அன்னை வராகி, இராமநாதபுரம் அருகில் அமைந்திருக்கும் உத்திரகோசமங்கை என்ற
சிற்றூரில்(ராமநாதபுரம் டூ தூத்துக்குடி சாலையில் 18 வது கி.மீ) ஆதி வராகி என்ற மங்கள
மகா காளியாக அருளாட்சி புரிந்துவருகிறாள்;இந்த அன்னை சுயம்புவாக உருவானதால்,சக்தி பலமடங்கு
அதிகம்;
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ப்ருகத் வராகியாக விவசாயத்தை வளமாக்கும்
அன்னையாக ஆட்சி புரிந்து வருகிறாள்;
காஞ்சிபுரத்திற்கும்,அரக்கோணத்திற்கும் நடுவில் பள்ளூர் என்ற கிராமத்தில்
அரசாலை என்ற பெயரில் இந்தப் பிரபஞ்சத்தை ஆண்டு வருகிறாள்;
திருச்சி திருவானைக்கா அருள்மிகு ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அகிலாண்டேஸ்வரியாக
அன்னை வராகி அருள்மழை பொழிந்து வருகிறாள்;
மதுரை மீனாட்சியும் அன்னையே!
காசி விசாலாட்சியும் அன்னை வராகியே!
பூமியில் இருக்கும் அனைத்து உக்கிரபெண் தெய்வங்களும் அன்னை வார்த்தாளியின்
ஆவரணதெய்வங்களே!!!
7.8.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதி வருகின்றது;இந்த
நாள் தான் ராஜராஜேஸ்வரியின் புருவ மத்தியில் இருந்து அன்னை வராகி தோன்றிய நாள்;
இந்த நாளில் மேலே தெரிவிக்கப்பட்டிருக்கும் ஆலயங்களில் ஒன்றிற்குச் சென்று,அன்னை
வராகியின் 12 பெயர்களை அன்று முழுவதும் ஜபிக்க வேண்டும்;இதன் மூலமாக அன்னையின் செல்லப்
பிள்ளையாக மாறும் பாக்கியம் நமக்குக் கிட்டும்;
ஓம் ரீங் வாத்தியார் ஐயா,வாத்தியார் ஐயா
பஞ்சமி
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரி
சமயசங்கேதா
வராகி
போத்ரிணி
சிவை
வார்த்தாளி
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரி
அரிக்னி
இந்த 12 பெயர்களை இந்த நன்னாளன்று முழுவதும் ஜபிப்பது அவசியம்;அன்னை
வராகியைச் சரணடைய விரும்புவோர் இந்த நாளில் அன்னையை வழிபட ஆரம்பிக்கலாம்;எப்படி வழிபடுவது?
இந்த 12 பெயர்களை ஜபிப்பதுதான்;
இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் அருகில் இருக்கும் சிவாலயம் அல்லது
அம்பாள் ஆலயத்திற்குச் சென்று ஜபிக்கலாம்;
இன்று முழுவதும் ஜபிக்க இயலாதவர்கள் காலையில் ஒரு மணி நேரமும்,இரவில்
ஒரு மணி நேரமும் ஜபிக்கலாம்;
ஆலயம் செல்ல கூட இயலாதவர்கள் வீட்டில் இரவில் ஒரு மணி நேரம் ஜபிக்கலாம்;
தொலைதூர தேசங்களில் வாழ்ந்துவரும் தமிழர்கள் அவரவர் வீட்டு பூஜை அறைகளில்
ஜபிக்கலாம்;
சென்னையில் வசிப்பவர்கள் திருவொற்றியூர் வடிவுடையம்மாள் ஆலயத்தில் ஜபிக்கலாம்;ஏனெனில்,இங்கேதான்
அருட்பிரகாசம் ராமலிங்க வள்ளலார் 38 ஆண்டுகள் ஒரு நாள் கூடவிடாமல் அன்னையை வழிபட்டு
ஒளி உடல் பெற்றார்!!!
ஓம் வராகி சிவசக்தி ஓம்
No comments:
Post a Comment