Wednesday, September 11, 2019

உன்னதமான வாழ்க்கையைத் தரும் மஹாளய அமாவாசை தர்ப்பணம்!!!


உன்னதமான வாழ்க்கையைத் தரும் மஹாளய அமாவாசை தர்ப்பணம்!!!

உங்கள் வாழ்க்கை இந்த அளவுக்காவது நிம்மதியாகவும்,வளமாகவும்,புகழுடனும்,செல்வச் செழிப்புடனும் இருக்க நீங்கள் போன நான்கு பிறவிகளில் செய்த புண்ணியச் செயல்களின் தொகுப்புதான் காரணம்!ஆனால்,நீங்கள் எடுக்கவேண்டிய பிறவிகள் இன்னும் 20,000 முதல் 3,00,00,000 இருக்கின்றன;

உங்கள் வாழ்க்கை இந்த அளவுக்கு கொடூரங்கள்,வேதனைகள்,துயரங்கள்,துரோகங்கள், தோல்விகளுக்கு உங்களுடைய போன நான்கு பிறவிகளில் நீங்கள் செய்த பாவங்கள் மட்டும் காரணம் அல்ல;இப்பிறவியில் மாதம் தோறும் வரும் அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்யாமல் இருப்பதும் தான்!

ஆண் வாரிசுகள் இல்லாத மகள்கள் தமது இறந்த பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகளுக்கு தர்ப்பணம் செய்யலாம்;வெள்ளை எள் வைத்து தர்ப்பணம் செய்யலாம் என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன;

ஒவ்வொரு மாதமும் தர்ப்பணம் தர முடியாத அளவுக்கு நம் ஒவ்வொருவரது வாழ்க்கையும் பிஸியாகிவிட்டதால்,அதற்கும் மாற்று ஏற்பாடுகளை முன்னோர்களாகிய சித்தர்களும்,ரிஷிகளும் வகுத்துள்ளார்கள்;ஒரு ஆண்டில் ஆடி அமாவாசை,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை என்று மூன்றே மூன்று அமாவாசைகளுக்கு தர்ப்பணம் தரலாம் என்று உபதேசம் செய்துள்ளார்கள்:அதுவும் முடியாதவர்கள்,ஒரு வருடத்தில் புரட்டாசி அமாவாசை அன்று மட்டுமாவது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்;

ஒரே ஒரு புரட்டாசி அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்தால்,அதற்கு முந்தைய 12 ஆண்டுகளுக்கு உரிய தர்ப்பணம் செய்த புண்ணியம் கிட்டும் என்பதையும் சித்தர் பெருமக்கள் நமக்கு உபதேசம் செய்துள்ளார்கள்:உதாரணமாக,2006 முதல் 2018 வரை பித்ரு தர்ப்பணம் செய்ய முடியாமல் இருந்தவர்கள்,இந்த புரட்டாசி அமாவாசை அன்று  28.9.2019 சனிக்கிழமை அன்று தர்ப்பணம் செய்தால்,2006 முதல் 2018 வரை பித்ருதர்ப்பணம் செய்த பலன் கிடைத்துவிடுகிறது;


14.9.2019 சனிக்கிழமை முதல் 28.9.2019 சனிக்கிழமை வரை மஹாளய பட்சம் அமைந்திருக்கின்றது;இந்த 14 நாட்களில் இறுதி இரண்டு நாட்கள் மட்டும் நமது முன்னோர்களாகிய பித்ருக்கள் நமது வீடுகளுக்கு சூட்சுமமாக வருகைதந்து தங்குவது வழக்கம்;     28.9,2019 சனிக்கிழமை அன்று விகாரி வருடத்தின் புரட்டாசி அமாவாசை வருகின்றது;அன்றுடன் மஹாளய பட்சம் நிறைவடைகின்றது;

இந்த 14 நாட்களும் இல்லறவாசிகளாகிய நாம் கண்டிப்பாக தாம்பத்தியத்தை தவிர்க்க வேண்டும்;அப்படி தவிர்த்துவிட்டு,தினமும் பித்ரு தர்ப்பணம் செய்வதை பித்ருக்கள் விரும்புகிறார்கள்:பொருளாதார நெருக்கடி,வேகமான வாழ்க்கை,தகுந்த அந்தணர் கிடைக்காமை,வெளிநாட்டில் வேலை பார்த்தல்,ஏழரைச்சனியால் அவதிப்படுதல் போன்ற பல்வேறு காரணங்களால் 14 நாட்களும் பித்ரு தர்ப்பணம் செய்ய முடியாவிட்டாலும்,கடைசி நாளன்று மட்டுமாவது பித்ரு தர்ப்பணம் செய்தால் போதும்!


இதனால்,நீண்டகாலமாக இருந்து வரும் நமது ஏக்கங்களை பித்ரு தர்ப்பணம் செய்தவர்களுக்கு அவர்களுடைய முன்னோர்களாகிய பித்ருக்கள் நிறைவேற்றிவிடுவர்;அது மட்டும் அல்ல;இனிமேல் வர இருக்கும் விபத்து,அவமானம்,கடன்,விரக்தியையும் வரமுடியாத அளவுக்கு தடுத்து நம்மை பாதுகாத்துவிடுவர்;

இயற்கையான முறையில் இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய கடன் தான் பித்ரு தர்ப்பணம்!


செயற்கையான முறையில் இறந்தவர்களுக்கு ஒரே ஒரு முறை செய்ய வேண்டிய கடன் திலா ஹோமம் என்ற திலா தர்ப்பணம்!
பித்ரு தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற இடங்களில் முதன்மையானது விழுப்புரம் அருகில் இருக்கும்  திரு அண்ணாமலை! இரண்டாம் இடம் தான் ராமேஸ்வரம்;மூன்றாம் இடம் வாரணாசி என்ற காசி;நான்காம் இடம் கயா;அதன் பிறகு தான் பிற ஊர்களில் இருக்கும் கோவில் குளக்கரைகள் அல்லது நதிக்கரை ஓரங்கள்!
வசதியும்,வாய்ப்பும் உள்ளவர்கள் திரு அண்ணாமலையில் கிரிவலப் பாதையில் பித்ரு தர்ப்பணம் செய்யலாம்;முழுமையான பித்ரு தர்ப்பணம் செய்ய விரும்புவோர் 27.9.2019 வெள்ளிக்கிழமை வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று கிரிவலம் செல்ல வேண்டும்;மறு நாள் 28.9.2019 சனிக்கிழமை அன்று பித்ரு தர்ப்பணம் செய்யலாம்;


ஆர்வமும்,ஆசையும் இருந்தும் அவ்வளவு தூரம் சென்று பித்ரு தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள்,அவரவர்கள் வாழும் ஊரிலேயே இருக்கும் சிவாலயம்,விஷ்ணு ஆலயத்தின் குளக்கரை அல்லது நதிக்கரையோரம் செய்யலாம்;


பித்ரு தர்ப்பணம் செய்வதற்கு உரிய இடங்கள் தமிழ்நாடு முழுவதும் சுமார் 12,000 ஆலயங்கள் இருக்கின்றன;அவைகளை பட்டியல் இடலாம்;உங்கள் ஊரும்,ஊர் ஆலயமும் அதில் இடம் பெற்றுள்ளன;எனது சத்குரு வேங்கடராமசுவாமிகளின் திருவடிகளே சரணம்!!!

No comments:

Post a Comment