Monday, August 16, 2010

திருமணம் செய்யவேண்டும் என்று முடிவுஎடுத்ததும் பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?

பதிலளிப்பவர்:
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்

பிள்ளைகளின் கிரக அமைப்பு எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். இவர்களுக்கு காதல் திருமணமா, பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கப்படும் திருமணமா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.பிள்ளையின் ஜாதகத்தில் சுக்கிரன், புதன் வலுவாக இருந்தால் அவர் யாரை அழைத்து வருகிறாரோ அவர்களுக்கு அட்சதை போட்டுவிடுவது நல்லது.ஜோதிடத்தில் நிறைய உட்கூறுகள் உள்ளன. வேறு ஜாதிப் பெண்ணை மணம் முடிப்பார், வயதில் மூத்தவர் என எத்தனையோ கூறப்பட்டுள்ளது. 7ஆம் இடத்தில் என்ன கிரகம் வலுவாக இருக்கிறதோ அதற்கு ஏற்றபடியான மணப்பெண்தான் அவருக்கு அமையும். அதோடு பூர்வ புண்ணிய ஸ்தானம் எப்படி இருக்கு என்பதையும் பார்க்க வேண்டும். பூர்வ புண்ணிய ஸ்தானம் நன்றாக இருந்தால் தனது இனத்திலேயே பெண் கிடைக்க வாய்ப்பு உள்ளது.பூர்வ புண்ணிய ஸ்தானம் கெட்டுப் போய், ஏழாம் இடமும் கெட்டுப் போயிருந்தால் புது உறவு, தூரத்து உறவு, வேறு மதத்தில் முடியக் கூடிய வாய்ப்பு உள்ளது. அடுத்து என்ன தசா புக்தி நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும். குரு பலன் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். அது மிகவும் முக்கியமானது கிடையாது. நல்ல தசாபுக்தி நடந்தால் குரு பலன் இல்லாமல் கூட திருமணம் நடக்கும். திருமணம் செய்யலாம்.ஏழரை சனி, அஷ்டமத்து சனி நடக்கும் போது திருமணத்தை தள்ளிப்போடலாம். அவசரமாக முடிக்காமல் நிதானமாக செய்யலாம்.ஏழாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருக்கும் போது, ஏழாம் இடத்தில் பாவ கிரகங்களின் தசா புக்தி நடந்தால் திருமணத்தை தள்ளிப்போடுவது நல்லது. அப்படி இல்லை என்றால் நிச்சயதார்த்தத்திற்கும், திருமணத்திற்கும் அதிக இடைவெளி விடாமல் திருமணத்தை முடிப்பது நல்லது.

No comments:

Post a Comment