ராஜயோகம் நான்கு வகைப்படும்.அவை மந்திர யோகம்,லய யோகம்,ஹடயோகம்,ராஜயோகம் எனப்படும்.
பீஜாட்சரமந்திரங்களால் ஆன மந்திரத்தை 12 வருடங்களுக்கு தொடர்ந்து விதிப்படி ஜபித்துக்கொண்டே வருவதால்,சித்துக்கள் கைகூடும்.இதற்கு மந்திரயோகம் என்று பெயர்.
தினசரி நமது வேலைகளுக்கு நடுவே எப்போதும் இறைவனை நினைத்துக்கொண்டே தியானிப்பதற்கு லயயோகம் என்றுபெயர்.
சின்முத்திரைகளாலும்,யோகாசனம்,பிராணயாமப்பயிற்சியாலும் உடலை சுத்தப்படுத்தி,மனத்தை ஒருநிலைப்படுத்துவதற்கு ஹடயோகம் என்று பெயர்.
இயமம் மற்றும் நியமப்பயிற்சிகளால் சித்தம் எனப்படும் மனத்தை பரிசுத்தப்படுத்தி,சமாதி அனுபவத்தை அடைவதற்கு ராஜயோகம் என்றுபெயர்.
No comments:
Post a Comment