Thursday, April 1, 2010

இந்துக்குடும்பங்கள் எப்படிச் சிதைகின்றன? பாகம் 4

இந்துக்குடும்பங்கள் எப்படி சிதைகின்றன? பாகம் 4

ஒரு தம்பதியினருக்கு ஒரே ஒரு பெண்குழந்தை.எப்படியோ அந்த மகளை பிளஸ் டூ வரை படிக்க வைத்துவிட்டனர்.அவள் பிளஸ் டூ முடிப்பதற்கும் அந்த மகளின் பெற்றோர் மொடாக்குடியர்களாவதற்கும் சரியாக நேரம் அமைந்துவிட்டது.

தனது அருமை மகளுக்கு ,அவளது அம்மாவும் அப்பாவும் ஒருசேர உத்தரவிட்டனர்.
‘இன்று முதல் தினமும் இரவு 9 மணிக்குள் ஆளுக்கு ஒரு புல் பீர் வாங்கித்தரணும்.அதற்காக நீ எந்த வேலைக்குப் போனாலும் எங்களுக்குக் கவலையில்லை’

அந்த பருவப்பெண்ணின் நிலை என்னவாகியிருக்கும்?
ஒருநாள், இரவு மணி 10.30க்கு இரண்டு புல் பீர் பாட்டிலை வாங்கி வந்ததால்,அந்தப்பெண்ணின் அப்பா அவளை மிதிக்க,அவளோ, தனது ஆண் நண்பர்களுக்கு செல்போனில் தகவல் தர, ஆறுபேர்கள் வந்து அந்தப்பெண்ணின் அப்பாவை ஹாக்கி மட்டையால் பொரட்டி எடுத்துவிட்டனர்.

சில வருடங்களில் அந்தப்பெண்,நள்ளிரவு இரண்டு மணியளவில் பஸ் நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் தனது வாடகை வீட்டுக்கு நடந்தே,தனியாக வந்தாள்.போதையோடு! அதுவும் எப்படித்தெரியுமா? நிர்வாணமாக!

தமிழ்நாட்டில் ஒரு வளர்ந்துவரும் ஊரில் இந்த சம்பவம் கி.பி.2007 ஆம் ஆண்டில் நடந்தது.

என்னத்தைச் சொல்ல. . . குடிப்பதை அரசாங்கமே ஊக்கப்படுத்துகிறது.கூட்டுக்குடும்பம் 1970களில் சிதைந்து, தனிக்குடும்பங்களில் சிக்கல்கள் 1980களில் வந்து, தனித்தனியாக கணவன்,மனைவி,குழந்தை வாழும் நிலை 1990களில் துவங்கி, இன்று 2010 !


நம்மில் நாம்,நம் குடும்பத்தோடு அனைவரும் ஒன்றாக தினமும் ஒருமுறையாகவாவது சாப்பிடுகிறோமா?

தினமும் வீட்டிற்கு வந்ததும்,நமது குழந்தையிடம், இன்று பள்ளியில் என்ன நடந்தது? என 15 நிமிடமாவது கேட்கிறோமா?

வாரம் ஒரு நாள் குடும்பத்தோடு,செல் போன்களை தூக்கி எறிந்துவிட்டு, எங்காவது செல்கிறோமா?(சினிமாவைத் தவிர்த்து)

உலக மயமாக்கல் நமது நாட்டுக்குள் 1995 ஜனவரி 1 ஆம் நாள் நுழைந்தது.அதன் விளைவு இது.

No comments:

Post a Comment