Tuesday, November 9, 2010

காஷ்மீர்:இந்தியாவின் மணிமகுடம்


கேள்வி:காஷ்மீரை விட்டுக்கொடுத்துவிடலாமா?

ஹாய் மதன் பதில்:கலவரங்களில் ஈடுபடும் கூட்டத்தை வைத்து ஒட்டுமொத்தமாக காஷ்மீர் மக்கள் என்று நாம்கருதிவிடமுடியாது.காஷ்மீர் மக்களின் இயல்பான குணமே அமைதியாக வாழ்வதுதான்.அதைத் தான் அவர்கள் விரும்புகிறார்கள்.அந்த சூழ்நிலையைமத்திய அரசு ஏற்படுத்தித்தர முடியவில்லையெனில்,அது யார் தவறு?

காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைந்தால் என்னாகும் என்பது அங்குள்ள மக்களுக்குத் தெரியும்.தனி ‘தக்குனூண்டு’நாடாகவும் அதால் இயங்க முடியாது.பிரிவினைவாதிகளும் தேசவிரோதிகளும் நமது இந்தியாவின் எந்த மாநிலத்தில்தான் இல்லை?அதற்காக கலவரங்கள் நடக்கும் பகுதிகளையெல்லாம் சுதந்திர நாடுகளாக அறிவித்திடமுடியுமா? நல்ல கதை!

முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பது வாதமே இல்லை.அவர்கள் இந்திய முஸ்லீம்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.தவிர எப்போதிருந்து அங்கே முஸ்லீம்கள் பெரும்பான்மை ஆனார்கள்?

கொஞ்சூண்டு காஷ்மீர் வரலாற்றை (ஊசிமுனையளவுதான்) பார்ப்போமே.வேத காலத்தில் அங்கு வசித்த காஷ்யப முனிவரின் பெயரிலிருந்துதான்

“காஷ்மீர்” என்ற பெயரேவந்தது.அவர் மூலம் விருத்தியான மக்களின் பெயர் (அங்கே மலைகளில் வாழ்ந்த )காசிகள் என்று அழைக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டுக்கும் காஷ்மீருக்கும் ஒரு காலத்தில் நெருங்கிய மதரீதியான தொடர்பு இருந்தது. ‘சைவ சித்தாந்தத்தை’ உருவாக்கிய திருமூலர் காஷ்மீரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தார்.(சிலர் தமிழ்நாட்டிலிருந்து காஷ்மீர் சென்று,பிற்பாடு ஆப்கானியர்களின் படையெடுப்பின் காரணமாக மீண்டும் தமிழ்நாட்டுக்கு குடிபுகுந்தார் அவர் என்கிறார்கள்).வேதங்களையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு,சாதி மதங்களையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, ‘அன்புதான் மதம்;உடல்தான் அதற்கு கோவில்!’ என்கிற தத்துவத்தை உருவாக்கியவர்கள் சைவசித்தாந்திகள்.இந்த தத்துவம் உருவானது காஷ்மீரில்தான்.தமிழ் பக்தி மார்க்கத்தை காஷ்மீர் மக்கள் வரவேற்று ஏற்றுக்கொண்டார்கள்.

தமிழ்நாட்டில் பிறந்து பிறகு புத்தமத தத்துவஞானியாகப் புகழ்பெற்ற நாகார்ஜீனர் இங்கிருந்து காஷ்மீருக்குச் சென்று,கடைசிவரை அங்கே வசித்தார்.ஆக பக்தி,தந்தீரீக வழிபாடு,சைவம் இம்மூன்றும் தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்குச் சென்றது.

புகழ்பெற்றசைவ தாந்திரிக மகான் அபிநவகுப்தர் காஷ்மீரைச் சேர்ந்தவரே.அவரது காலம் கி.பி.970 முதல் கி.பி.1025 வரையே.வரலாற்று மாமேதை கல்ஹணர் காஷ்மீரில் வசித்து ‘ராஜதரங்கிணி’ காவியத்தை எழுதினார்.காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர்(ஸ்ரீ)முதன்முதலில் அசோகச் சக்கரவர்த்தியால் நிர்மாணிக்கப்பட்டது.கனிஷ்க சக்கரவர்த்தி காலத்தில் உலகப்பெரும் புத்தமாநாடு காஷ்மீரில்தான் நடந்தது.

1001 அராபியன் இரவுகள்கதையை எழுதத்தூண்டிய கதா சரித் சாகரா கதைத் தொகுப்பு காஷ்மீரில் உருவானதே.(இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு,நம்மூர் புத்தகக் கடைகளில் கிடைக்கிறது).காஷ்மீர் ராமாயணம் கூட உண்டு.யோக வசிஷ்ட மகாராமாயணம்(வசிஷ்டருக்கும் ராமருக்கும் இடையே நடைபெறும் நீண்ட உரையாடல் மூலம் ராமாயணம்).இந்த புத்தகத்தை வாசிக்கச் சொல்லிக்கேட்டு பிரமித்து,உடனே அதை பாரசீக மொழியில் மொழிபெயர்க்கச் சொல்லி ஆணையிட்டவர் யார் தெரியுமா?மொகலாயப் பேரரசர் அக்பர்!

அக்பருக்குப்பிறகு நிலைமை மாற ஆரம்பித்தது.வடமேற்கே இஸ்லாமிய நாடுகள் உருவானதாலும் காஷ்மீ இந்தியாவின் எல்லைப்பகுதியாக இருந்ததாலும்,அங்கே 12 ஆம் நூற்றாண்டுக்குப்பிறகு விரும்பியும் விரும்பாமலும் இஸ்லாமிய மதமாற்றங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்தன.இந்தியாவுக்கு எதிராக தேச விரோத சக்திகளை பாகிஸ்தான் தூண்டிவிட்டு,இன்றளவும் காஷ்மீர் என்கிற இந்தியாவின் அற்புதமான விரல்கள் எரிந்துகொண்டே இருக்கின்றன.சொல்லுங்கள் காஷ்மீரை விட்டுக் கொடுத்துவிடலாமா? நன்றி:ஆனந்தவிகடன் 29.9.10

இந்தியாவின் மணிமகுடமாம் காஷ்மீரை ஒரு போதும் விட்டுக்கொடுக்கமுடியாது. வெகுவிரைவில் பாகிஸ்தான் திருடிய காஷ்மீர்பகுதியையும்,சீனா கொள்ளையடித்த காஷ்மீர் பகுதியையும் மீட்போம்!!! ஆயிரம் சீனாக்கள் வந்தாலும்,பத்தாயிரம் பாகிஸ்தான்கள் வந்தாலும், காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியே! இதை விரைவில் புரிய வைப்போம்.

No comments:

Post a Comment