Friday, November 19, 2010

சதுரகிரி மலைப்பயணத்தில் பின்பற்ற வேண்டிய விதிகள்

சதுரகிரி மலைப்பயணத்தின் போது பின்பற்றவேண்டிய விதிமுறைகள்

தாணிப்பாறையிலிருந்து எண்ணெய்க்குடம் பாறை,அத்தி ஊற்று,காமதேனு கால் தடம்,கோரக்குண்டா,இரட்டைலிங்கம்,சின்னப்பசுக்கடை,நாவல் ஊற்று,பெரிய பசுக்கடை,பலாவடி கருப்பசாமி கோவில்,சுந்தரமகாலிங்கம் என செல்லும்போது எக்காரணம் கொண்டும் செடி கொடிகளை ஒடிக்கக் கூடாது;ஆடிப்பாடிக்கொண்டும் கத்திக்கொண்டும் செல்லக்கூடாது;சதுரகிரிமலைப்பிராந்தியம் முழுக்கவுமே சித்தர்கள் தவம் செய்துகொண்டும்,ஜீவசமாதியாகி அந்த ஜீவ உடலைக்கொண்டே பல மரங்கள் வளர்ந்தும் இருக்கும்.ஒரு சிறு கல் கூட ஏதாவது ஒரு சித்தரை சுமந்துகொண்டு இருக்கும்.அதற்கும் ஒரு வரலாறு இருக்கும்.

நமது வீட்டில்,தெருவில்,ஏரியாவில் இருப்பதுபோல்,குரங்குச்சேஷ்டைகள் செய்தால் அந்தப்பாவத்தை வேறு எங்கும் அழிக்க முடியாது;

சதுரகிரி என்பதில் சதுரம் என்பது கிரி என்பது சேர்ந்தே இருக்கிறது.சதுரம் என்பது நான்கு என்பதன் சுருக்கம்.நான்கு வேதங்களே இங்கு மலையாக இருப்பதாக ஐதீகம்;சிவம்,சக்தி,நாதம்,விந்து ஆகிய நான்கும் இங்கு மலைக்குள் கருப்பொருளாக பொதிந்து கிடக்கிறது என்பது பரவலான நம்பிக்கையாகும்.

நமது பூமியில் வேறெங்குமே இல்லாத அபூர்வ மூலிகைகள் இங்குதான் வளருகின்றன.அழுகணி,உதிர வேங்கை,கருநொச்சி,கருங்கொடி வேலி,கையாந்தகரை,கல்தாமரை,கானற்பலா,சாயா விருட்சம்,தில்லை விருட்சம்,சஞ்சீவி என பல மனித நல மூலிகைகள் இருக்கின்றன.

1 comment:

  1. மிகவும் அருமையான தகவல். என்னுடைய ஜாதகப்படி எனக்கு ஏழு ரிஷிகளின் தொடர்பு கிடைக்கும் என்று தஞ்சாவூரை சேர்ந்த ஒரு ஜோதிடர் வாக்கு கொடுத்தார். அதனை சிந்திதுக்கொண்டிருந்த பொழுது எதேச்சையாக தங்கள் ப்ளாக் கண்ணில் தரிசனம் தந்தது. தங்களுக்கு என்னுடைய இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்,
    சரவணன். எம்

    ReplyDelete