Thursday, July 14, 2016

ஒரே நாளில் வரம் தரும் அருள்மிகு குழல்வாய்மொழி அம்பாள் சமேத விக்கிரபாண்டீஸ்வரர் திருக்கோவில்,சோழாபுரம்!!!


கலியுகத்தில் ராகுவின் உச்சம் ஆகும் கால கட்டத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம்;

இதனால்,நிம்மதியாக வாழ்ந்து வருபவர்களின் எண்ணிக்கையும்,ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் தம்பதிகளின் எண்ணிக்கையும் படுவேகமாக குறைந்துவருகின்றது;


வேலை கிடைப்பதில்லை;கிடைத்தால் பிடிப்பதில்லை;பிடித்த வேலையாக இருந்தால் சம்பளம் போதவில்லை;

தொழில் செய்தால் எதிர்பார்க்கும் வருமானம் கிடைப்பதில்லை;

குடும்பத்தில் ஒற்றுமை இல்லை;

தினசரி செய்தித்தாளை வாசித்தாலே வீட்டைவிட்டு வெளியே செல்லவே பயமாகத் தான் இருக்கின்றது;

ஒவ்வொரு குடும்பமும் கடன் அல்லது நகைக்கடன் அல்லது நோய் அல்லது சொத்துத் தகராறு அல்லது மாந்திரீகப் பிரச்சினை அல்லது பொறாமை அல்லது குழப்பத்தில் ஆழ்ந்து யாருமே நிம்மதியாக வாழ்ந்துவருவதாகத் தெரியவில்லை;


இந்த சூழ்நிலையை மாற்றிட சித்தர் பெருமக்களை வழிபடுவதே சிறந்தது;

தமிழ்நாடு முழுவதுமே சித்தர் பெருமக்கள் ஆங்காங்கே ஜீவசமாதி ஆகி உள்ளார்கள்;
பூர்வபுண்ணியம் உள்ளவர்களுக்கே சித்தர் ஜீவசமாதிகளுக்குச் செல்லும் பாக்கியம் உண்டாகும்;போராடி முயற்சி  செய்தால் மற்றவர்களுக்கும் சித்தர் பெருமானின் அருளாசி கிடைக்கும்;
இன்றைய காலகட்டத்தில் உடனே ஒரு நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம்;

அப்படி உடனே அருளாசியை அள்ளித்தரும் சித்தர் பீடம் ஒன்று விருதுநகர் மாவட்டம்,ராஜபாளையம் தாலுகாவில் ஒரு கிராமத்து சிவாலயத்தினுள் அமைந்திருக்கின்றது;


போன பவுர்ணமி அன்று மாலை 4 மணிக்குச் சென்று இரவு 7 மணி அன்னதானம் வரை இந்த ஆலயத்தில் யாம் இருந்தோம்;மறுநாள் காலையில் இருந்து இந்த நொடி வரையிலும் எமக்கு பணக் கஷ்டம் தீர்ந்து எப்போதும் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கின்றது;தொழில் டல்லடித்தது போய்,ஓய்வே இல்லாத அளவுக்கு மூச்சு முட்டும் விதமாக ஓடிக்கொண்டே இருக்கின்றோம்;

அதே சித்தரிடம் மானசீகமாக வேண்டியதால் தான் இப்போது இந்த கட்டுரையை எழுதவே முடிந்திருக்கின்றது;

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்;

ராஜபாளயம் புது பேருந்து நிலையத்தில் இருந்து சங்கரன் கோவில் செல்லும் சாலையில் 8 கி.மீ.தூரம் பயணிக்க வேண்டும்;சோழாபுரம் என்ற கிராமம் வரும்;

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து முறம்பு வழியாகச் செல்லும் அனைத்து டவுண் பஸ்களும் சோழாபுரம் நிற்கும்;(இதற்கு அடுத்த ஸ்டாப் தான் முறம்பு)

ராஜபாளையத்திற்குத் தெற்கே இருந்து வருபவர்கள் சங்கரன் கோவிலுக்கு வருகை தந்து அங்கே இருந்து முறம்பு வர வேண்டும்;அங்கே இருந்து ஒரு கி.மீ.ராஜபாளையம் சாலையில் இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது;


சாலையானது எஸ் வளைவாக திரும்பும்.அந்த திருப்பம் ஒரு ஆற்றுப் பாலமாக இருக்கின்றது;அந்த ஆற்றுப் பாலத்தில் இருந்து பார்த்தால் மேற்கே ஒரு கோபுரம் தெரியும்;ஒரு நிலை மட்டுமே கட்டப்பட்ட கோபுரம் அது;

