Wednesday, August 11, 2010

இந்திய மக்கள்தொகையில் ஏழைகள் 55%


இந்திய மக்கள்தொகையில் ஏழைகளின் எண்ணிக்கை 55%

நமது மத்திய அரசு இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை வெறும் 29% தான் என அடிக்கடி கூறிவந்தது.ஆனால்,ஐ.நா.சபையின் திருத்தப்பட்ட அடிப்படையின் கீழ் கணக்கீடு செய்யும்போது நம் நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை 55% ஆக,அதாவது 64 1/2 கோடி பேர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது.

ஏழைகள் இருக்கும் மாநிலங்களில் பீகார் முதலிடத்திலும்,உத்திரபிரதேசம் இரண்டாமிடத்திலும்,கேரளா கடைசி இடத்திலும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.கேரளாவில் ஏழைகளின் எண்ணிக்கை 20% மட்டுமே.
வசதியான மாநிலங்களான குஜராத்,ஹரியானா,கர்நாடகாவில் 40% ஏழைகள் இருக்கின்றனர்.
இவ்வாறு ஏழைகள் இருக்கும்போது,கடந்த வருடத்தில் மட்டும் 5 கோடிக்கும் மேல் மூலதன சொத்துக்கள் உள்ள பணக்காரர்களின் எண்ணிக்கை 80,000 லிருந்து 1,20,000 பேர்களாக உயர்ந்துள்ளது என்பதையும்,அதே காலகட்டத்தில் 3.2 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் சென்றுள்ளனர் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் ஏழை பணக்காரர்கள் வித்தியாசம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதையும் நாம் உணரலாம்.

1 comment:

  1. இவ் விஷயத்தில் அரசாங்கம் என்றைக்குமே தவறான புள்ளி விவரங்களை காட்டும் ஏன் என்றால் இந்த புள்ளி விவரங்களையே இவர்களின் சாதனை என்று முரசு கொட்டுவர் இவர்களால் நமது தேசம் மேலும் கிழே போகிறது. இவர்களுக்கு ஒட்டு வங்கி மட்டுமே முக்கியம். நல்ல பதிவு

    ReplyDelete