Monday, April 5, 2010

நிஜமாகிவிட்ட ஜோதிடக்கணிப்பு

Astrological Predictions of the Major Countries of this World- The Next 20 Years என்ற ஜோதிடக்கணிப்புப் புத்தகத்தில் கி.பி.1990 முதல் கி.பி.2010 வரை இந்தியாவில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை துல்லியமாகக் கணித்துள்ளார் வடபாரதத்தைச் சேர்ந்த ஒரு ஜோதிடர்.இந்தப்புத்தகத்திற்கு சர்வதேச நீதிமன்றத்தில் முறையான அங்கீகாரம் வாங்கியிருக்கிறார்.இந்தப்புத்தகத்தில் கி.பி.2010 ஆகும்போது இந்தியாவில் விபச்சாரம் ஒரு சமூக அங்கமாகிவிடும் என கணித்திருந்தார்.


அதற்கு ஆதாரமாக ஜனவரி,13,2010 ஜீனியர் விகடன் வெளியீட்டில் வெளிவந்திருக்கும் ஒரு நிஜப்பேட்டியும் கட்டுரையும் அமைந்திருக்கிறது.
வாடகை மனைவி என்ற பெயரில் வெளிவந்த அந்தக்கட்டுரை தொடர்ந்து இரண்டு வாரங்கள் வெளிவந்தது.திருச்சி மாநகரில் 30 முதல் 40 வயது வரையிலான இல்லத்தரசிகள் மாதாந்திர மனைவியாக தம்மை ரூ.20,000/- முதல் ரூ.50,000/-வரை தன்னையே வாடகைக்கு விடுகின்றனர்.தமது குடும்பத்தினர் மற்றும் கணவனின் சம்மதத்தோடு!


ஒருவனுக்கு ஒருத்தி, காதலும் வீரமும் என்பவை நமது தமிழ் சமுதாயத்தின் அடையாளம் ஆகும்.ஆனால்,விலைவாசி உயரும் அளவிற்கு,சம்பளம் உயருவதில்லை.குழந்தைகளை வளர்க்க வேண்டும்.வீட்டுவாடகை,மளிகை பாக்கி,பால் பாக்கி,கல்விக்கட்டணம் என எல்லா வித அடிப்படைச் செலவுகளுக்கும் கணவன் மனைவி இருவருமே வேலைக்குப்போயும்கூட இரண்டு சம்பளம் குடும்பம் நடத்திட போத வில்லை.(மனைவியின் அலங்காரச்செலவும்,கணவனின் ஊதாரிச்செலவும் இதற்கு முக்கிய காரணங்கள்.ஆனால் அதைநிறுத்திட முடிவதில்லை)
இதில் அரசாங்கமே மதுவிற்பனையை ஊக்குவிக்க எத்தனை குடும்பங்கள்,மதுவால் நாசமாகிக் கொண்டிருக்கின்றன என்பதைப் பற்றி ஆளுவோருக்குக் கவலையில்லை;ஆட்சி நிம்மதியாக ஆண்டால் போதும் என்ற எண்ணம்.


தவிர,சில பல காரணங்களும் விபச்சாரத்தை மலினப்படுத்திவருகின்றன.அவை விபச்சாரத்தை மட்டுமல்ல;எய்ட்ஸையும் மலினப்படுத்தி வருகின்றன.
விரிவாக இதுபற்றி விரைவில் . . .

No comments:

Post a Comment