர்களும் கடும் முயற்சி எடுத்தார்கள்;அதில்
கிடைத்த அமுதத்தை அசுரர்களுக்கு கிடைக்காமல் செய்து,தேவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்
விதமாக மஹாவிஷ்ணு மோகினி வடிவம் எடுத்தார்;அப்போது,இரண்டு அசுரர்கள் மட்டும் தேவர்கள்
வடிவம் எடுத்து தேவர்கள் வரிசையில் நின்றார்கள்;இதைக் கண்டுபிடித்த மஹாவிஷ்ணு,அவர்களை
வாளால் வெட்டிவிட,அவர்கள் ராகு,கேதுவாக மாறினார்கள்:ஆனால்,நவக்கிரகமாக பதவியைப் பெறவில்லை;
மஹாவிஷ்ணுவால் தண்டனை பெற்ற அசுரர்கள்,கால தேவனாகிய மஹா கால பைரவப் பெருமானைச்
சரணடைந்தார்கள்;தங்களுக்கு சாப விமோசனம் பெற வேண்டி அழுதார்கள்;அவர்கள் சார்பாக,மஹா
கால பைரவப் பெருமான்,மோகினி வடிவில் இருந்த மஹாவிஷ்ணுவிடம் பரிந்துரைத்தார்;அப்படி
பரிந்துரைத்த நாள் தான் நாக சதுர்த்தி;நவக்கிரகங்களில் ராகு,கேதுவாக பரிணமித்து,கலியுக
மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு ஆற்றுவீர்களாக என்று வரம் தந்தார் மஹாவிஷ்ணு!
இதனால் அகமகிழ்ச்சி அடைந்தார்கள் அந்த இரண்டு அசுரர்களும்! அன்று முதல்
ராகு காலத்தில் கால பைரவரை வழிபடுவதும்,ஜபிப்பதும்,அபிஷேகம் செய்வதும் நமக்கு அளவற்ற
நன்மையைத்தரும் என்ற மரபு உண்டானது;
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
ஓம் சம்ஹார பைரவாய நமஹ
No comments:
Post a Comment