Thursday, July 7, 2016

பூரண ஆரோக்கியம் & ஆயுள் தரும் விசாக நட்சத்திர அன்னதானம்!


உலகங்கள் பல இருந்தாலும்,நாம் வாழ்ந்து வரும் இந்த உலகமே கர்ம உலகம்(கருமலோகம்) ஆகும்;

ஆமாம்!

வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உண்மைதான்;எதிர்கால விஞ்ஞானம் இதை கண்டுபிடிக்கும்;நமது முன்னோர்களாகிய சித்தர்களும்,மகான் களும் இதை பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்துவிட்டார்கள்;அந்த உலகங்களில் மனம்,பக்தி உணர்ச்சி,பாச உணர்ச்சி,துவேஷ உணர்ச்சி,பொறாமை உணர்ச்சி முதலான எந்த உணர்ச்சிகளும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றார்கள்;ஏலியன் என்று நாம் சொன்னாலும்,அவைகள் நம்மை விடவும் அறிவில் முன்னேறிய ரோபாட்டுகள் என்றுதான் (நம்முடைய) கண்ணோட்டத்தில் கூறமுடியும்;


ஒரு கட்டுரையை வாசிப்பதாலோ அல்லது ஒரு கஷ்டத்தினாலோ மனதில் பக்தி உணர்ச்சி தோன்றிவிடாது;பல பிறவிகளாக முயன்றால்,1% பக்தி உணர்ச்சி இப்பிறவியில் உண்டாக வாய்ப்புகள் உருவாகும்;

வெறும் சுற்றுலாவைப் போல,அருணாச்சலம் என்ற அண்ணாமலையை கிரிவலம் வந்தாலே நமக்குள் சிறிது சிறிதாக பக்தி உணர்ச்சி உருவாகும்;

ஒருவருடத்தில்(சித்திரை முதல் பங்குனி வரைதான் ஒருவருடம்! ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை இருப்பது ஒருவருடம் அல்ல) சுமாராக 12 முறையாவது அண்ணாமலை கிரிவலம் சென்று வந்தால்,நிச்சயமாக பக்தி உணர்ச்சி உருவாக வாய்ப்புகள் அதிகம்;கலியுகத்தில் தான் மனிதர்கள் பணத்தின் மீதும்,அழகின் மீதும்,அதிகாரத்தின் மீதும் அளவற்ற ஆசை வைக்கின்றார்கள்;அதில் இருந்து “நான் யார்?” என்ற ஆத்மவிசாரம் உருவாகுபவர்களுக்கு அண்ணாமலை கிரிவலம் தான் சிறந்த தூண்டுதல்!


100 வயது ஆயுள் என்று சொன்னாலும்,பெரும்பாலானவர்கள் 60 வயது,70 வயது,80 வயதிலேயே ஆயுள் முடிந்துவிடுகின்றது;நடுவயதைக் கடந்தாலே நம்மில் பெரும்பாலானவர்கள் கடன் அல்லது நோய் அல்லது பூர்வீகச் சொத்து சார்ந்த பிரச்சினை அல்லது வாரிசுகளின் குடும்ப வாழ்க்கைக் குழப்பம் இவற்றால் மனமொடிந்து போகின்றோம்;அதே சமயம்,20 வயது,30 வயதுகளில் கடவுள் தானே? 50 வயது,60 வயதில் கும்பிட்டுக் கொள்ளலாம்;என்ற மிதப்பில் பேசுபவர்களே அதிகம்;அவர்களே ஏழரைச்சனி,பாதகாதிபதி திசை வரும்போது கடவுளிடம் சரணாகதி அடையவும் செய்கின்றார்கள்;இவையெல்லாம் பக்தியின் ஆரம்பக் கட்டங்களே!


