சூரியன் கடகராசியைக் கடக்கும் மாதம் ஆடிமாதம் என்று ஜோதிடப்படி அழைக்கப்படுகின்றது;இதையேதான்
வானியல் ஆராய்ச்சிகளும் உறுதிபடுத்துகின்றன;
வானமண்டலத்தை 12 பாகங்களாகப் பிரித்து,ஒவ்வொன்றிற்கும் பெயர் சூட்டி
அதுவே ராசிகளாக ஜோதிடத்தில் இருக்கின்றன;மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி,
துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம் என்று 12 ராசிகள் ஜோதிடப்படி
மட்டும் ராசிகள் அல்ல;வானியல் ஆராய்ச்சிகளின் படியும் உண்மை! இவைகளை அமெரிக்க விண்வெளி
அமைப்பான நாசா ஒப்புக் கொண்டால்,உலக அளவில் கிறிஸ்தவத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுவிடும்
என்பதால் ஜோதிடம் என்பது மூடநம்பிக்கையாகவும்,வானியல் என்பது அறிவியல் துறையாகவும்
திட்டமிட்டு பிரிக்கப்பட்டுள்ளது;
நீங்கள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்று வைத்துக்கொள்வோம்;நீங்கள்
கடகராசி மண்டலத்தில் இருக்கும் ஆயில்யம் நட்சத்திர உலகத்தில் இருந்து இந்த பூமிக்கு
அனுப்பப் பட்ட பிரதிநிதி என்று அர்த்தம்;இந்த வரிகளுக்குள் புதைந்திருக்கும் தெய்வீக,ஆன்மீக,ரசவாத
உண்மையை தாங்கள் உணர்வுபூர்வமாக உணரவேண்டும் என்றால் அதற்கு ஒரே ஒரு வழி தான் உண்டு;
அது
உங்களுடைய வாழ்நாளில்,அதுவும் இப்பிறவி நிறைவடைவதற்குள் அண்ணாமலையை
1008 முறை கிரிவலம் வந்துவிடவேண்டும்;அவ்வாறு வந்துவிட்டால்,உங்களுடைய சற்குரு உங்களைத்
தேடிவருவார்;
குரு என்பவர் ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியம்;அதைவிடவும் 1000 கோடி மடங்கு
முக்கியமானவர் சற்குரு!
ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் சற்குருநாதர்கள் இருக்கின்றார்கள்;இவர்கள்
ஒவ்வொருவருடைய வயதும் பல ஆயிரம் ஆண்டுகள்! ஒவ்வொரு காலத்திற்கு ஏற்றவாறும் இவர்கள்
தமது நடையுடைபாவனையை மாற்றிக் கொண்டு அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு நவீன மனிதத்
தோற்றத்தில் தான் இருப்பார்கள்;
இவர்களின் பிறப்பைப் பற்றியும் ஜோதிடக் கலைதான் தெரிவிக்கின்றது;தமிழ்
வருடங்கள் 60! இந்த 60 ஆண்டுகளில் இந்த பூமியில் பிறக்கும் கோடிக்கணக்கான மனிதர்களில்
இரண்டே இரண்டு மனிதர்கள் மட்டும் பல ஆயிரக்கணக்கான வயது ஆயுளுடன் பிறக்கின்றார்கள்;மாசி
மாதத்தில் வரும் கும்ப லக்னம் அல்லது பங்குனி மாதத்தில் வரும் கும்ப லக்னத்தில் பிறக்கின்றார்கள்;இவர்களுக்கு
