Thursday, September 9, 2010

இராஜபாளையம் குருசாமிகோவிலில் இருக்கும் குருசாமி அவர்களின் அதிசயம்

குருசாமி கோவிலுக்கு எதிரே ஒரு தெரு செல்கிறது.அந்தத் தெருவில் அமைந்திருப்பது சிவகாமி ஞானியார் ஜீவ சமாதி.






இங்கு தோப்புப்பட்டி சாலியர் தெருவில் ஆறுமுகச்சாமி என்ற அருளாளர் தோன்றினார்.அவர் கைத்தறி நெசவுத்தொழிலை மேற்கொண்டு இறைபக்தியில் சிறந்து விளங்கினார்.வேலை செய்யும்போது இறைவனின் திருவருளை பற்றிச் சுயமாகப் பாடும் திறன் பெற்றிருந்தார்.ஓதாமல் உணர்ந்த உத்தம ஞானியாவார்.






ஒரு முறை ஆறுமுகச்சாமி அவர்கள் அருள்மிகு குருசாமி கோவிலில் அமர்ந்து இனிய அருள்பொழியும் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்.திடீரென குருநாதர் மீதே அறம்பாடத் துவங்கினார்.






உடனே,குருசாமி அவர்முன் தோன்றி, “நீ எனது திருவருளைப் பாடினாய்;கேட்டு மகிழ்ந்தேன்.ஆனால் என்னையே சாபமிடும் விதத்தில் அறம் பாட ஆரம்பித்துவிட்டாயே! பிறருக்கு நல்வழி கூறிப்பாடு.அகங்காரம் கொள்ளாதே.யாரையும் சபிக்கும்படி பாடாதே.இனிமேல் நான் இருக்கும் திருக்கோவிலுக்கு வராதே!!!” என்று அறிவுரை கூறினார்.










குற்றத்தை உணர்ந்த ஆறுமுகச்சாமி குருசாமி கோவிலுக்குக் கிழக்கே சாலியர் சமூகத்திற்குப் பாத்தியப்பட்ட பிள்ளையார் கோவிலில் தங்கி அருள்மிகு குருசாமி திருவருள் திறத்தை உணர்ந்து மகிழ்ந்து குருவருள் புகழ் என்னும் நூலை இயற்றினார்.அந்நூல் குருசாமியின் சிறப்புக்களையும்,பெருமைகளையும்,அருட்திறத்தையும் வெளிப்படுத்தும் செய்யுள் நூலாகும்.


ஆறுமுகச்சாமி ஞானம் பெற்றப்பின் வடதிசை சென்று ஆற்காட்டில் ஜீவசமாதி ஆனார்.குருநாதர் குருசாமியின் அறிவுரையால் மேல்நிலைக்கு உயர்ந்தார்.குருசாமியின் அருளாற்றலினை வெளிப்படுத்தும் சான்றில் இதுவும் ஒன்று.

No comments:

Post a Comment