இந்த ஆலயம் தான் அருள்மிகு விக்கிரபாண்டீஸ்வரர் + குழல்வாய் மொழி அம்மையார் திருக்கோவில்
எல்லா நாட்களும் மாலை 4 மணி முதல் 7 மணி வரை திறந்திருக்கின்றது;

நீங்கள் ஒரு லிட்டர் பஞ்சதீப எண்ணெய்யும்,ஐந்து கிலோ பச்சரிசி அல்லது புழுங்கலரிசியும் வாங்கிக் கொண்டு 19.7.16 செவ்வாய்க்கிழமை மாலை சரியாக 4 மணிக்கு வந்து விடுங்கள்;சாயரட்சை பூஜையை தரிசித்துவிட்டு,அன்னதானத்தை சிறப்பித்துவிட்டு இரவு 7 மணிக்குப் புறப்படும் விதமாக திட்டமிட்டு வருவது அவசியம்;

எண்ணெயும்,அரிசியும் கூட வாங்க முடியாத அளவுக்கு கஷ்டமா? கவலை வேண்டாம்! இந்த சித்தர் பீடத்தைத் தரிசித்தால் போதும்;வாருங்கள் வரங்களை சித்தர் பெருமானிடம் பெறுங்கள்;

இங்கே அன்னை குழல்வாய்மொழி சன்னதியில் அருகில் இருக்கும் சித்தர் பீடம் சுமாராக 1000 ஆண்டுகள் பழமையானது;இந்த சித்தர் பீடத்தின் அருகில் அமர்ந்து உங்கள் கஷ்டங்களை முறையிடுங்கள்;

முறையிட்டு உங்களுக்கு என்னதேவை என்பதை வேண்டிக் கொள்ளுங்கள்;(புலம்பாதீர்கள்;பிறரின் அழிவுக்காக வேண்டுவது மாபெரும் தவறு;அவர்களை விடவும் இங்கே வந்த முதல் தடவையிலேயே நீங்கள் சக்திவாய்ந்தவராக மாறிவிடுவீர்கள்)

எப்படி சித்தர் பிரானிடம் வேண்ட வேண்டும் தெரியுமா?

எனது கடன் ரூ.5 லட்சம் தீரவேண்டும் என்று வேண்டுவதற்குப் பதிலாக,எனது கடன் ரூ.5 லட்சத்தைத் தீர்த்து வைத்தமைக்கு நன்றிகள்! என்று வேண்டிட வேண்டும்;

எங்கள் மகள் மூலம் நட்சத்திரத்தில் பிறந்ததால்,இதுவரை நல்ல வரன் அமையவே இல்லை;இனியாவது அமையுமா? என்று அரைகுறையாக அவநம்பிக்கையோடு  வேண்டக் கூடாது;

எனது மகளின் திருமணம் சிறப்பாக நடைபெற்றமைக்கு மிக்க நன்றிகள் சித்தர்பிரானே! என்று வேண்டிட வேண்டும்;

எனது தொழில் மீட்சி அடையவேண்டும்;வராக்கடன் வசூல் ஆகவேண்டும் என்று கெஞ்சக் கூடாது;

ஐயா! சித்தர் குருவே தங்கள் அருளால் எனது தொழில் அபாரமாக வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கின்றது; உங்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்!!! என்று கோரிக்கையானது நிறைவேறியது போலவே வேண்டிக்கொள்ள வேண்டும்;

ஆடி பவுர்ணமியானது நமது இந்து தர்மத்தில் குருபவுர்ணமியாக  பல கோடி ஆண்டுகளாக கொண்டாடப்படுகின்றது;
இந்த நாளில் குருவிடம் சரணடைந்தவர்களுக்கு அனைத்து வரங்களும் கிடைக்கும் என்பது அண்ணாமலையார் சொன்ன ஆன்மீக ரகசியம்!!!


மறுநாள் முதலே உங்கள் வாழ்க்கை ஸ்பீடாக இருக்கும்;வளமாக இருக்கும்;நலமாக இருக்கும்;அனைத்தும் பெற்று வளமோடும்,சீரோடும் சிறப்போடும் வாழ சித்தர் பெருமானின் அருள் பெற அழைக்கின்றோம்;



ஓம் ரீங் சிவசிவ

No comments:

Post a Comment