சில முறையற்ற உறவுகளுக்குள் மறைந்திருக்கும் முற்பிறவி ரகசியங்கள்
ஒவ்வொரு மனிதனின் வலது மூளைக்குள்ளும் முந்தைய மூன்று பிறவிகள் பதிவாகியிருக்கும்.இந்த மூன்றுபிறவிகளில் சந்தித்த காம உறவுகள்,எதிரிகள்,பாச உறவுகளை இந்தப்பிறவியில் சந்தித்தால் உரிய உறவுகள் மீண்டும் துளிர்க்கும்.இப்படி துளிர்ப்பதை உரிய மனிதன்/மனுஷியே உணரமாட்டார்.
உதாரணமாக,மூன்றுபிறவிகளுக்குள் கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள்,கணவன் மனைவி போல வாழ்ந்தவர்கள் இப்பிறவியில் எங்கோ பிறந்திருப்பர்.முந்தைய பிறவிகளில் ஆணாகப்பிறந்திருப்பவர்கள் இந்தப்பிறவியில் பெண்ணாகப்பிறந்திருக்கலாம்; இதேநிலைதான் முற்பிறவிப்பெண்ணுக்கும்.
அவர்கள் எப்போதாவது ஒருமுறை சந்தித்தால் போதும்; மீண்டும் காம அனுபவம் அவர்களுக்குள் தலைதூக்கும்.அப்புறமென்ன, இந்தப்பிறவியில் மானம் அவமானத்திற்கு அஞ்சாமல் அவர்கள் மனம் போனபடி வாழ்ந்துகொள்ளுவார்கள்.
எனது 22 வருட ஜோதிட அனுபவத்தில் இதுபோன்ற முறையற்ற உறவுகளைப் பார்த்திருக்கிறேன்.பார்த்தும் வருகிறேன்.
முற்பிறவி மனைவி இப்பிறவியில் பிறக்கிறாள்.அவள் பிறந்த 19 வருடம் கழித்து,அவளது கணவன் பிறக்கிறான்.கணவன் திருமணவயதையடைந்ததும், அவளது முற்பிறவிமனைவி தனது இப்பிறவி மகளை அவனுக்கு திருமணம் செய்விக்கிறாள்.மாமியார் மருமகன் உறவு, கணவன் மனைவியாகிறது.
இதேபோல, மனைவி பிறந்து 27 வருடம் கழித்து, கணவன் பிறக்கிறான்.47 வயதில் இருவரும் சந்திக்கின்றனர்.அப்போது கணவனுக்கு 20 வயதுதான் ஆகிறது.கணவன் தனது பெற்றோரைப் பிரிந்து,இந்த 47 வயதுக்காரியுடன் அவளது கணவன் சம்மதத்தோடு சேர்ந்து வாழ்கிறான்.தனது முற்பிறவிக்கணவனை ஒரு குழந்தையைப்போல கவனித்துக்கொள்ளுகிறாள்.ஒரு முன்னுதாரணமான மனைவியாகத் திகழுகிறாள்.வெளியுலகிற்கு தனது முற்பிறவி மனைவியை சித்தி என்றே அழைக்கிறான்.உலகம் நம்புகிறது.47 வயது பெண்,20 வயது ஆண் என்பதால்.வீடு சொந்தமாக இருந்தும், வாடகை வீட்டுக்கு குடிபோகின்றனர்.பக்கத்துவீடுகளில் இந்த முறையற்ற உறவைக் கண்டுபிடித்ததும், வேறு ஏரியாவுக்கே மாறிப்போகின்றனர்.
முற்பிறவித்தொடர்புகள் என்பதற்கு ஆதாரமே, ‘நீ தான் ஏழேழு ஜன்மத்துக்கும் எனக்கு பொண்டாட்டியா வரணும்’
‘உன்னை விடமாட்டேண்டி! உன்னை எத்தனை ஜன்மம் எடுத்தாலும் நீதாண்டி எனக்கு எல்லாம்’ என்ற டயலாக்குகளை இவர்கள் அடிக்கடிப் பேசிக்கொள்ளுவார்கள்.
இதுபோல.இதுபோல, சில உருப்படாத ஜன்மங்கள் நம்மைச் சுற்றி நிச்சயம் இருக்கிறார்கள்.அவர்களைத் திருத்த முடியாது.நாம் அவர்களிடமிருந்து ஒதுங்கியிருப்போம்.
No comments:
Post a Comment