சுவாமி விவேகானந்தரிடம் தனது நீண்ட நாளைய சந்தேகத்திற்கு தீர்வு காணும் பொருட்டு வந்திருந்தான் அந்த இளைஞன். அவனது எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட விவேகானந்தர், "என்னப்பா விஷயம்..?'' என்று கேட்டார்.
"சுவாமி! ஒரு குழந்தையை பெற்றெடுப்பதில் கணவன்-மனைவி இருவருக்குமே சம பங்கு இருக்கிறது. ஆனாலும், பெண்தான் சிறந்த வள் என்கிறார்கள், அவளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அது ஏன்?'' என்று கேட்டான் அந்த இளைஞன்.
இவனிடம் உபதேசம் சொன்னால் எதுவும் தலையில் ஏறாது என்று எண்ணிய விவேகானந்தர், அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து வருமாறு அவனிடம் கூறினார். அவனும் அதை எடுத்து வந்தான். எப்படிம் 2 கிலோ எடைக்கு மேல் இருக்கும் அந்த கல்.
"சுவாமி! இந்த கல்லை நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டான் அந்த இளைஞன். அதற்கு விவேகானந்தர், "அந்த கல்லை உன் மடியில் கட்டிக்கொண்டு 5 மணி நேரம் சும்மா இருந்து விட்டு வா. அது போதும்" என்றார்.
அந்த இளைஞனும் தனது மடியில், ஒரு தாய் வயிற்றில் குழந்தையை சுமப்பதுபோல் அந்த கல்லை கட்டிக்கொண்டான். சிறிதுநேரம்தான் நின்றிருப்பான். அவனுக்கு என்னமோபோல் இருந்தது. உடனே அருகில் இருந்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான். ஆனாலும் அவனால் இருக்க முடியவில்லை.
2 மணி நேரம்தான் ஓடியிருந்தது. அவனுக்கு என்னவோ 2 நாளாக அவஸ்தை பட்டதுபோல் இருந்தது. வேறு வழியின்றி விவேகானந்தரிடம் ஓடினான்.
"சுவாமி! இதற்குமேல் என்னால் கல்லை கட்டிக்கொண்டு இருக்க முடியாது...'' என்று சொல்லி மேல் முச்சு கீழ் முச்சு வாங்கினான்.
அப்போது விவேகானந்தர் சொன்னார்...
"உன்னால் 2 கிலோ எடை கொண்ட கல்லை 4 மணி நேரம்கூட சுமக்க முடியவில்லை. ஆனால், ஒரு தாய் பத்து மாதம் சுமந்து ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறாளே... அதற்காக அவள் உன்னைபோல் அலுத்துக்கொள்ளவில்லையே... அதுதான் தாய். அதனால்தான் அவளை நாம் பாராட்டுகிறோம், போற்றுகிறோம்...'' என்று விளக்கம் கொடுத்தார் விவேகானந்தர்.
ஆனாலும், நம்முடைய பேச்சிலும் எழுத்திலும் பெண்மைக்கு கொடுக்கபடும் முக்கியத் துவம் - அங்கீகாரம், நடைமுறை வாழ்க்கையில் அவர்களுக்கு அளிக்கப்படாதது வேதனைக்குரிய ஒன்றே.
பெண் என்றால் கணவனுக்கு அடங்கித்தான் போக வேண்டும், வீட்டு பெரியவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை மாத்திரமே செய்ய வேண்டும், யாரையும் எதிர்த்து ஒரு சொல்கூட பேசக்கூடாது... என்றெல்லாம் அவளுக்கு கட்டுபாடுகள் விதிக்க படுகின்றன.
இப்படி கட்டுபாடுகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அன்பு, பாசம், நேசம் என்ற பெண்மைக்கே உரிய குணங்கள் மட்டும் எந்த சூழ்நிலையிலும் அவளிடம் மாறாமல் இருந்து அவளது தனித்துவத்தை விளக்குகிறது.
உபதேசம், அறிவுரை என்று வந்தாலும் கூட, மகான்களுக்கே உரிய பக்குவத்தோடு அறிவுரை கூறக்கூடியவள் பெண் மாத்திரமே!
ஒருமுறை புத்தரின் சீடன் ஒருவன் வறியவன் ஒருவனுக்கு உபதேசம் செய்தான். ஆனால், அவன் அதை கேட்கவில்லை. உடனே, அந்த சீடனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.
நேராக புத்தரிடம் சென்றான். "குருவே! தாங்கள் உபதேசம் சொன்னால் மக்கள் உடனே ஏற்றுக்கொள்கிறார்கள். நான் ஒரு ஏழ்மையானவனிடம் உபதேசம் சொன்னேன். ஆனால், அவன் அதை கேட்கவில்லை; அதன்படி நடந்துகொள்ளவும் இல்லை...'' என்று கூறி குறைபட்டுக் கொண்டான்.
அதற்கு புத்தர் பதில் ஏதும் சொல்லவில்லை. அந்த ஏழ்மையானவனை தன்னிடம் அழைத்து வருமாறு மட்டும் சீடனிடம் கூறினார்.
மறுநாள் அந்த ஏழ்மையானவனோடு புத்தரிடம் வந்து சேர்ந்தான் சீடன். ஏழ்மை யானவனை மேலும் கீழும் பார்த்தார் புத்தர். பசிக்கொடுமையால் எலும்பும் தோலுமாக இருந்தான் அந்த ஏழ்மையானவன். அவனுக்கு சுவை மிகுந்த உணவை கொடுத்து உட்கொள்ளச் செய்த புத்தர், இனி வீட்டுக்குச் செல் என்றார்.
