ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியின் பெருமைகள்
ஒரு இளம்தம்பதி என்னிடம் ஜாதகம் பார்க்க வந்தார்கள்.அவர்களுக்கு இரண்டு மகள்கள்!!!மூத்தமகளுக்கு வயது எட்டு.இரண்டாவது மகளுக்கு மூன்று.கணவனோ அப்பாவி;ஆனால்,கடும் உழைப்பாளி.மனைவியோ புத்திசாலி.ஆனால்,பதிபக்தி எனப்படும் கணவனின் பேச்சை எக்காலமும் மீறாமல் செயல்படுவதையே தனது குணமாகவே கொண்டிருப்பவர்.
அவர்களின் மூத்தமகளின் ஜாதகப்படி,அவளுக்கு இராகு மகாதிசை துவங்கி இரண்டரை ஆண்டுகள் ஆகியிருந்தது.இன்னும்,பதினைந்தரை ஆண்டுகளுக்கு இராகு மகாதிசை நடைபெறும்.அதனால்,பக்கத்துத் தெருவில் இருக்கும் பத்திரகாளியம்மாளை தினமும் போய் ஒரு முறை வழிபட்டு வரும்படி கூறினேன்.
சில மாதங்கள் கழிந்தன.மீண்டும் அதே இளம்தம்பதியினர் என்னிடம் ஜோதிட ஆலோசனை கேட்க வந்தார்கள்.அப்போது,போனமுறை நாம் சொன்னபடி,தினமும் பத்திரகாளி கோவிலுக்குச் சென்று வழிபட்டுவருகிறீர்களா?எனக் கேட்டேன்.ஒருவாரம்தான் போக முடிந்தது.அதற்குப்பிறகு போக முடியவில்லை;என்றார்கள்.
சிறிது நேரம் யோசித்து,அந்த ஒரு வாரத்தில் பத்திரகாளிஏதாவது அதிசயம் நிகழ்த்தினாளா? என கேட்டேன்.
ம். . . நடந்தது. என அந்த இல்லத்தரசி கூறினாள்.
என்ன நடந்தது?
இவரு பிஸினஸ் பண்ணணும் சொல்லிகிட்டே இருந்தாரு.நான் என்னுடைய தாய்மாமாவிடம் ரூ.50,000/-கடன் வாங்கிக் கொடுத்தேன்.ஒரே வருடத்தில் அந்தபிஸினஸ் எனக்குச் சரிபட்டுவராதுன்னு சொன்னாரு.ரூ.50,000/-ரா மெட்டீரியலாக இன்னும் கிடக்குது.அதை விக்க முடியல.அதுக்கு மாதா மாதம் வட்டி கட்டுறதுக்காகவே எனது குழந்தைகளை எனது அம்மாவின் வீட்டில் விட்டுவிட்டு நானும் வேலைக்குப் போக ஆரம்பிச்சேன்.இவர் சம்பளம் வட்டி கட்டுறதுக்கே சரியாப் போச்சு.எனது சம்பளத்தில் குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கோம்.இப்படியே இரண்டு வருஷம் ஓடிப்போச்சு.அந்த 50,000/-ரூபாயை அடைக்க வழி தெரியல.எங்க அப்பாகிட்டே சொல்லி அழுதேன்.அவரிடம் கடன் கேட்டேன்.அவராலயும் தர முடியல.நீங்க சொன்னதால அன்னிக்கே பத்திரகாளி கோயிலுக்கு போயிட்டு வந்தேன்.வந்த அரை மணி நேரத்தில் எங்க அப்பா வந்தாரு.
‘இந்தாம்மா! நீ கேட்ட ரூ.50,000/-.எனக்கு வட்டி தர வேண்டாம்.எப்ப முடியுமோ,அப்போ இந்த அம்பதாயிரத்தைக்குடு.மொத்தமா முடியாட்டியும் பத்தாயிரமாகவோ,ஐந்தாயிரமாகவோ குடு’ன்னு சொல்லி குடுத்துட்டுப் போயிட்டாரு.எனக்கு சந்தோஷம் தாங்கல.
தினமும் பத்திரகாளி கோவிலுக்கு போக ஆரம்பிச்சேன்.இவரோட பாட்டி இறந்தாங்க.அதுல இருந்து பத்திரகாளி கோவிலுக்குப் போக முடியல.
“சரி!இருக்கட்டும்.மறுபடியும் இன்னிலிருந்து பத்திரகாளியைப்போய் தினமும் கும்பிடுங்க அது மட்டும் தான் பரிகாரம்.வேற பரிகாரமெல்லாம் ரொம்ப செலவு பிடிக்குற பரிகாரங்கள்.ஒரு வருடத்துக்கு தினமும் பத்திரகாளியை கும்பிட்டு வாங்க.ஒரு மாசத்துல 27 நாளு போய் கும்பிடுங்க” என்றவாறு,அந்த தம்பதியைப் பார்க்க,அதன் அர்த்தம் புரிந்து அந்த இல்லத்தரசி புன்னகைத்தாள்.
ஏன் இராகு திசை ஒரு குடும்பத்தில் யாருக்காவது நடந்தால் அந்த குடும்ப உறுப்பினரை தினமும் பத்திரகாளி கோவிலுக்குப் போகச் சொன்னோம்?
இராகு மகாதிசை காலம் 18 வருடங்கள் ஆகும்.நவக்கிரகங்களில் அதிக சக்தி வாய்ந்த இரண்டாவது கிரகம் இராகு ஆகும்.அது நமது உடலில் பிறப்பு உறுப்பையும்,அதனுள் இருக்கும் சுக்கிலம்(ஆண்),சுரோணிதம்(பெண்),இவற்றை ஆட்சி செய்கிறது.இராகு திசை நடந்தால்,அந்தக் குடும்பத்தில் எப்படியாவது முறையற்ற உறவு உருவாகக் காரணமாக அமைந்துவிடும்.அதைத் தடுப்பதற்கும்,அந்தக் குடும்பம் நிம்மதியாக வாழ்வதற்கும் தினமும் பத்திரகாளி வழிபாடு அவசியமாகிறது.
இராகு மகாதிசையின் 18 ஆண்டுகளில் ஒவ்வொரு விநாடியும் நம்மை இராகு பகவானே இயக்குகிறார்.நன்மைகளையும்,தீமைகளையும் அளவற்ற எண்ணிக்கையில் தருகிறார்.இரண்டையும் நம்மால் வாங்கிட முடியும்.ஆனால்,தாங்கிட முடியுமா?.இன்னாருடைய மனைவி இப்படி ஆனாள்? என்பதை எந்த ஆணால் ஏற்றுக்கொள்ள முடியும்?
எனவே தான்,தினமும் ஒரு முறை வீதம் அந்த இராகு மகாதிசை முடியும் வரையிலும் பத்திரகாளியை வழிபட்டு வருவது ஒரு கடமையாகிறது.
வெளியூரைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமியன்று வருகைதந்து பவுர்ணமிபூஜையில் கலந்துகொள்வது நன்று.
பத்திரகாளி அம்மனை வழிபடவேண்டிய அவசியத்தை அறிந்து கொள்ளச் செய்துள்ளீா்கள். நான் எப்போதாவது பத்திரகாளி அம்மனை வழிபடச் செல்வேனே தவிர அம்மனை வழிபடுவதன் தாத்பா்யம் தெரியாது. அருமையான பதிவு. சிறக்கட்டும் உங்கள் பணி
ReplyDeleteகேது திசை க்கும் பத்ரகாளியை வழிபடலாமா ஐயா.
ReplyDeletekethu dasavukku vinayagarai vazipadavum
ReplyDelete