சுதேசி கேள்வி பதில்கள்,செப்டம்பர் 2010
அமெரிக்க இந்தியப்பணியாளர்களுக்கான விசா கட்டணத்தை உயர்த்தியிருக்கிறதே? உலக வர்த்தக அமைப்பில் முறையீடு செய்து நடவடிக்கை எடுக்க முடியுமா?
முறையீடு செய்யலாம்.உலக வர்த்தக அமைப்பின் ஷரத்துக்கு விரோதமானதுதான் என்றாலும் அமெரிக்கா அசைந்துகொடுக்காது.அவர்களது பொருளாதாரத்தை பாதுகாத்துக்கொள்ளும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.அங்கு உள்ள அரசாங்கம் இளித்தவாய் அரசாங்கம் என தோன்றவில்லை.
ஹாலிவுட் நடிகை ஜீலியா ராபர்ட்ஸ் இந்துமதத்தைப் பின்பற்றுவது பற்றி?
மேற்கத்தியர்கள் கிழக்கு முகமாகத் திரும்புகிறார்கள்.நாம் நமது பாரம்பரியத்தை உணரவிடாமல் தடுப்பதை தனது அரசியல் கொள்கையாகவே காங்கிரஸீம் மேலும் சில கட்சிகளும் வைத்திருக்கிறது.அதன் நயவஞ்சகத்தை நாம் இன்னும் கூட உணரவில்லை;நம்மை இழிவுபடுத்துவதில் சன் டிவிக்கு அவ்வளவு சந்தோஷம்.
ஐ,டி.பொறியாளர்களில் 18% தான் பணிபுரிய லாயக்கானவர்கள் என்று கருத்துக்கணிப்பு ஒன்று கூறியுள்ளதே?
அரசாங்கத்தை இழுத்து மூடு,ஆட்குறைப்பு செய் என தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் கத்துவதற்கு இந்த ஆய்வு உதவலாம்.இது ஒரு பக்கமே.ஆனால் நமது பொறியியல் கல்வி நிறுவனங்களின் தரம் மட்டமாக உள்ளது என்பதும் பொறியாளர்களின் தரம் மட்டமாக உள்ளது என்பதும் உண்மையே.அவை உடனடியாக சரி செய்யப்பட வேண்டியவையே!!!
பொருளாதாரத்தில் ஜப்பானை முந்திவிட்டதே சீனா?
அமைதியாக நடந்துள்ளது இந்த மாற்றம்.(சீனா பற்றிய புள்ளிவிவரங்கள் உண்மையானால்?)
இதே நிலையை இந்தியா செய்திருக்குமானால் இங்கே என்னென்ன அல்லாகலம் நடந்திருக்கும். . . கற்பனையை உங்களுக்கே விட்டுவிடுகிறேன்.
மாவோயிஸ்டுகளில் சண்டை நிறுத்தம் நீடிக்குமா?
யாருடன் தான் இந்த அரசு இறுதிவரை சண்டை செய்து வெற்றி பெற்றுள்ளது.ஆண்மையற்ற அரசு,பலவீனமான எதிர்க்கட்சிகளால் பலவானாகத் தெரிகிறது.
விஸ்வநாத் ஆனந்திற்கு டாக்டர் பட்டம் மறுக்கப்பட்டுள்ளதே?
அப்துல் கலாமிற்கு ஏன் மீண்டும் ஜனாதிபதி வாய்ப்பு மறுக்கப்பட்டது, அமிதாப் பச்சன் அரசுவிழாவில் கலந்து கொண்டதை காங்கிரஸ் ஏன் எதிர்த்தது அதே காரணம் தான் இதற்கும்.
(ஒரு முறை ஒரு செஸ் போட்டியில் விஸ்வநாத் ஆனந்த்,பா.ஜ.முதல்வர் நரேந்திர மோடியுடன் செஸ் விளையாண்டிருக்கிறார்).காங்கிரஸின் துக்கிரித்தனத்திற்கு அளவேயில்லை;மன்மோகன்,கபில்சிபில் என இந்த ஆண்மையாளர்களுக்குத் தேவை இத்தாலி சோனியாவின் அருள் மட்டுமே!மஹா கேவலம்.
விக்கிலீக்ஸ் என்ற இணையதளம் அமெரிக்க ராணுவம் பற்றி வெளியிட்டத் தகவல்களைப் படித்தீரா?
