இந்திய பாதுகாப்பு தகவல்கள் :சீனர்கள் திருடியதாக தகவல்
பீஜிங் : 'சீன நாட்டைச் சேர்ந்த சிலர், இந்திய பாதுகாப்பு துறை இணையதளம் மற்றும் தலாய் லாமாவின் இ-மெயில் தகவல்கள் ஆகியவற்றை, திருடி உள்ளனர்' என, கனடா நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டொரான்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியதாவது: சீனாவிலுள்ள சில குழுவினர், ட்விட்டர், கூகுள் உட்பட சில பிரபலமான ஆன்-லைன் சேவைகளை பயன்படுத்தி, இந்தியாவின் பாதுகாப்புத் துறை தகவல்கள் மற்றும் தலாய் லாமாவின் இ-மெயில் தகவல்கள் ஆகியவற்றை திருடி உள்ளனர். இது,'ஷேடோ நெட்வொர்க்' எனப்படுகிறது. இந்த 'ஷேடோ நெட்வொர்க்கில்' சீன மக்கள் குடியரசு கட்சியோ அல்லது பிற அரசுக்கோ தொடர்புள்ளது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், இத்தகைய நெட்வொர்க்கை தடுக்க, சீன மக்கள் குடியரசு கட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது தான் கேள்வி.இந்த 'ஷேடோ நெட்வொர்க்', சீனாவின் நிழல் உலக தாதாக்களுடன் தொடர்புடைய தனிநபர்கள் மூலம் இயக்கப்பட்டு, அவர்கள் மூலம் சீன அரசின் கிளைகளுக்கு, தகவல்கள் அனுப்ப வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜியாங் யூ கூறுகையில்,'எந்த ஆதாரத்தின் அடிப்படையில், இவர்கள் இவ்வாறு குற்றம் சாட்டுகின்றனர் என்பது தெரியவில்லை. இவ்விவகாரம் குறித்து ஆதாரங்களுடன் நிரூபித்தால், சீன அரசு நடவடிக்கை எடுக்கும். எங்கள் கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது. இணையதளங்களிலிருந்து தகவல்களை திருடுவது உட்பட அனைத்து வகையான குற்றங்களுக்கும், எங்கள் அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது' என்றார்.இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைமைச் செயலகத்திலிருந்து, திருடப்பட்ட தகவல்களில், திபெத், வங்க தேசம் மற்றும் மியான்மர் ஆகியவற்றின் எல்லையில் அமைந்துள்ள, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலைகள் குறித்த தகவல்கள் இருப்பதாக, அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.இவ்விவகாரம் குறித்து, சம்பந்தப்பட்ட துறையினர் கவனித்து வருவதாக, இந்திய பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் சிதான்ஷுகர் தெரிவித்தார்.
ஆதாரத்துடன் நிரூபித்தால் என சீனா கூறியுள்ளது.நாம் ஒருவேளை ஆதாரத்தை சீனாவிடம் தந்தால்,அந்த ஆதாரத்தை மதிப்பிட்டு, சீனா தனது திருட்டுத்தனத்தை இன்னும் (தடயமில்லாமல் திருட) நவீனப்படுத்தும்.எனவே,நாம் செய்ய வேண்டியது நாம் சீனாவின் ராணுவத்தகவல்களைத் திருடுவதுதான்.
No comments:
Post a Comment