Tuesday, August 17, 2010

சுயச்சார்பு என்றால் என்ன?

சுயச்சார்பு என்றால் என்ன?

                  யாரையும் எப்போதும் எதற்காகவும் சார்ந்திருக்காமல் தன்னை மட்டும் சார்ந்து வாழும் வாழ்க்கைக்கு சுயச்சார்பு என்று பெயர். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்? என்பது ஒரு தமிழ்க்கவிஞரின் பாடல்வரிகள்.

                 ஆனால், நடைமுறையில் அப்படி வாழ்வது மிகவும் கடினம்தான். சிறுவயது முதலே நாம் கஷ்டங்களுக்கும் அவமானங்களுக்கும் நம்மை பழக்கப்படுத்திவிட்டால்,நடுவயதான 30 ஐத்தாண்டும் போது யாரிடமும் கடன் வாங்காமலும்,கைமாற்று வாங்காமலும் நிம்மதியாக வாழ்ந்துவிடலாம்.

               எனக்குத் தெரிந்து, உலக அரசியலில் சுயச்சார்புள்ள நாடுஎது எனக் கேட்டால்,முதலிடம் வகிப்பது இஸ்ரேல்தான்! இரண்டாமிடம் வகிப்பது ஜப்பானைச் சொல்லலாம்.

               இஸ்ரேலின் வீர உதயம் என்ற பெயரில் சுமார் 100 பக்கங்களுக்குள் புத்தகம் ஒன்று வெளிவந்துள்ளது.அதை வாசித்தால்,இப்படியெல்லாமா ஒரு நாட்டுக்கு சிரமங்கள் வரும்? அப்படி வந்தாலும் அதை கடந்த 60 வருடங்களாக சமாளிக்கும் இஸ்ரேலின் சுயச்சார்புக்கு நான் தலைவணங்குகிறேன்.

            இஸ்ரேலின் வீர உதயத்தை இந்த வலைப்பூவுக்குள் அடக்குவது கடினம். (அதற்கான மென்பொருள் நகாசுவேலை எனக்குத் தெரியாது).

             நமது ஆன்மீகக்கடலில் 2008 2009 ஆம் வலைப்பூப் பதிவுகளை வாசித்தால் ,நாம் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய தமிழ்ப்புத்தகங்களின் பட்டியலை கொடுத்திருக்கிறேன். அவற்றை அவசியம் வாங்கிப் படிக்கவும்.அவற்றை வாங்கிப்படிக்கவே இரண்டு ஆண்டுகளாகும். வெறுமனே படிப்பதல்ல;வாசித்து அவற்றின் கருத்துக்களை உள்வாங்குவது!

            அதன் பிறகுதான், சேமிப்பும், தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்திக்கொண்டே இருப்பதும்,கடுமையாக உழைப்பதும் சுயச்சார்பினை வளர்க்கும் காரணிகள் என்பது புலனாகும்
.

No comments:

Post a Comment