குருசாமி கோவிலுக்கு எதிரே ஒரு தெரு செல்கிறது.அந்தத் தெருவில் அமைந்திருப்பது சிவகாமி ஞானியார் ஜீவ சமாதி.
இங்கு தோப்புப்பட்டி சாலியர் தெருவில் ஆறுமுகச்சாமி என்ற அருளாளர் தோன்றினார்.அவர் கைத்தறி நெசவுத்தொழிலை மேற்கொண்டு இறைபக்தியில் சிறந்து விளங்கினார்.வேலை செய்யும்போது இறைவனின் திருவருளை பற்றிச் சுயமாகப் பாடும் திறன் பெற்றிருந்தார்.ஓதாமல் உணர்ந்த உத்தம ஞானியாவார்.
ஒரு முறை ஆறுமுகச்சாமி அவர்கள் அருள்மிகு குருசாமி கோவிலில் அமர்ந்து இனிய அருள்பொழியும் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்.திடீரென குருநாதர் மீதே அறம்பாடத் துவங்கினார்.
உடனே,குருசாமி அவர்முன் தோன்றி, “நீ எனது திருவருளைப் பாடினாய்;கேட்டு மகிழ்ந்தேன்.ஆனால் என்னையே சாபமிடும் விதத்தில் அறம் பாட ஆரம்பித்துவிட்டாயே! பிறருக்கு நல்வழி கூறிப்பாடு.அகங்காரம் கொள்ளாதே.யாரையும் சபிக்கும்படி பாடாதே.இனிமேல் நான் இருக்கும் திருக்கோவிலுக்கு வராதே!!!” என்று அறிவுரை கூறினார்.
குற்றத்தை உணர்ந்த ஆறுமுகச்சாமி குருசாமி கோவிலுக்குக் கிழக்கே சாலியர் சமூகத்திற்குப் பாத்தியப்பட்ட பிள்ளையார் கோவிலில் தங்கி அருள்மிகு குருசாமி திருவருள் திறத்தை உணர்ந்து மகிழ்ந்து குருவருள் புகழ் என்னும் நூலை இயற்றினார்.அந்நூல் குருசாமியின் சிறப்புக்களையும்,பெருமைகளையும்,அருட்திறத்தையும் வெளிப்படுத்தும் செய்யுள் நூலாகும்.
ஆறுமுகச்சாமி ஞானம் பெற்றப்பின் வடதிசை சென்று ஆற்காட்டில் ஜீவசமாதி ஆனார்.குருநாதர் குருசாமியின் அறிவுரையால் மேல்நிலைக்கு உயர்ந்தார்.குருசாமியின் அருளாற்றலினை வெளிப்படுத்தும் சான்றில் இதுவும் ஒன்று.
ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி சுவாமிகள். .யின் அதிகாரபூர்வ வலைப்பூ இந்த மஹாவில்வம்;உங்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் தீர,ஜோதிட ரீதியாக ஆலோசனைகள் பெறவும், ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் முறையான வழிகாட்டுதல் பெறவும் தொடர்பு கொள்க: வாட்ஸ் அப் எண்:+91 9092116990 செல் எண்:9629439499(இருப்பு:ஸ்ரீவில்லிபுத்தூர்=விருதுநகர் மாவட்டம்) மாதம் ஒருமுறை சென்னை,கோவையில் சந்திக்கலாம்!!!
Showing posts with label குருசாமி சமாதி. Show all posts
Showing posts with label குருசாமி சமாதி. Show all posts
Thursday, September 9, 2010
Tuesday, August 31, 2010
குருசாமி சமாதிகோவில்,ராஜபாளையம்
கடந்த 300 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகரின் மையப்பகுதியான அம்பலபுளிபஜாரில் அமைந்துள்ளது குருசாமி சமாது எனப்படும் குருசாமி சமாதி கோவில்.சாலியர் எனப்படும் நெசவுத்தொழிலை குலத் தொழிலாகக் கொண்டிருக்கும் பிற்பட்ட ஜாதிமக்களின் குல தெய்வமாக குருசாமி தாத்தா இங்கே ஜீவ சமாதி ஆகியிருக்கிறார்.சுமார் 1000 சாலிய குடும்பங்களுக்கு குலதெய்வமாக இருக்கிறார்.ஆனி மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று குருசாமி ஜீவசமாதி ஆனார்.ராஜபாளையம்,சத்திரப்பட்டி,ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் வாழும் சாலியர்களில் குரு என்ற பெயரை முதலிலோ அல்லது கடைசியிலோ தாங்கி இருப்பவர்கள் பெரும்பாலும் குருசாமி தாத்தாவை குல தெய்வமாகக் கொண்டவர்கள்.
உதாரணம்:ரமேஷ்குரு,குருதேவ்,குருநந்தினி,பழனிகுரு,குரு மகேஸ்வரன்,குருசாமி
ஒவ்வொரு தமிழ்மாதமும் கார்த்திகை அன்று இந்தக் கோவிலில் அன்னதானம் நடைபெறுகிறது.இந்தக் கோவிலின் நிர்வாகம் சாலியர் சமுதாயத்திற்குச் சொந்தமானது ஆகும்.
இந்த குருசாமி சமாதிக்கு ஒரு முறை வந்து வழிபட்டாலே மன நிம்மதி, செல்வ வளம் பெருகுகிறது என்பது அனுபவ உண்மை.
இந்த குருசாமி சமாதியின் ஸ்தல வரலாறு விரைவில் நமது ஆன்மீகக் கடலில் வலைப்பூவாக மலரும்.
Subscribe to:
Posts (Atom)