Thursday, September 23, 2010

கடன் தொல்லை தீர ருண் விமோசன லிங்க வழிபாடு


கடன் தொல்லைக்கு விமோசனம

சிவபெருமானின் அனுமதியின்றி, தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட சூரிய பகவான், தன் பாவத்தைப் போக்குவதற்காக 126 சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்றார். அதில் திருவாரூர் அருகிலுள்ள திருச் சேறை கோயிலும் ஒன்றாகும். இங்கு சாரபரமேஸ்வரரும், ஞானவல்லியம்மையும் வீற்றிருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதத்தில் லிங்கத்தின் மீதும், அம்பிகை ஞானவல்லியின் திருவடிகளிலும், சூரியன் தன் செங்கதிர்களை பரப்பும் விதமாக கருவறைகள் அமைந்துள்ளன. இந்த சமயத்தில் மூலவருக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். இச்சன்னதிக்குப் பின்புறம் ருணவிமோசன லிங்கேஸ்வரருக்கு சன்னதி அமைந்துள்ளது. கடன்தொல்லைகளில் இருந்து நம்மைக் காப்பவராக இப்பெருமான் விளங்குகிறார். ஒவ்வொரு திங்கட்
கிழமையும் இவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. ருணவிமோசன லிங்கேஸ்வரரை வழிபாடு செய்தபின், கஜலட்சுமியை தரிசிக்க வேண்டும். கஜலட்சுமி சன்னதி எதிரே சிவதுர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என்று மூன்று துர்க்கைகள் வீற்றிருக்கின்றனர். ஒரே கோயிலில் மூன்று துர்க்கை சன்னதிகள் அமைந்துள்ளது வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பாகும். திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் இத்தல இறைவன் மீது பதிகம் பாடியுள்ளனர். மனிதனுக்கு தேவையான அடிப்படை
குணங்களைத் தந்து செந்நெறிக்கு வழிகாட்டும் இறைவன் என்னும் பொருளில் இத்தலத்து சிவபெருமானை "செந்நெறியப்பர்' என்கின்றனர்.


No comments:

Post a Comment