விக்கிலீக்ஸின் செய்திக்கசிவு கூட நல்லதுதான் செய்துள்ளது.ஆனாலும் அமெரிக்க இந்திய ஆட்சியாளர்களின் கண்களை இது திறந்துவிடாது.அவரவர்களுக்கு அவரவர் கணக்கு.குறைந்த பட்சம் அமெரிக்கக் கணக்கில் தேசபக்தியாவது இருக்கிறது.நமது இந்தியக் கணக்கில் ஓட்டு வங்கி அரசியல் மட்டுமே பிரதானம்.
தாலிபான்களை ஒழிக்க ஆண்டுக்கு 5000 கோடியை அமெரிக்காவிடமிருந்து பாகிஸ்தான் பெற்றுவருகிறது.இதில் பெரும்பகுதியை இந்தியாவிற்கு எதிராகப் பயன்படுத்துகிறது என்ற செய்தி பற்றி. . .
தாலிபான்களை விட இந்திய காஃபிர்கள் முதலில் ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என இஸ்லாமிய பாகிஸ்தான் கருதுகிறது.பாகிஸ்தானின் நோக்கம் புரிந்தும் மைனாரிட்டி அரசியல் புரியும் நமது காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அது பற்றிய உண்மையைக் கூட பொதுமக்களிடம் சொல்லத்தயங்குகிறார்கள்.இதுதான் மகா கொடுமை.
வறுமை இல்லாத் தமிழகமே என் லட்சியம் என்கிறரே கருணாநிதி.என்ன திடீர் ஞானதோயம்?
தமிழகம் அவரது குடும்பம்,அவரது குடும்பம் வாழ்ந்தால் தமிழகம் வாழும் என்பதுதான் அவரது கூற்றின் பொருள் என அறியவும்.
ப.சிதம்பரத்தின் ‘காவி பயங்கரவாதம்’ வார்த்தைப் பிரயோகம் பற்றி?
தான் மத்திய வர்த்தக ராஜாங்க அமைச்சராக இருந்தபோது உங்களை அனுப்பியது தவறு.மீண்டும் வர்த்தகம் செய்ய வாருங்கள் என 1997இல் வெள்ளையரை வருந்தி அழைத்தார்.கடந்த முறை நிதி அமைச்சராக இருந்த போது பாரதத்தின் பழம் பெருமையை பேசுவோரை தடைசெய்ய வேண்டும்; தண்டிக்க வேண்டும் என்றார்.
இவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.எனவேதான் நரசிம்மராவ் இவரை நெருங்க விடவில்லை;சோனியாவிற்கு நெருக்கமாகிவிட்டார்.பிறகென்ன தேசியப் பெருமைகளை குறைத்துப்பேசித்தானே ஆக வேண்டும்.சமீபத்தில் சிபிஐயின் துஷ்பிரயோகத்தை எதிர்த்து பக்கம் பக்கமாக எழுதிய இவர் நண்பர் கூட அதற்கு இவரை குறை கூறவில்லை.யாருக்கும் வெட்கமில்லை.
பலாத்காரம்,கற்பழிப்பு,தகாத பாலியல் உறவுகள் இவைதான் நக்சல்களின் வாடிக்கையாகிவிட்டது என சரணடைந்த சோபா மண்டி என்னும் நக்சல் இயக்க பெண் தீவிரவாதி காவல்துறையிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறாரே?
இலங்கையிலும் காஷ்மீரிலும் இந்திய ராணுவத்தை குற்றம் சாட்ட நக்சல் இயக்கத்தவர் இந்த குற்றச்சாட்டைத் தான் முன்வைத்தனர்.இப்போதுதான் தெரிகிறது அவர்கள் எதைச் செய்கிறார்களோ,அதை இந்திய ராணுவத்தின் மீது பழியாக சுமத்தியிருக்கிறார்கள் என்று.
(நடைமுறை வாழ்க்கையில்,பிராடுகள்,ஒழுக்கங்கெட்டவர்கள் இதே மாதிரிதான் நேர்மையாகவும்,அப்பாவியாகவும் வாழ்பவர்கள் மீது பழி சுமத்திவருகின்றனர்.உலகமும் இந்தப் பொய்யுரையை நம்புகிறது:ஆன்மீகக்கடலின் கருத்து)
No comments:
Post a Comment