Friday, September 3, 2010

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனப் படை: சீன அரசிடம் இந்தியத் தூதர் கவலை தெரிவித்தார் :நன்றி தமிழ் வெப்துனியா









பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் கில்ஜித் - பால்திஸ்தான் பகுதிகளில் 11,000 சீனப் படைகள் நிறுத்தப்பட்டிருப்பதற்கு இந்தியா கவலை தெரிவித்துள்ளது.






சீனத்திற்கான இந்தியத் தூதர் எஸ்.ஜெய்சங்கர், சீன அயலுறவுத் துணை அமைச்சர் ஜாங் ஜீஜூனை பீஜிங்கில் சந்தித்து இந்தியாவின் கவலையை தெரிவித்ததாக இந்தியத் தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது.






கில்ஜித் - பால்திஸ்தான் பகுதியில் தங்களுடைய படைகள் ஏதுமில்லை என்று சீனா நேற்று மறுப்பு வெளியிட்டதற்குப் பிறகு இந்தியத் தூதர் சீன அயலுறவுத் துணை அமைச்சரை சந்தித்து கவலை வெளியிட்டிருப்பது, சீனத்தின் மறுப்பை இந்தியா ஏற்கவில்லை என்பதையே காட்டுகிறது.






சீன அயலுறவு அமைச்சரை சந்தித்தப் பிறகு டெல்லிக்கு வந்த தூதர் ஜெய்சங்கர், தன்னுடைய சந்திப்பு குறித்து பாதுக்காப்பிற்கான அமைச்சரவைக் குழுவிடம் விளக்கியுள்ளார். இதன் பிறகு அவர் நேற்று இரவே பீஜிங் திரும்பியுள்ளார்.

No comments:

Post a Comment