கும்பலக்னத்தில் குரு இருக்கும்;அல்லது மீன லக்னத்தில் குரு இருக்கும்;இதற்கு மேல்
சித்தர் பெருமக்கள் தெரிவிக்கவில்லை;
நமது சற்குரு நம்மைத் தேடிவந்துவிட்டால்,இதுவரை நாம் எத்தனை மனிதப் பிறவிகள்
எடுத்தோமோ,அத்தனை மனிதப்பிறப்பு கர்மவினைகளும் மலையளவு அல்லது கடலளவு இருக்கும்;அவைகள்
அனைத்தையும் தனது ஒரே ஒரு உபதேசத்தின் மூலமாக நிர்மூலமாக்கி,நம்மை புதுப்பிறவி எடுக்க
வைத்துவிடுவார்;அல்லது இந்தப் பிறவியோடு நமக்கு முக்தி கிடைக்க வைத்துவிடுவார்;(ஏனெனில்,நம்மில்
பலர் 2,00,000 முறை இந்த பூமியில் திரும்பத் திரும்பப் பிறந்திருக்கின்றோம்;சிலர்
1 கோடி முறை மனிதப் பிறவி எடுத்துள்ளோம்;)இந்த சித்தர்கள் ரகசியத்தை நமக்கு தெரிவிப்பவர்
தமிழ் மொழியின் தந்தையும்,ஜோதிடக்கலை,சித்தமருத்துவம்,யோகக்கலையின் ஆதிகுருவுமான அகத்தியமகரிஷி
அவர்கள் நமக்கு உபதேசமாகத் தெரிவித்துள்ளார்;அவருக்கு நாம் நமது ஆத்மார்த்தமான ஆயிரம்
கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளவேண்டும்;
இந்த 1008 முறை கிரிவலத்தை துவக்கிட ஏற்ற சிறந்த நாள் ஆடி அமாவாசை நாள்
மட்டுமே! ஒவ்வொரு ஆடி அமாவாசையும் சிறந்த நாளாக இருந்தாலும்,இந்த சதுர்முக வருடம் வரும்
ஆடி அமாவாசைக்கு பல சிறப்புகள் உள்ளன;இந்த வருடம் வரும் ஆடி அமாவாசையானது ஆடி 18 அன்று
வருமாறு அமைந்திருக்கின்றது;அதே நாளில் சிம்மத்தில் இருக்கும் குருவானவர் கன்னிக்குப்
பெயர்ச்சி ஆகின்றார்;
குரு ஒரு ராசியை கடக்க ஒரு வருடம் எடுத்துக் கொள்கின்றார்;கடந்த ஓராண்டாக
குரு சிம்மத்தில் இருக்கின்றார்;சிம்மத்தில் குரு இருக்க,வரும் ஆடி அமாவாசையன்று அண்ணாமலை
கிரிவலத்தை துவக்கிட ஏற்ற காலம் ஆகும்;12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிம்மகுருவும் ஆடி அமாவாசையும்
சேர்ந்து வரும்;
இந்த வருடம் ஆடி அமாவாசைத்திதியானது 1.8.16 திங்கட்கிழமை நள்ளிரவு
3.48 முதல் 2.8.16 செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 3.10 வரை அமைந்திருக்கின்றது;
முதல் நாளே நமது குலதெய்வத்திடம் மனப்பூர்வமாக வேண்டிக் கொள்ள வேண்டும்;ஆடி
அமாவாசையன்று துவங்கும் இந்த அண்ணாமலை கிரிவலம் இப்பிறவி நிறைவடைவதற்குள் 1008 முறை
வலம் வரவேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்;
ஒரு நாளுக்கு ஒரு முறை வீதம் 1008 முறை கிரிவலம் செல்ல விரும்பினால்,தொடர்ந்து
3 ஆண்டுகள் அண்ணாமலையில் தங்கவேண்டும்:இது நம்மைப் போன்றவர்களுக்கு சாத்தியமா?