புத்தரின் சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை. உபதேசம் செய்வார் என்று பார்த்தால், சாப்பாடு போட்டு அனுப்புகிறாரே என்று எணினான்.
அப்போது புத்தர் சொன்னார்...
"இப்போது அவனுக்குத் தேவை உபதேசம் அல்ல. அவனது பசியை போக்க தேவையான உணவுதான். அந்த உணவுதான் இப்போது அவனுக்கு உபதேசம்'' என்றார்.
புத்தர் ஒரு ஆணாக இருந்தாலும் கூட, ஒரு தாய்மைக்கே உரிய பொறுமையான பக்குவத்தோடுதான் உபதேசங்கள் செய்தார். அதனால்தான் அவரது அறிவுரைகளை மக்கள் கேட்டார்கள். அதன்வழி நடந்தார்கள்.
ஆனால், ஆண்களில் பெரும்பாலானோர், பசிக்கு வருந்தியவனிடம் உபதேசம் செய்து கோபப்பட்ட சீடனாகவே இருக்கிறார்கள்.
மகான்களுக்கே உரிய பக்குவத்தோடு நடந்து கொள்வதாலும் பெண்களை நாம் போற்றுகிறோம். இதில் விதிவிலக்காக சில பெண்களும் உண்டு. அவர்களை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
இன்றைய கணவன்-மனைவியரில் பலரது பிரச்சினையே, ஒருவர் கருத்தை மற்றவர் ஏற்றுக்கொள்ளாத தன்மைதான். எதையும் பொறுமையாக கடைபிடித்தால் பிரச்சினை தானாகவே விலகிபோகும்.
இந்த விஷயத்தில் ஒரு ஆண், பெண்ணிடம் இருந்து எப்படி வேறுபடுகிறான்? குடும்பத்திற்குள் பிரச்சினை என்றால் சட்டென்று பதற்றபடக்கூடியவன் ஆணாகிய கணவன் தான். அந்த பதற்றத்தில் அவன் பிரச்சினைக்குரிய தீர்வையே மறந்து போகிறான். ஆனால், மனைவிதான் பிரச்சினைக்கான தீர்வை யோசித்துச் சொல்கிறாள். (டி.வி. சீரியல்களில் ஒரு குடும்பத்தை எப்படி இரண்டாக உடைக்கலாம் என்று பெண்கள் போடும் திட்டங்களை இதில் சேர்க்க வேண்டாம்!). ஒரு ஆண், தனது பலத்தால், அதிகாரத்தால் எதையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து விடலாம் என்று கணக்கு போடுகிறான். இவர்கள் போடுவது தப்புக் கணக்கு. ஆனால், பெண்கள் போடும் மனக்கணக்குதான் எபோதும் ஜெயிக்கிறது. விட்டுக்கொடுத்து போகத் தெரிந்த பெண்கள் இந்த கணக்கில் எப்போதுமே நுற்றுக்கு நுறு வாங்கி விடுகிறார்கள். எப்போதுமே ஒரு ஆணிடம் `தான்' என்ற அகங்காரம் இருக்கிறது. நடைமுறை சூழ் நிலைகளால் அந்த அகங்காரம் சிறு வயதிலேயே அவனது முளையில் பதிவு செய்ய பட்டு விடுகிறது. அதனால், மனைவிக்கு அவன் உத்தரவு இடுபவனாகவே செயல்படு கிறான். மனைவிதான் அவனது உத்தரவை செயல்படுத்த வேடும் என்கிற எழுத படாத சட்டத்தால், அவள் பல அனுபவங்களை பெற்று, மன தளவில் பக்குவம் அடைந்து விடுகிறாள். தியேட்டருக்குச் சென்று படம் பார்க்க வேண்டும் என்றால் கூட, ஆண் தனக்கு பிடித்த சினிமாவைக் காணவே மனைவியையும், குடும்பத்தினரையும் அழைத்துச் செல்கிறான். இந்த விஷயத்தில் மனைவியின் கருத்தைக் கேட்பது தனக்கு அவமானம் என்று கருதுகிறான் அவன். வீட்டில் சமையல் என்றாலும், தனக்கு பிடித்த உணவைத்தான் பெண் சமைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் - தேவைபட்டால் கட்டாயபடுத்தும் ஆண், தனது சேவையை மறுபேச்சு கேட்காமல் செய்யும் பெண்ணின் எதிர்பார்பை கேட்டு தெரிந்து கொள்ளவே மறந்துபோய் விடுகிறான். வரன் பார்க்கும் விஷயத்தில் கூட ஆணின் கையே ஓங்கி இருக்கிறது. தனக்கு இப்படிபட்ட பெண்தான் வேடும் என்று நினைத்ததை சாதித்துக் கொள்கிறான் அவன். ஆனால், பெண்தான் பாவம். தனது கருத்தை வெளிபடுத்த முடியாமல் மனதிற்குள் புழுங்கித் தவிக்கும் அவளுக்கு எதிர்பாரப்புக்கு மாறான கணவனே பெரும்பாலும் வந்து சேர்கிறான். ஆனாலும், பொறுத்துக்கொண்டு அவனோடு குடும்பம் நடத்துகிறாள். ஆசைகளை மனதிற்குள்ளேயே புதைத்து விடுகிறாள்.
- இப்படி, தனக்காக அன்றி பிறருக்காக தனது வாழ்க்கையையே அர்பணித்துக் கொள்ளும் பெண்ணுக்குள் பாசம் மட்டும் இல்லையேல், இவை எல்லாம் சாத்தியபடாமல் போய் இருக்கும் என்பது மட்டும் உண்மை!
No comments:
Post a Comment