Friday, September 6, 2019

மறைக்கப்பட்ட இந்து அறிவியல் வரலாறு


மறைக்கப்பட்ட இந்து அறிவியல் வரலாறு

அ)எண்கணிதத்தின் தந்தை என மேற்குநாடுகளால் போற்றப்படுபவர் சீரோ ஆவார்.இவர் 1.11.1866 ஆம் தேதியன்று பிரான்ஸ் தேசத்தில் பிறந்தவர் என்பது எல்லோரும் அறிந்த செய்தி.இவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் காசி நகரத்தில் தங்கி, இந்துஜோதிடத்தை கற்றுக்கொண்டவர் என்பது சிலருக்குமட்டுமே தெரிந்த செய்தி!!!
ஆதாரம்:ஜோதிடபூமி,பக்கம்39,ஆகஸ்டு 2009.படத்தில் இருப்பவர் சீரோ

ஆ)ஆரியபட்டரின் மஹாஆரியபட்ட சித்தாந்தமானது இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிடி கல்லூரி நூலகத்தில் என்.எஸ்.ஆர் 15.99 என்ற எண்ணில் ஓலைச்சுவடிகளாக நம்நாட்டில் இருந்து கொண்டுசெல்லப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.
இதனுடைய போட்டோ நகலைப்பெறுவதற்குக் கூட நம் நாடு கி.பி.1909 ஆம் ஆண்டில் எண்ணற்ற தடைகளைத் தாண்ட வேண்டியிருந்தது.
இந்தத்தடைகளைப் பற்றி விரிவாக சவுகாம்பா ஸேன்ஸ்க்ரிட் பப்ளிகேஷன்ஸ்,வாரணாசி வெளியிட்டுள்ள ‘மஹா ஸித்தாந்த:’ என்ற நூலின் முகவுரையின் முதல் மூன்று பக்கங்களில் நாம் காணலாம்.
இவ்வாறு கடும்முயற்சிக்குப்பின் இதன் போட்டோ நகல் மட்டும் கிடைத்து புத்தகமாக வெளியிடப்பட்டுவிட்டது.
இவ்வாறு கிடைக்காமலேயே போயிருந்தால்,ஆரியபட்டர் மஹா ஆரியபட்ட ஸித்தாந்தம் என்றஒரு கணித வான சாஸ்திர நூல் எழுதியிருந்தார்.இதுவரை அந்நூல் கிடைக்கவில்லை என்றே நாம் முடிவுக்கு வரவேண்டியிருக்கும்.
இந்நூலில் உள்ள நுட்பமான கணித வான சாஸ்திர விஷயங்களை,இந்நூலைப் படித்த ஐரோப்பியர்கள் அவற்றாஇத் தாமே கண்டுபிடித்ததாகக் கூறியிருப்பர்.(இன்றைய பல நவீனக்கண்டுபிடிப்புக்கள் இப்படித்தான் நம்மிடமிருந்து கடன் வாங்கப்பட்டு அவைகள் அவர்களின் சொந்தக்கண்டுபிடிப்பாக உலக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.அவற்றில் விமானம்,வானொலி,அணுகுண்டு,ரேடாரில் சிக்காத விமானம்,ஏவுகணை ,எண்கணிதம், யோகா மருத்துவம்,மூலிகைகளின் மருத்துவ குணங்கள் என மிக நீளமானபட்டியல் உண்டு.)

மேலும் ஆர்யபட்டர் எழுதிய மூன்றாவது நூலான ‘லகு ஆர்யபட்ட ஸித்தாந்தம்’ என்ற நூல் இதுவரை கிடைக்கவில்லை.இவ்வாறு எண்ணற்ற நமது முன்னோர்களின் அறிவுப்பெட்டகங்களை இழந்து நிற்கிறோம்.அத்தோடு காணாமல் போன இந்த நூல்களின் நுட்பமான விஷயங்களைப் படித்தறிந்துகொண்ட ஐரோப்பியர் அவற்றை தாமே கண்டுபிடித்ததாகக் கூறவும் செய்தனர்.

No comments:

Post a Comment