எமது ஞான குருவும் ஜன்மாந்திரகுருவாகிய ஸ்ரீஅகத்தியமகரிஷியின் போதனைப்படி,விசாகம் நட்சத்திரம் வரும் நாட்களில் மலை முருகன் ஆலயம் அல்லது ஜீவசமாதிகளில் அன்னதானம் செய்து வரவேண்டும்;தொடர்ந்து ஒரு வருடம் வரை அன்னதானம் செய்து வந்தால்,வாழ்க்கையின் இறுதிக் காலம் நோய் அவதியில்லாமல் வாழ்க்கையை கழிக்க முடியும்;அதுவும் தாமரை இலையின் பின்புறம் அன்னதானம் செய்வது மிகவும் அவசியம்;இந்த அன்னதானத்தைப் பெறுபவர்களும் இதே புண்ணியத்தைப் பெறுவார்கள்;

உலகமயமாக்கலினால் வாரம் தோறும் விலைவாசி அதிகரித்துக் கொண்டே செல்கின்றது;அதே சமயம்,வருடம் ஒருமுறை தான் சம்பளம் அதிகரிக்கின்றது;இப்படிப் பட்ட சூழ்நிலையில் மனப்பூர்வமாகச் செய்யும் அன்னதானத்திற்கு எப்போதுமே பலன் உண்டு;


தாமரை இலையின் பின்புறம் அன்னம் வைத்து அன்னதானம் செய்யும் போது,இந்த அன்னதானத்தை பெறுபவர்கள்,இந்த தாமரை இலையைத் தொட்டு வாங்கும் கணத்தில் மனதுக்குள் “ஓம் அகத்தீசாய நமஹ” என்றும் “ஓம் அண்ணாமலையே போற்றி” என்றும் ஜபிக்க வேண்டும்;

இவ்வருடத்தில் வரும் விசாக நட்சத்திர நாட்கள் பட்டியலையும் தங்களுக்கு வழங்குகின்றோம்;

14.7.16 வியாழன் காலை 8.05 முதல் 15.7.16 வெள்ளி காலை 10.33 வரை
10.8.16 புதன் மதியம் 3.16 முதல் 11.8.16 வியாழன் மாலை 5.42 வரை
7.9.16 புதன்
4.10.16 செவ்வாய்
31.10.16 திங்கள் மதியம் 12.26 முதல் 1.11.16 செவ்வாய் மதியம் 2.58 வரை
28.11.16 திங்கள்
25.12.16 ஞாயிறு
21.1.17 சனி காலை 9.40 முதல் 22.1.17 ஞாயிறு மதியம் 12.12 வரை
18.2.17 சனி
17.3.17 வியாழன்
13.4.17 வியாழன்

இந்து தர்மக்கணக்கின் படி,ஒரு சூரிய உதயத்தில் இருந்து அடுத்த சூரிய உதயம் வரை தான் ஒரு நாள் என்று மதிப்பிடப்படுகின்றது;கிறிஸ்தவக் கணக்கின்படி(ஆங்கிலேயன் இந்தியாவைக் கொள்ளையடித்து அவனது முட்டாள்த்தனங்களை நம்மிடம் திணித்தப் பின்னர்,நள்ளிரவு 12 மணியோடு அடுத்த நாளின் துவக்கம் என்று நம்புகின்றோம்;இது தவறு;முறையற்றது)
விசாகம் நட்சத்திரம் முழு நாளில் இருப்பது ஒரு சில நாட்களில் மட்டுமே!

விசாகம் நட்சத்திரம் நிற்கும் நாளில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள்ளாகவும்,மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள்ளாகவும்,இரவு 8 மணி முதல் 9 மணிக்குள்ளாகவும் விசாக நட்சத்திர அன்னதானம் செய்ய வேண்டும்;பல நாட்களில் மதியம் அல்லது மாலையில் தான் விசாகம் நட்சத்திரம் தோன்றுகின்றது;

உதாரணமாக,10.8.16 புதன் கிழமையன்று மதியம் 3.16க்கு விசாகம் நட்சத்திரம் உதயம் ஆகின்றது;எனவே,இந்த நாளில் இரவு 8 மணி முதல் 9 மணி வரையிலும்,மறுநாள் 11.8.16 வியாழக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும்;மதியம் 1 மணி முதல் 2 மணி வரையிலும் அன்னதானம் செய்ய வேண்டும்;


அவரவரின் பொருளாதாரச் சூழ்நிலையைப் பொறுத்து ஒருவேளைக்கு எத்தனை பேர்களுக்கு வேண்டுமானாலும் அன்னதானம் செய்யலாம்;ஒருவருக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்தும் செலவுகளைச் சரிசமமாகப் பகிர்ந்து கொண்டும் அன்னதானம் செய்யலாம்;

அன்னதானம் செய்யவும்;ஆரோக்கியமான இறுதி நாட்களாக வாழ்க!

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ 

No comments:

Post a Comment