எனவே,வாரம் ஒருமுறை அல்லது மாதம் இரண்டு நாட்கள் அண்ணாமலை கிரிவலம் வந்தால்,அவரவர்
பூர்வஜன்ம கர்மாக்கள் படி அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் 1008 முறை அருணாச்சலத்தை
வலம் வந்துவிட முடியும்;
இதிலும் சில சூட்சுமங்களை கும்பமுனி நமக்குத் தெரிவித்திருக்கின்றார்;
108 அமாவாசை நாட்கள்
108 விசாக நட்சத்திர நாட்கள்
108 நமது பிறந்த நட்சத்திர நாட்கள்
108 கார்த்திகை மாத பவுர்ணமி
108 திருவாதிரை நட்சத்திர நாட்கள்
108 தேய்பிறை சிவராத்திரி நாட்கள்
108 பிரதோஷ நாட்கள்
108 திங்கட்கிழமை நாட்கள்
108 தேய்பிறை அஷ்டமி நாட்கள்
108 பஞ்சமி நாட்கள் ஆக மொத்தம் 1080 நாட்கள் வலம் வரத் திட்டமிட்டு செயல்படுவதன்
மூலமாக இப்பிறவியிலேயே நமது சற்குருவின் அருட்பார்வைக்குள் வந்துவிடலாம்;
முதல் முறையாக அண்ணாமலை கிரிவலம் வர செய்யும் முயற்சியே பெருமுயற்சியாக
இருக்கும்;ஒரு வருடத்தில்(ஒருவருடம் என்பது சித்திரை 1 முதல் பங்குனி 30 வரையிலான கால
அளவு) குறைந்த பட்சம் 12 முறை கிரிவலம் வந்துவிட்டால்,அதன் பிறகு அண்ணாமலையின் அருமை
பெருமைகளை உணர்ந்து கொள்ளலாம்;இமயமலையை விடவும் 400 கோடி வருடங்கள் பழமையானது அருணாச்சலம்
என்ற அண்ணாமலை;இதன் அருமை பெருமைகளை உணர்ந்தமையால் தான் நமது முன்னாள் பிரதமர் இந்திரா
காந்தி,நமது கிழக்கு எல்லைப்புற மாநிலத்திற்கு அருணாச்சலப் பிரதேசம் என்று பெயர் வைத்தார்;
முதல் பத்து வருடங்களில் வருடத்திற்கு 10 முறை வீதம் 100 முறை கிரிவலம்
வந்துவிட்டாலே நமது கர்மச்சுமைகளில் 80% கரைந்து காணாமல் போய்விடும்;கடந்த ஐந்து முற்பிறவிகளில்
நாம் சேமித்த கர்மச்சுமைகளில் இருந்துதான் 80% கரையும்;
அதற்கு முந்தைய 1,98,995 பிறவிகளில்
செய்த கர்மாக்களை யார் கரைப்பது?
நம்மால் மட்டுமோ
அல்லது
நமது குருவானாக இருப்பவரால் நமது கர்மச்சுமையை சுமக்க முடியாது;அவர்
இதை வாங்கவும் மாட்டார்;
அல்லது
நமது கர்மச்சுமையை வேறு யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்;
நமது ஜன்ம நட்சத்திரத்துக்குரிய சற்குருவால் மட்டுமே நம்மை பரிசுத்த
ஆத்மாவாக மாற்றிவிடமுடியும்;
1008 முறை அண்ணாமலை கிரிவலத்தை நிறைவு செய்யும் வரை அண்ணாமலையாரையே நமது
சற்குருவாக ஏற்று அடிக்கடி கிரிவலம் வரவேண்டும்;
தற்போதைய காலகட்டத்தில் அண்ணாமலையைச் சுற்றிலும் வாழும் திருக்கோவிலூர்,வேலூர்,காட்பாடி,ஆம்பூர்,விழுப்புரம்,
திண்டிவனம்,பாண்டிச்சேரி,சேலம்,சென்னை பகுதி மக்களுக்கு மிகவும் சுலபமான
வாய்ப்பு;மிகவும் குறைந்த மணிநேரங்களில் அண்ணாமலையை வந்தடைய முடியும்;
முயற்சிப்போமா?
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ
No comments:
Post a Comment